Friday, February 2, 2007

டவுசர் பாண்டி.. பராக்...பராக்...

நேத்திலிருந்து காதல் மாசம் ஸ்டார்ட் ஆகிருச்சு, ஆனா நமக்கு காதலே இன்னும் வரலை. வந்தாதானே அதெல்லாம் கொண்டாடமுடியும், இவிங்கங்களோட சேர்த்துக்கிட்டு கும்மாளம் அடிக்கலாம். அது எவிங்க தெரியுமா, வருத்தமே படமாட்டோமின்னு சொல்லிப்பிட்டு பிளாக்கர் பிரச்சினைக்காக லபோதிபோன்னு குதிச்சு அம்புட்டு பேத்தையும் அல்லோகலப்படுத்தி ஸ்கூப் நீயுஸ் போடவைச்சு அதை அப்பிடியெல்லாம் இல்லைன்னு சொல்லி அன்னிக்கு அதை நசநசன்னு ஆக்கி அப்பாப்பா.....

சரி விடுங்க மேலே இருக்கிறதலே உங்களுக்கு என்னா புரிஞ்சாலும் பரவாயில்லை. இது ஒரு விஷயத்தை ஈயடிச்சான் காப்பியடிச்சது மாதிரி ஒன்னு பண்ணமின்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. அதை இப்போ நிறைவேத்த போறேன். முன்னாடி ஆனந்தவிகடனிலே பராக் பாண்டின்னு ஒரு பகுதி வருமில்லை. இப்போ என்ன காரணமோ நிப்பாட்டிட்டாங்க. அதை நம்மளை மாதிரி காதல் வராத ஆசாமிகள் புலம்பினமாதிரி பொலம்பவிட்டுற வேண்டியதுதான், ஆனா அவரு இங்கே தன்னோட பேரை பராக் பாண்டியிலிருந்து டவுசர் பாண்டின்னு மாத்திட்டாருப்பே.





ஏண்டா அங்க,இங்கன்னு அலம்பலை கொடுத்து எப்பிடியாவது ஒத்தை சொத்தை பிகரையாவது கரெக்ட் பண்ணி, வாழ்கையிலே நாமல்லும் வாலன்டெஸ் டே கொண்டாலாமின்னு பார்த்தா அதுக்குள்ளே டுலெட் போர்டு பார்த்ததும் ஒடனே அட்வான்ஸே போட்டு கெரயத்தை முடிச்சிரீங்களே.. எங்கேயிருந்துடா மொளைக்கிறீங்க ரீஸிஸ்டர்ஆபிஸ் மண்டையனுகளா?

அவனவன் சோத்துக்கு அல்லாடுறப்போ,இப்போதான் மட்டன் பிரியாணி தின்னுட்டு வந்தேன்னு சொல்லி வெறுப்பேத்துற கணக்கா, இந்த வாலன்டெஸ் டே'க்கு நாங்க அங்க போறோம், இங்க போறோம்மின்னு சொல்லி ஏண்டா வெறுப்பேத்தீருங்க பஞ்சர்வாயனுகளா?

எங்கப்பாரு குடுக்கிற டீக்காசிலே செல்லுக்கு ரீசார்ஜ் பண்ணினா, "மச்சான் ஒரெயெரு கால் பண்ணிட்டு தந்துறேன்"னு சொல்லிட்டு ஒன்னை முக்கா மணி நேரமா "ம்ம், சரி, சொல்லு..ஒகே" னு இத்துப்போன ரீக்கார்ட் செவசெவன்னு இராகம் பாடுறமாதிரி பேசி எல்லா காசையும் ஒப்பேத்திறீங்களே. எந்த புத்து'லேயிருந்துடா புறப்படுறீங்க செத்தபாம்புகளா?

அடேய் என்னோட சக்திக்கு மீறீ இந்த பைக்கை வாங்கி தந்துருகேன்னு அப்பாருக அதை எடுக்கிறோப்போ ஓயாமா சொன்னதக்கூட செவன்னேனு கேட்டு வாங்கிட்டு வந்தா, டேய் அஞ்சு நிமிசத்திலே வந்துறேன்னு சொல்லி வாங்கிட்டு போயி அதுகளே கம்ப்யூட்டர் கிளாஸிலே டராப் பண்ணிட்டு உங்க கத்திரிகாயையும் டெவலப் பண்ணிரீங்கீளே.. வால் மொளைக்காத மாருதிகளா?

37 comments:

  1. ஓசில மொளகா பஜ்ஜியும் டீயும் எவன் தலைலயாவது அரைக்கலாம்னு கேண்டீன் பக்கம் வந்தா அரை கிளாஸ் டீயை ஒன் பை டூ சொல்லி ஒன்றரை மணி நேரமா ஒரே டேபிள்ல கண்ணாலயே பேசறோம்னு கடுப்படுக்கறீங்களே எங்கேர்ந்துடா வந்தீங்க தோசை கல் மண்டையனுங்களா

    ReplyDelete
  2. :)))

    சூப்பர் இராயல்!

    ReplyDelete
  3. அவுட்புட் வரலைனா அவிஞ்சு போய் இருக்கும்போது லேப்ல இருக்கற எக்ஸ்பரிமெண்டை விட்டுட்டு கூட இருக்க ஃபிகர்கிட்ட மொக்கை ஜோக் அடிச்சுட்டு அதுக்கு விழுந்து விழுந்து சிரிச்சு எங்க வயித்தெறிச்சலைக் கிளப்பறீங்களேடா மல்டிமீட்டர் மங்குனிகளா!

    ReplyDelete
  4. காலைல எழுந்து ஒரு டீ அடிக்கலாம்னு டீக்கடைக்கு வந்தா ஃபிகரை கரெக்ட் பண்றேன்னு ஃபுல் மேக்கப்ல வந்து எங்களைக் கொல்றீங்களேடா அநியாய ஆபிசர்களா!!

    ReplyDelete
  5. கப்பி நிலவா, ஜாவா புரவலா பின்னி பெடல் எடுக்கிறே போ :)


    //ஓசில மொளகா பஜ்ஜியும் டீயும் எவன் தலைலயாவது அரைக்கலாம்னு கேண்டீன் பக்கம் வந்தா அரை கிளாஸ் டீயை ஒன் பை டூ சொல்லி ஒன்றரை மணி நேரமா ஒரே டேபிள்ல கண்ணாலயே பேசறோம்னு கடுப்படுக்கறீங்களே எங்கேர்ந்துடா வந்தீங்க தோசை கல் மண்டையனுங்களா //

    சூப்பரப்பு :)

    ReplyDelete
  6. கடைசி வருச பரிட்சையயாவது ஒழுங்கா படிக்கலாம்னு காலேஜ் கேண்டின் பக்கம் போனா, அங்க இருக்குற கட்டச் சுவருல ஒக்காந்து கம்பைண்ட் ஸ்டடின்னு, மொக்க ஜோக்குக்கெல்லாம் மொல்லமாரித் தனமா க்லோஸ்-அப் அழுகைச் சிரிப்பு சிரிச்சிக்கிட்டு இருக்கீங்களடா, பல்லிழிச்சான் பாவிகளா....

    ReplyDelete
  7. கலக்கல் ராயலு அண்ட் கப்பி...

    அசத்திட்டீங்க :)))))

    ReplyDelete
  8. ஏனுங்க்க இத்தனை புகை? ஏதோ இருக்கப்பட்டவுக வறுக்கறாக! நாமதான் வருத்தப்படாதவங்களாச்சே!

    ReplyDelete
  9. //கடைசி வருச பரிட்சையயாவது ஒழுங்கா படிக்கலாம்னு காலேஜ் கேண்டின் பக்கம் போனா, அங்க இருக்குற கட்டச் சுவருல ஒக்காந்து கம்பைண்ட் ஸ்டடின்னு, மொக்க ஜோக்குக்கெல்லாம் மொல்லமாரித் தனமா க்லோஸ்-அப் அழுகைச் சிரிப்பு சிரிச்சிக்கிட்டு இருக்கீங்களடா, பல்லிழிச்சான் பாவிகளா....//

    ஜி,

    ஹி ஹி சூப்பர்...

    உண்மையிலே நல்லா இருக்கு:)

    ReplyDelete
  10. //ஏனுங்க்க இத்தனை புகை? ஏதோ இருக்கப்பட்டவுக வறுக்கறாக! நாமதான் வருத்தப்படாதவங்களாச்சே! //

    ஏலே தம்பி,

    நல்லா படிச்சியா பதிவை.... இல்லதாவனோட புலம்பல்தான் அதுன்னு தெளிவா சொல்லிருக்கோமில்லே.... சும்மா வந்து கப்பித்தனமா கேள்வி கேட்டுக்கிட்டு ??? :)

    உனக்கு ஏதோ மடியிலே கனமிருக்குன்னு நினைக்கிறேன் :)

    ReplyDelete
  11. ராம்,கப்பி,ஜி
    கலக்கிட்டீங்கப்பா...

    ReplyDelete
  12. ஏன்டா வீட்டுக்கு போன் பண்ணா 2 நிமிசத்துக்கு மேல பேசறதுக்கு மேட்டரில்லைனு சொல்லிட்டு பிகருக்கிட்ட மட்டும் ராத்திரி புல்லா மொக்கைத்தனமா எப்படிடா பேசறீங்க செல்போன் மண்டையன்களா

    ReplyDelete
  13. காலேஜ் நேரத்துல கேண்டீன்ல சுத்திட்டு காலேஜ் முடிஞ்சதுக்கு அப்பறம் க்ளாஸ் ரூம்ல கடலையப்போட்டு புகை மண்டலமாக்கறீங்களேடா அடுப்பு வாயனுங்களா!!!

    ReplyDelete
  14. //
    ஜி,

    ஹி ஹி சூப்பர்...

    உண்மையிலே நல்லா இருக்கு:)//

    ராயலு,
    அப்ப கப்பிக்கு சும்மா தான் நல்லாயிருக்குனு சொன்னீங்களா ;)

    ReplyDelete
  15. //ராம்,கப்பி,ஜி
    கலக்கிட்டீங்கப்பா...//

    டாங்கீஸ் வெட்டி,

    //ஏன்டா வீட்டுக்கு போன் பண்ணா 2 நிமிசத்துக்கு மேல பேசறதுக்கு மேட்டரில்லைனு சொல்லிட்டு பிகருக்கிட்ட மட்டும் ராத்திரி புல்லா மொக்கைத்தனமா எப்படிடா பேசறீங்க செல்போன் மண்டையன்களா//

    இப்பிடி யாரு உன்னை திட்டினா??? சொல்லு இப்பவே அவனை தூக்கிருவோம் :)

    ReplyDelete
  16. //ராயலு,
    அப்ப கப்பிக்கு சும்மா தான் நல்லாயிருக்குனு சொன்னீங்களா ;)//

    ஏன்ப்பா ஒனக்கு இப்பிடி ஒரு கொலைவெறி....

    கப்பியாருக்கு எதிரா ஒரு வார்த்தை சொல்லமுடியுமா???

    ஒன்கிட்டே ஒன்னு கேட்கிறேன், ஒன்னே ஒன்னுதான், அதெப்பிடி என்னை பார்த்து இப்பிடி கேட்டுபிட்டே...

    அப்பிடி கேட்டபிட்டு கண்ணடிச்சதும் இல்லமே சிரிக்க வேற செய்யிறே....

    ReplyDelete
  17. ////ஏன்டா வீட்டுக்கு போன் பண்ணா 2 நிமிசத்துக்கு மேல பேசறதுக்கு மேட்டரில்லைனு சொல்லிட்டு பிகருக்கிட்ட மட்டும் ராத்திரி புல்லா மொக்கைத்தனமா எப்படிடா பேசறீங்க செல்போன் மண்டையன்களா//

    இப்பிடி யாரு உன்னை திட்டினா??? சொல்லு இப்பவே அவனை தூக்கிருவோம் :)//

    ஓ!!! மேல நீங்க சொன்னதெல்லாம் நீங்க வாங்கின திட்டா... தெரியாம நான் விளையாட்டுல சேர்ந்துக்கிட்டேனே!!!

    இதெல்லாம் நாங்க மத்தவங்களை திட்றது :-)

    ReplyDelete
  18. //இராம் said...

    //ராயலு,
    அப்ப கப்பிக்கு சும்மா தான் நல்லாயிருக்குனு சொன்னீங்களா ;)//

    ஏன்ப்பா ஒனக்கு இப்பிடி ஒரு கொலைவெறி....

    கப்பியாருக்கு எதிரா ஒரு வார்த்தை சொல்லமுடியுமா???

    ஒன்கிட்டே ஒன்னு கேட்கிறேன், ஒன்னே ஒன்னுதான், அதெப்பிடி என்னை பார்த்து இப்பிடி கேட்டுபிட்டே...

    அப்பிடி கேட்டபிட்டு கண்ணடிச்சதும் இல்லமே சிரிக்க வேற செய்யிறே.... //

    ஆமாம்...
    ஒருத்தனுக்கு நல்லாயிருக்குனு சொல்லிட்டு அடுத்தவனுக்கு உண்மையாலுமே நல்லா இருக்குனு சொன்னா என்ன அர்த்தம்???

    ReplyDelete
  19. //ஆமாம்...
    ஒருத்தனுக்கு நல்லாயிருக்குனு சொல்லிட்டு அடுத்தவனுக்கு உண்மையாலுமே நல்லா இருக்குனு சொன்னா என்ன அர்த்தம்???//

    அதானே! பொசுக்குனு சொல்லிபுட்டிங்க கப்பித்தம்பி ரொம்ப வருத்தப்படும்ல!

    என்னாலயே தாங்கிக்க முடியல அவரு எப்படி தாங்கிக்க போறாரோ தெரில!

    ReplyDelete
  20. //ஓ!!! மேல நீங்க சொன்னதெல்லாம் நீங்க வாங்கின திட்டா... தெரியாம நான் விளையாட்டுல சேர்ந்துக்கிட்டேனே!!!

    இதெல்லாம் நாங்க மத்தவங்களை திட்றது :-//

    ஏலே எத்தனைதபா ஒன்கிட்டே சொல்லுறது, சங்கத்திலே சிக்கினவங்களுக்குதான் நாமே ஆப்படிக்கிறமாதிரி கேள்வி கேட்கணும், நமக்குள்ளே அது வேணாம்:)

    ReplyDelete
  21. கரண்டு கம்பி கூட பிடிக்கலாம், ஆனா இந்த காதலிக்கிற பசங்க கூட நம்பி போக கூடாது. அஞ்சு மணி நேரம் பேசிட்டு நம்மள காக்க வெப்பானுங்க, திரும்ப வந்து பைக்ல உக்காரும்போது
    அச்ச்சோ ஒரு மேட்டர் சொல்லணும்னு நெனச்சேன் சொல்லவேல்ல மச்சான் ஒரு ரெண்டு நிமிசம் இருடா போய் சொல்லிட்டு வரேம்பான். முன்னாடி போகையில ஒரு நிமிசம் இப்ப ரெண்டு நிமிசம்.

    ReplyDelete
  22. //
    ஏலே எத்தனைதபா ஒன்கிட்டே சொல்லுறது, சங்கத்திலே சிக்கினவங்களுக்குதான் நாமே ஆப்படிக்கிறமாதிரி கேள்வி கேட்கணும், நமக்குள்ளே அது வேணாம்:)//

    நீங்க மட்டும் என்னைய கேக்கலாமா???
    அதுக்கு தான் ரிட்டர்ன் ஆப்பு :-)

    சரி இனிமே நாம வேற ஒரு ஆளை பிடிப்போம் :-)

    ReplyDelete
  23. //சரி இனிமே நாம வேற ஒரு ஆளை பிடிப்போம் :-)//

    ஒரு குரூப்பாதான்யா சுத்தறிங்க!

    ReplyDelete
  24. /அதானே! பொசுக்குனு சொல்லிபுட்டிங்க கப்பித்தம்பி ரொம்ப வருத்தப்படும்ல!

    என்னாலயே தாங்கிக்க முடியல அவரு எப்படி தாங்கிக்க போறாரோ தெரில!//

    எம்புட்டு பாசமய்யா தம்புடு நம்ம கப்பிநிலவரு மேலே :)

    ReplyDelete
  25. // நீங்க மட்டும் என்னைய கேக்கலாமா???
    அதுக்கு தான் ரிட்டர்ன் ஆப்பு :-)

    சரி இனிமே நாம வேற ஒரு ஆளை பிடிப்போம் :-)//


    அது ... இப்பிடிதான் இருக்கணும்.... இல்லைன்னா நம்ம தல கோச்சிக்குவாரு :)


    // ஒரு குரூப்பாதான்யா சுத்தறிங்க! //

    பின்னே எதுக்கு நாங்கெல்லாம் அப்ரெண்டிஸா இருக்கோம் :)

    ReplyDelete
  26. //ILA(a)இளா said...

    super super //


    நைட் ஒன்னேமுக்காலுக்கு வந்து என்ன சூப்பரு.... :)

    போய் தூங்குங்கங்க :)

    ReplyDelete
  27. //நைட் ஒன்னேமுக்காலுக்கு வந்து என்ன சூப்பரு.... :)//

    ஏன் சார் உங்களுக்கு வேற டைம் அவருக்கு வேற டைமுங்களா சார்?

    ReplyDelete
  28. ராயலு! கலக்கலா இருக்குப்பா.

    உண்மையே சொல்லு மஞ்சு விரட்டு முடிச்சிட்டு வந்த உடனே எழுதுனது தானே இதெல்லாம்.
    :)

    ReplyDelete
  29. //ஏன் சார் உங்களுக்கு வேற டைம் அவருக்கு வேற டைமுங்களா சார்?//

    ரெண்டு பேருக்கும் ஒரே டயம்தான், இருந்தாலும் ஒரு குடும்பஸ்தன் பொறுப்பில்லாமே இந்நேரத்திலே வரலாமா.... :)

    நாமேல்லாம் இளந்தாரிக, அதுனாலே இந்நேரட்த்திலே உட்கார்த்துருக்கோம்,
    :))

    ReplyDelete
  30. //ராயலு! கலக்கலா இருக்குப்பா.//

    டாங்கீஸ் தல...

    //உண்மையே சொல்லு மஞ்சு விரட்டு முடிச்சிட்டு வந்த உடனே எழுதுனது தானே இதெல்லாம்.
    :)///

    நீதான் தல எங்க கஷ்டத்தையும் எல்லாம் உணர்ந்த மனுசரு.

    பாரு அங்கே வேடிக்கை பார்க்க போனது அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி ஆனாலும் இன்னவரைக்கும் டவுசரு சொன்ன முதலாவது மட்டும் அப்பிடியே தான் வாழ்க்கையிலே இருக்கு.

    :-)))))))))))

    ReplyDelete
  31. சூப்பர் ராயலு :-)

    ReplyDelete
  32. கப்பி, வெட்டி, ஜி...அடிச்சு ஆடுங்க... :-)

    ReplyDelete
  33. என் பங்குக்கு ஒன்னு...

    ஐஸ் கிரீம்,கேக் வாங்கி கொடுக்கும் போது மட்டும் தூரத்தில நின்னு பாத்திட்டு...அத பிகரு சாப்பிட்டு முடிச்ச உடனே வந்து பிளசர் காருல ஏத்திட்டு கிளம்பிடறீங்களேடா...அம்பாஸிடர் தலயனுகளா....

    ReplyDelete
  34. //சூப்பர் ராயலு :-) //


    டாங்கீஸ் 12B, :)

    //கப்பி, வெட்டி, ஜி...அடிச்சு ஆடுங்க... :-)//

    ஹி ஹி செஞ்சுருவோம் :)

    //என் பங்குக்கு ஒன்னு...

    ஐஸ் கிரீம்,கேக் வாங்கி கொடுக்கும் போது மட்டும் தூரத்தில நின்னு பாத்திட்டு...அத பிகரு சாப்பிட்டு முடிச்ச உடனே வந்து பிளசர் காருல ஏத்திட்டு கிளம்பிடறீங்களேடா...அம்பாஸிடர் தலயனுகளா.... //

    12B... இது உங்க தங்கமணிக்கு தெரியுமா??? ;)

    ReplyDelete
  35. ராம் தம்பி யார் இந்த டவுசர் பாண்டி அவர் கேபிள் ஏன் இப்படி அந்து அந்தரத்துல்ல தொங்குது.. என்னய்யா நடக்குது?

    ReplyDelete
  36. //ராம் தம்பி யார் இந்த டவுசர் பாண்டி அவர் கேபிள் ஏன் இப்படி அந்து அந்தரத்துல்ல தொங்குது.. என்னய்யா நடக்குது? //

    தேவ்'ண்ணே,

    டவுசர் பாண்டி கேரக்டர் என்னோட மல்டிபிள் பர்சனாலிட்டி'யிலே ஒருத்தன் தான்,

    அண்ணே என்னோமோ கேபிளு'ன்னு சொல்லிருக்கீங்க, அப்பிடின்னா???? :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)