Monday, February 12, 2007

சங்கம்-150. விஜயவீராச்சாமியின் "அரட்டை அரங்கம்"



சிகப்பு சட்டையும் மஞ்ச பேண்ட்டும் போட்டு பளபளன்னு தலையிலே பிரவுன் ஜெல் டாலடிக்க டகால்டியா சங்க அரங்கம் உள்ளே வர்றார்
அண்ணன் வீராச்சாமி!!!

அரங்கத்துக்கு மேல கொட்டை எழுத்திலே
சங்கம் ஆரம்பிச்சது பொழப்பத்த வேலை..
சங்கம் ஆரம்பிச்சது போக்கத்த வேலை...
சங்கம் ஆரம்பிச்சது கிறுக்கு வேலை...
சங்கம் ஆரம்பிச்சது அதையும் தாண்டி மகா வெட்டி வேலை..


வணக்கம் வீராச்சாமி படத்தைப் பார்த்துட்டுப் பாதி ராத்திரியிலேத் தூக்கம் கெட்டு ஏக்கமா என் வீட்டு பக்கம் வந்து.. படம்ன்னா இது படம்ன்னு சொல்லி கையப் பிடிச்சு கதறி அழுதப் பாசமுள்ள தங்கச்சி கைப்பொண்ணு கேட்டுகிட்டதால்ல அடுத்த வந்த ஹாலிவுட்காரனை "சிம்புவை வச்சு இப்போதைக்குப் படம் எடு...! எனக்கு சங்கத்துல்ல வேலை இருக்கு! என்னை ஆளை விடு!!" ன்னு சொல்லிட்டு அவசரமா வந்து இருக்கேன்..

"இன்னும் வீராச்சாமி வெற்றி கொடுத்த டயர்ட் எனக்கு போகல்ல..!
அடுத்த சூப்பர் ஸ்டார் என் பையன் சிம்பு தான் அந்த நம்பிக்கை வீண் ஆகல்ல.. !"

"கைம்பொண்ணா.. என்ன மேட்டர் அது?" ஜொள்ளு மைல்ட்டா டவுட் ஆக.. பாண்டி டி.ஆர்க்கு தங்கச்சி சென்டிமென்ட் ஓர்க் அவுட் ஆகும்ன்னு நான் தான் தலக்கு தசாவதாரம் மேக் அப் மேனை கடனா வாங்கி கைப்பொண்ணா டேக்கரேட் பண்ணி அனுப்பி வச்சேன்.."ன்னு ராயல் காதை கடிக்க 'தல' இருக்கும் பக்கம் பாண்டி லுக் விட.. தலயின் கண்ணுல்ல லிட்டர் லிட்டரா தண்ணி...

" முடியலடா..! அவரை கூப்பிட போன என்னை ஓம்பது மணிக்கு ஆரம்பிச்சு விடிய விடிய மூணு மணி வரைக்கும் முக்கா கொயர் நோட்ல்ல எழுதுன அம்புட்டு தங்கச்சி பாச டயலாக்கயும் என் காது ஜவ்வு அந்து அந்தரத்துல்ல தொங்குற வரைக்கும் பேசுனார்.. முத்திரச் சந்துல்ல கட்டத்துரை குருப் கழுதையை விட்டு பின்னாலே கடிக்க வைக்கும் போது கூட அசராத என்னைய அச்ர வச்சுட்டார்ய்யா வீராச்சாமி... "

அவ்வ்வ்வ்வ்வ்வ் கண்ணாலே தல கதறுனது பாண்டிக்குக் கேட்டுருச்சு.

சங்கம் தொட்டாச்சு 150 போஸ்ட்
அதுல்ல கிட்டத் தட்ட எல்லாமே வேஸ்ட்
மட்டனை விட சிக்கன் தான்டா டேஸ்ட்
இந்த பரட்டை அரங்கத்துக்கு உங்க டி.ஆர் தான் ஹோஸ்ட்


"என்னய்யா சங்கம் போஸ்ட் எல்லாம் வேஸ்ட்ங்கறார்.. சொ.செ.சூவா?ன்னு இளா காதைக் கடிக்க..

சிபி எழுகிறார். பாக்கெட்டில் இருந்து... பாம் டாப் எடுத்து அவசரமாய் கலாய்த்தல் திணை ஓப்பன் பண்ணி அதில் வீராச்சாமியைக் கலாயத்த அனைத்துப் பதிவுகளின் தொடுப்பையும் கொடுக்கிறார்..அதை விட அவ்சரமாய் டி.ஆர்க்கு 10 கேள்விகள் என்ற அடுத்தப் பதிவையும் வெளியிடுகிறார்.

"ராம் எதையும் தாங்குற சிங்கம் ஆனா நம்ம தலயே கேப் இல்லாம கதறுராருன்னா நானு ராமு எல்லாம் பச்சப்புள்ளங்க தாங்க மாட்டோம்.. பரீட்சைக்கே நான் எல்லாம் ஜூரம் வந்து படுத்துருவேன், இது விஷப் பரீட்சை'லேன்னு பாண்டி பரிதாபமா முழிக்க..!

அண்ணன் வீராச்சாமி அரங்கத்தை ஆரம்பிக்கிறார்.

"அதாவதுங்க,பொழப்புங்கறது என்ன? அது ஒரு சொல்,வேலைங்கறது என்ன? அதுவும் ஒரு சொல்.. இந்தச் சொல்லுக்கும் அந்தச் சொல்லுக்கும் அர்த்தம் ஒண்ணுதானே.. ஒன்றான சொல் வேறாக முடியுமா...? என்னப் பொழப்பு இது யார் கிட்ட வேலைக் காட்டுறீங்க விட்டுருவோமா..?" கொத்தனார் முதலில் பேச விசில் பறக்கிறது.

"நாட்டுல்ல நடக்கிறது இலவச அரசு
நெட்ல்ல ப்ரீயா விடச் சொல்லுறது கொத்ஸ் ரவுசு"

பஞ்ச் அடித்து விட்டு மைக்கை மூணாவது ரோவுல்ல உக்காந்து இருக்க செந்தழல் ரவியிடம் நீட்டுகிறார் வீராச்சாமி. "வேலைன்னு தலைப்பைப் பார்த்து இங்கிட்டு வந்தேன்.. அப்படியே நம்ம பக்கத்துல்லயும் விளம்பரம் கொடுத்துட்டு வந்து இருக்கேன்...! பொழப்பத்தா என்ன?போக்கத்தா என்ன?? அட கிறுக்குதான் புடிச்சா என்ன?? அண்ணே வெட்டியா இருந்தாலும் வேலை வேணும்ண்ணே... !!என்னண்ணே நான் சொல்லுறது ரைட்டா... நீங்கக் கூட உங்க அடுத்தப் படத்துல்ல எல்லா வேலையும் நீங்களே செய்யாம ஒதுங்கிட்டு மத்த வேலைகளை நம்ம பசங்க கிட்டக் கொடுத்துருங்க... நல்லா செய்வாங்கண்ணா.. ரெஸ்யூம் அனுப்பவா?"

"ஆ டண்ணக்க டனுக்கு நக்கா!! எனக்கே ஆப்பா!!
ரவி நீ மைக்கை கொடுத்துட்டுப் போப்பா..!"

அடுத்து மைக் கவிதா அக்காவிடம் போகிறது..

"ஏனுங்க.. வீராச்சாமிண்ணே ஒங்களுக்கு எதாவது வேலைன்னு ஒன்னு இருக்கா இல்லையா???"

"பொண்ணுங்க கட்டுறது சேலை.. எனக்கோ தலைக்கு மேல வேலை!"

"ஆமாங்க அண்ணா.. நீங்க எப்பவுமே நேரா பேசாம ஏன் அடுக்கி அடுக்கி பேசுறீங்க?"

"தேளுக்கு இருக்குது கொடுக்கு.. எனக்குத் மொழியிலே புடிச்சது அடுக்கு"

மவனே நீ கொஞ்சம் அடக்குன்னு ஆத்திரமா எழும்புன புலிக்குட்டி சிவாவை நான் (தேவ்) கஷ்ட்டப்பட்டு சமாதானம் பண்ணி உக்கார வைக்க வேண்டியதாப்போச்சு.

"நயந்தாரா சிம்பு போட்டோ செய்திப் பத்தி உங்க கருத்து"

"அந்தப் போட்டோ நவீன காதலுக்குக் கட் அவுட்
அது புரியாத எல்லாரும் கெட் அவுட்..."

"போர்வாளு! அக்கா அரங்கத்துக்கு வந்துட்டு சைலண்ட்டா கேப்பக் கஞ்சி காய்ச்சு வீராச்சாமிக்கு ஊத்திகிட்டு இருக்காங்க... விட்டாப் பதிவு பேரை கேப்பக் கஞ்சி வித் வீராச்சாமின்னு மாத்த வேண்டி வரும் ஆமா"ன்னு அணில் குட்டி அலர்ட் கொடுக்க நாம் உஷார் ஆகி மைக் அடுத்து நம்ம ஜி.ரா கிட்டக் கொடுத்தேன்.

தண்ணியில் இருந்த தரையில் விழுந்த மீன் போல் தவித்தவரை.. வீராச்சாமி அண்ணன் பாசத்தோடு நெருங்கினார்.

"ஊருக்குள்ள வாழுது சாதி சனம்
பதிவுலகம் எதிர்பாக்கிறது உங்க வீராச்சாமி விமர்சனம்..
ஏங்குது என் மனம்" ந்னு வெட்டி உசுப்பேத்த...

படு டென்ஷனாய் ஜிரா வெட்டியை ஒரு மொறைப்ப மொறைத்து விட்டு பாஸ் என்று மைக்கை அவருக்குப் பக்கத்தில் இருந்த வெட்டியிடம் கொடுத்தார்.

"என்ன தல நீ வைக்கிற குயிஜ்'க்கு பதில் தெரியல்லன்னா நான் சொல்லுற பதிலை இல்ல ஜி.ரா சொல்லுறார்.. அரட்டை அரங்கம் ரூட் ராங்க் ரூட்டால்ல போகுது" என ராம் பதற...

வெட்டி கம்பீரமாய் மைக் பிடிக்கிறார்..

"வீராச்சாமிண்ணே..! பெங்களூர்ல்ல தமிழ் படத்துக்கு தடையை விலக்கினா கண்டிப்பா உங்க படத்துக்கு ஜிரா விமர்சனம் எழுதுவார்!அதுக்கு நான் கியாராண்டி..!

"அடேய் வெட்டி! காவிரி ஆத்தா உன்னிய மன்னிக்கவே மாட்டா"ன்னு ஜி.ரா சொன்னது எங் காதுல்ல விழுந்துச்சு..

"அண்ணே வீராச்சாமிண்ணே.. கடைசியாப் போட்டிருக்க மாதிரி சங்கம் ஆரம்பிச்சது வெட்டி வேலைங்க.. அந்த டைம்ல்ல நான் பிளாக் பக்கமே வந்தது இல்ல.. அநியாயமா எனக்கு வெளம்பரம் கொடுக்க நம்ம பாசக்கார பய ராமும் பாண்டியும் தான் இப்படி ஒரு ஏற்பாடு பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன்"னு வெட்டி சொல்லவும்

"அடேய் நெல்லிக்காய் மண்டையா இன்னும் நீ திருந்தலயா??.. ஓனக்கு இன்னொரு டெவில் ஷோ போடணும் போல இருக்கே.. இந்த வெளம்பரம் வெங்காயம் எல்லாம் ஓனக்கு தேவையா??"ன்னு எங்கிருந்தோ கவுண்டர் குரல் அலறலாய் கேட்கிறது....

வெட்டி மைக்கை இளாவிடம் கொடுக்கிறார்..

இளா "க்குத் தனம்... றுக்குத் தனம்.. கிறுக்குத் தனம்..." அப்படின்னு பார்த்தீபன் மாதிரி ஆரம்பிக்க,சிபி குஷியாகிறார். "விட்டா பார்த்தீபன் தான் சங்கம் ஆரம்பிச்சார் ..அவரோட கிறுக்கல்கள் இரண்டாம் பாகம் தான் சங்கம்'னு முத்திரை குத்திருவீங்கப் போலிருக்கு.. பை த பை அடுத்த மாசம் சங்கத்துக்கு பார்த்தீபன் தான் அடுத்த அட்லாஸ் வாலிப்ரா வர்றார்.. நான் பேசிட்டேன் அதுக்கு நெக்ஸ்ட் மன்த் நீங்க தான் என ஒரே போடா போட...

பாண்டியும் சிவாவும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பங்றாங்க..

அடுத்த மாசமும் அதுக்கு அடுத்த மாசமும் நமக்கு நாமே ஆப்பு திட்டமா? ராம் மெல்லியக் குரலில் தலயிடம் சொல்ல..

"அகமதாபாளையத்துல்ல அடியிலே அரை இஞ்ச்க்கு ஒரு ஆணி அடிக்கிறாய்ங்கன்னு அவசரப்பட்டு அரை நாள் லீவு போட்டு சங்கம் பக்கம் வந்தா அறுபது நாளுக்கு ஆறு அடிக்கு கடப்பாரையை கடவாப் பல்லுக்கு இடையிலே சொருவ இந்த விவசாயி வழிப் பாக்குறாரே.. ராம் விவசாயி ஆபிஸ்க்கு போனைப் போட்டு அவர் பிளாகருக்கு ஆப்பு வைக்க வழியைப் பார்... அந்தாளு டார்ச்சர் தாங்க முடியல்ல.."

வீராச்சாமி கண்கலங்கி...

கண்ணா தம்பி விவசாயி..
உனக்கு இருக்கது தங்கவாயி..
உனக்காக நான் ஆவுறேன் அட்லாஸ் பாயி..
எல்லாருக்கும் முக்கியம் அவன் அவன் தாயி...




இப்போ பாண்டியும் சிவாவும் வெட்டியும் தேம்பி தேம்பி அழு ஆரம்பித்து விட்டனர். இந்நேரம் உள்ளே வரும் ஜி... மைக் இல்லாம சத்தமா "யம்மாடி ஆத்தாடி... அண்ணே நீங்க ஒரு இந்தியக் கலாச்சாரக் காத்தாடி... அமெரிக்காவுல்ல உங்க படம் ரிலீஸ் பண்ண் விடாம புஷ் கடுப்படிக்கிறார் அண்ணே."ன்னு கொளுத்தி போடுறாரு..

"ஏ புஷ்...
லிப் டூ லிப் சிம்பு அடிப்பான் கிஸ்...
கல்யாணம் ஆகாத எல்லாப் பொண்ணும் மிஸ்...
இந்த வீராச்சாமியை நீ எதித்து நின்னா தஸ்"

வீராச்சாமி டக்குனு காஸ்டீயும் மாறி வேட்டியை தொடைக்கு ரெண்டு இஞ்ச் மேல எத்தி கட்டி ஒரு காட்டாறு மாதிரி கிளம்ப... நம்ம சங்கக் கூட்டத்தை வேடிக்கைப் பாக்க வந்திருந்த தம்பி "யம்மா கரடின்னு அலறிகிட்டு தலயோட இடுப்புல்ல ஏறி உக்காந்துக்க, இடுப்பு உடைஞ்ச தல தம்பியைப் பார்த்து, "இது இடுப்புடா.. ஏன்டா இப்படி கடுப்பு கிளப்பிகிட்டு..."
"ஐ தல நீயும் அடுக்கு மொழி பேசுறியே"ன்னு இந்திய மண் மிதிச்ச களிப்புல்ல கப்பி ஆனந்தமாச் சொல்லுறான்..

"சின்ன வயசுல்ல சாப்பிட்டு இருக்கேன் பேரிக்கா
என் படத்தைக் காட்ட மாட்டேங்குது அமெரிக்கா..
பீச் ஓரமா இருக்குது நிறைய ராக்...
உன்னாலே சேதமாச்சு ஈராக்...
தமிழ் நாட்டுல்ல நல்லா விக்குது பான் பாராக்
புஷ்.. நீயும் ஒரு நாள் சொல்லுவே இந்த வீராச்சாமிக்கு பராக்கு பராக்கு..
இருக்கட்டும் ய்யா... என் படம் அமெரிக்கால்ல் ஓடல்லன்னு எனக்கு இல்ல கவலை
ஆனா அதை நினைச்சு என் ரசிகன் விடுறான் கண்ணீர் தினமும் நூறு தவலை...."
அப்படின்னு சொல்லிட்டு பயங்கர பீலிங்கா கழுத்தைத் திருப்பிச் சிலுப்பி அழுவ...

"அண்ணே என்னண்ணே நடக்குது???" இங்கே ஒரு ஓரமா இருந்து பரிதாபமா இமசை அரசி குரல் எழுப்ப...

" ஏ... டண்ணனக்கா.. டணுக்குனக்கா.... அடி ரா...
தட்டிப் பார்த்தேன் கொடடாங்குச்சி... பாட்டை வீராச்சாமி பாடவும் கூடவே ஆடவும் ஆரம்பிக்க.. சங்கம் கூரை கழண்டு கீழே விழுந்தது....

தம்பிங்களாஆ.. ( சங்க மக்கள் தான்) நீங்க எம் மேலக் காட்டுனது பாசம்..
அதுக்கு ஈடா இந்த அண்ணனும் தருவான் நேசம்...

"இந்தாங்க ஓங்க எல்லோருக்கும் என் வீராச்சாமி படத்துக்கு இலவச பாஸ்" பாண்டியும் சிவாவும் இதைக் கேட்டதுமே ப்யூஸ் போய் கீழே சரியுறாங்க) "இதை நீங்க எங்க வேணுமோ கொடுத்து எத்தனை தடவ வேணுமோ திரும்ப திரும்ப பார்த்து ரசிங்க.......!"

(இதைக் கேட்டதும் ராம்,தம்பி, கப்பி..இம்சை அரசி... இப்படி ஒரு குருப்பே அதிர்ச்சியிலே கரண்ட் கட் ஆகுது).

திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கலாம்'ன்னு TR சொன்னதை கேட்டதும் எங்கிருந்தோ டி.பி.ஆரின பதற்ற குரல் கேட்கிறது..ஐயோ திரும்பி பாக்கணுமா.. இந்த ஓண்ணு போதுமே என்னைய கோர்த்து விட்டுருவாயங்களே.. வீராச்சாமி ஓடி முடியற வரைக்கும் கோவாவுக்கே மறுக்க கன்வென்ஷன் போயிர வேண்டியது தான்....!) ருசிக்கலாம்'னு சொல்லிட்டு ஜி.ரா'வை கைக் காட்டி அவருக்கு மட்டும் ரெண்டு பாஸ் கொடுத்துருங்கன்னு கண் கலங்கச் சொல்ல...ஜி.ரா காவிரி ஆத்தாக் கவுத்திட்டீயேன்னு கன்னத்துல்ல கை வைக்க.. வெட்டி வீராப்பாக சிரிக்கறான்.

"பாசக்கார பயலே!!! வெட்டி...!!! வி.ஐ.பி எல்லாத்தையும் பாத்து என் படம் பத்தி் கேட்டு எழுதுனது நீ தானே.. அந்த ஒரு காரணத்துக்காக உனக்கு மட்டும் இனி வரப்போகும் எனனோட் படம்.. என் பையன் சிம்பு ஏன் அவன் தம்பி குறளரசன் 2010லில் ஹீரோவா அறிமுகம் ஆகற படம் வரைக்கும் இலவச பாஸ் கட்டாயம் உண்டுன்னு் சொல்ல.. ஜிரா முகத்தில் சந்தோஷம்..

"வினை விதைத்தவன் வினை அறுப்பான்னு" தமிழ் சங்கம் பாணியிலே பொன்மொழி எல்லாம் சொல்லி வெட்டியை விறைப்பாப் பார்த்தார்.. வெட்டியின் ரியாக்ஷ்ன் பின்னூட்டத்தில் காண்க

கொத்ஸ் மத்த ஆன்றோர் சான்றோர் எல்லாம் வந்த சுவடு தெரியாம எஸ் ஆகி விட.. தல இருந்த பக்கம் நான் பார்க்க... அவர் வாகனத்தில் வீராச்சாமியின் வீச்சுருவா சொருகியிருந்தது.. அப்புறம் என்ன நானு, தல, இளா'னு மூணு பேரும சேர்ந்து சும்மா ஒரு 150 கிலோ மீட்டர் வீராச்சாமியை வண்டியிலே வச்சு தள்ளிகிட்டுப் போய் ஊருக்கே வெளியே விட்டுட்டு அவர் கால்ல விழுந்து கெஞ்சி கதறி கூத்தாடி...

"அண்ணே வேணாம்ண்ணே தமிழங்க பச்ச மண்ணுங்க.. தாங்க மாட்டாய்ங்க.. இனியும் இந்த கெட்டப்பு!! வேணாம்ண்ணே..நிப்பாட்டிருக்கங்கண்ணே... " அப்படின்னு கோரிக்கை வச்சுட்டு வந்துருக்கோம்...."



150 பதிவுகளாய் எங்களுக்கு நல்லாதரவு வழங்கி வரும் அனைவருக்கும் சங்கம் தலை வணங்கி நன்றி சொல்கிறது..

58 comments:

  1. //சிபி எழுகிறார். பாக்கெட்டில் இருந்து... பாம் டாப் எடுத்து அவசரமாய் கலாய்த்தல் திணை ஓப்பன் பண்ணி அதில் வீராச்சாமியைக் கலாயத்த அனைத்துப் பதிவுகளின் தொடுப்பையும் கொடுக்கிறார்..அதை விட அவ்சரமாய் டி.ஆர்க்கு 10 கேள்விகள் என்ற அடுத்தப் பதிவையும் வெளியிடுகிறார்//

    :))

    சூப்பர்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அனானி அண்ணே!

    ReplyDelete
  3. //Anonymous said...
    Congrats... //

    ஆஹா எடுத்துடவுடனே அனானி சாமி கமெண்டா...

    வாழ்க அனானி....

    ReplyDelete
  4. ஆஹா! எங்க ஊருக்கு நிறைய புதுமுகங்கள் வருவாங்க போல இருக்கே!

    வாழ்க டி.ஆர்!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. //வாழ்க அனானி.... //

    அனானிகளுக்கு அனுமதி உண்டா???/

    ReplyDelete
  7. தமிழ் நாட்டுல சிக்கன்குனியா..
    அமெரிக்கால பனியா?
    எனக்கு இருக்குது அடுக்குமொழி மேனியா...
    சிம்பு அடிச்சி ஆடுவான் தனியா....

    டி.ஆர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே

    "நீ போடா சனியா"
    அப்டீனு சிங்கங்களெல்லாம் பொதடில பொளேர்னு அடிச்சி அனுப்புறாங்க கடைசில....

    ReplyDelete
  8. அதுக்குள்ள 150ஆ? நடத்துங்க ராசாக்களா!!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. //ஆஹா! எங்க ஊருக்கு நிறைய புதுமுகங்கள் வருவாங்க போல இருக்கே!//

    ஹிஹி ஜகன்மோகினி படத்திலே அழகா ஒரு பொண்ணு வருவாங்களே... அந்த குருப்பை சேர்ந்த கழகமா இது..... :)


    //வாழ்க டி.ஆர்! //

    அவரு நல்லந்தான் வாழுறாரு, நாமே அவரு படத்தை பார்த்திட்டு சாவுறோம் :(

    ReplyDelete
  10. //Comment deleted
    This post has been removed by the author.//

    இப்பிடி தப்புத்தப்பா டைப் பண்ணிட்டு அப்புறம் யாருக்கும் தெரியாமே இருக்கிறதுக்காக டெலிட் செய்த ஜி'யை வன்மையாக கண்டிக்கிறோம்,

    இவண்,
    கப்பி ரசிகைகள் கழக ஒருங்கிணைப்பாளர்,
    பெங்களூரு கிளை.

    ReplyDelete
  11. // இராம் said...

    இவண்,
    கப்பி ரசிகைகள் கழக ஒருங்கிணைப்பாளர்,
    பெங்களூரு கிளை.
    //

    ஏம்பா இந்த கொலவெறி உனக்கு... இத கப்பி பாத்தார்னா....

    "ஆட்டக் கடிச்சி.. மாட்ட கடிச்சி.. கடைசில என் மடிலையே கைய வக்கிரியடா'ன்னு அடிக்க வந்துடப் போறாரு...

    ReplyDelete
  12. எதிர்த்த வீட்டுப் பொண்ணப் பாத்து
    வாங்குனேன் நான் பொது மாத்து...

    சங்கத்து சிங்கங்களுக்கெல்லாம் சேத்து
    150க்கு என்னோட வாழ்த்து...

    ReplyDelete
  13. //தமிழ் நாட்டுல சிக்கன்குனியா..
    அமெரிக்கால பனியா?
    எனக்கு இருக்குது அடுக்குமொழி மேனியா...
    சிம்பு அடிச்சி ஆடுவான் தனியா....

    டி.ஆர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே

    "நீ போடா சனியா"
    அப்டீனு சிங்கங்களெல்லாம் பொதடில பொளேர்னு அடிச்சி அனுப்புறாங்க கடைசில.... //

    அதுக்குள்ளே வெளியே அனுப்பிற கூடாது மக்கா,

    அப்பிடி அனுப்பிட்டா நாமெல்லாம் சிரிக்கிறதுக்கு யாரு ஜோக் சொல்லுவா... இப்போ பாரு அந்தாளு சங்கத்துக்கு வந்து நிகழ்ச்சி நடத்துனரா பேசினத்துக்கே சிரிஞ்சுட்டோம்...

    இன்னும் கவுண்டரு வேறே அவரை வெச்சு டெவில் ஷோ நடத்த ரெடியா இருக்காரு :)

    ReplyDelete
  14. ஒன்றரை சதம்
    எல்லாம் பதம்...

    நீங்க வைக்க முடியாது கதம்...
    நான் மக்கள இன்னும் பண்ணுவேன் வதம்...

    ReplyDelete
  15. //அதுக்குள்ள 150ஆ? நடத்துங்க ராசாக்களா!! //

    வாங்க கொத்ஸ்,

    :)))))

    //வாழ்த்துக்கள்! //

    நன்றிங்கண்ணோவ்....

    ReplyDelete
  16. யாருறா இங்க எங்க அப்பாவை வைச்சி காமெடி பண்ணுறது.....


    வீராசாமிக்கு யாரு முன்னாடி பார்க்கிறாங்கன்னு முக்கியமில்லை...
    படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசமே யாரு வெளியே வர்றாங்கறதுதான் முக்கியம்.......

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் சிங்கங்களே!!!

    ReplyDelete
  18. அண்ணே நீங்க இங்கயும் வந்துட்டீங்களா???

    கரடி தொல்லை தாங்களையே!!!

    ReplyDelete
  19. //"பாசக்கார பயலே!!! வெட்டி...!!! வி.ஐ.பி எல்லாத்தையும் பாத்து என் படம் பத்தி் கேட்டு எழுதுனது நீ தானே.. உனக்கு மட்டும் இனி வரும் என் படம்..என் பையன் சிம்பு ஏன் அவன் தம்பி குறளரசன் 2010லில் ஹீரோவா அறிமுகம் ஆகற படம் வரைக்கும் இலவச பாஸ் கட்டாயம் உண்டுன்னுச் சொல்ல.. ஜிரா முகத்தில் சந்தோஷம்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்னு தமிழ் சங்கம் பாணியிலே பொன்மொழி எல்லாம் சொல்லி வெட்டியை விறைப்பாப் பார்த்தார்.. வெட்டியின் ரியாக்ஷ்ன் பின்னூட்டத்தில் காண்க//

    இதுக்கு 2010 வரைக்கும் வண்டலூருக்கு இலவச பாஸ் இருக்குனு சொல்லியிருக்கலாம்...

    ReplyDelete
  20. 150க்கு வாழ்த்துக்கள்...

    இந்த மாசம் முடியறதுக்குள்ள 200 தொட்டுட மாட்டீங்க? ;-))

    ReplyDelete
  21. பதிவைப் ரெம்ப டாப்பு
    அடிக்க வில்லை டூப்பு!

    ReplyDelete
  22. என்னங்க இது நம்ம டி.ஆர இப்படிப் போட்டு தாக்கிட்டீங்க. அவர் நம்ம ப்யூட்டி க்வீன் மும்தாஜ் (அடடா அவர் முகத்துலதான் என்னா காதல் ரசம் சொட்டுது.) கூட ஆடற எல்லா டூயட்டுமே சூப்பரா இருக்கு.. நம்ம ந.திலகத்துக்கப்புறம் டி.ஆரோட நடைதாங்க சூப்பர். அவ்வளவு பெரிய வயித்தையும் வச்சிக்கிட்டு அவர் காலதூக்கி ஆடற ஸ்டைல்.. அதுக்கே இன்னும் ஒரு தரம் பாக்கலாம் (அதாவது ஓசி டிவிடியில!)..

    இது போறாதுன்னு இடையில நா ஜெனுயினா போன கோவா கன்வென்ஷன வேற இழுத்து விட்டூட்டீங்க.. நா என்னமோ வேற எதுக்கொ போனா மாதிரி.. உண்மையிலெயே கன்வென்ஷனுக்குத்தாங்க போனேன்..

    இருந்தாலும் சங்கத்தோட 150வது பதிவு சூப்பர் கலக்கலாத்தான் இருந்தது.. இதுல நிரந்தர மெம்பராயிரலாமான்னு கூட பாக்கேன்..

    எவ்வளவுங்க லைஃப் சந்தா?

    ReplyDelete
  23. //யாருறா இங்க எங்க அப்பாவை வைச்சி காமெடி பண்ணுறது.....


    வீராசாமிக்கு யாரு முன்னாடி பார்க்கிறாங்கன்னு முக்கியமில்லை...
    படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசமே யாரு வெளியே வர்றாங்கறதுதான் முக்கியம்....... //

    லிட்டில் சூப்பர் ஸ்டார் நீங்க நல்லவரா? கெட்டவரா?

    ReplyDelete
  24. //வாழ்த்துக்கள் சிங்கங்களே!!! //

    என்ன உதய் சிம்பிளா ஒரு வாழ்த்துச் சொல்லிட்டு எஸ் ஆகலாம்ன்னு பாக்குறீய.. வந்து கொண்டாட்டத்துல்ல கலந்துக்க வேணாமா.. நீங்க எல்லாம் இல்லாம 150 தொட முடியுமாய்யா?

    ReplyDelete
  25. //கரடி தொல்லை தாங்களையே!!! //
    ப்ளு கிராஸ்க்கு போனைப் போடுப்பா வெட்டி :)

    ReplyDelete
  26. //இதுக்கு 2010 வரைக்கும் வண்டலூருக்கு இலவச பாஸ் இருக்குனு சொல்லியிருக்கலாம்...//

    வண்டலூர் விலங்கு எல்லாம் உன் மேல மான நஷ்ட்ட வழக்குப் போடப் போகுதாம் ஜாக்கிரதை வெட்டி :)

    ReplyDelete
  27. //150க்கு வாழ்த்துக்கள்...

    இந்த மாசம் முடியறதுக்குள்ள 200 தொட்டுட மாட்டீங்க? ;-)) //

    200 பதிவாஆஆ ஓவர்ப்பா.. எதோ இந்தப் பதிவு ஒரு 200 கமெண்ட் தொடும்ன்னு சொல்லு சந்தோசப் படுவோம்:-)

    ReplyDelete
  28. //பதிவைப் ரெம்ப டாப்பு
    அடிக்க வில்லை டூப்பு!
    //

    பதிவைப் ரெம்ப டாப்பு
    அடிக்க வில்லை டூப்பு!

    சுப்பையா அய்யா.

    இந்தப் பின்னூட்டம் சங்கத்துக்கு கிடைச்ச விக்டரி 'கப்பு' :)))

    ReplyDelete
  29. நைட்டு எரியுது பல்பு
    என் பையன் பேரு சிம்பு
    எங்ககிட்ட வெச்சுக்காத வம்பு
    அதுக்குள்ள வந்துருச்சா நூத்தம்பது?

    ReplyDelete
  30. ஹே ராம்
    மனசுக்குள்ள ஷாருக்காம்
    சனிக்கிழமை ஆனா சரக்காம்

    ReplyDelete
  31. /ஏம்பா இந்த கொலவெறி உனக்கு... இத கப்பி பாத்தார்னா....

    "ஆட்டக் கடிச்சி.. மாட்ட கடிச்சி.. கடைசில என் மடிலையே கைய வக்கிரியடா'ன்னு அடிக்க வந்துடப் போறாரு...//

    யாரு கப்பியா, அவன் நம்ம பய, அதெல்லாம் பண்ணமாட்டான்.

    ஏதாவது பிரச்சினைனாலும் கரடியை தான் வைச்சிருக்கோமில்லை... அந்த சிங்கத்தை பார்த்து பயந்து பம்மிருவான்:)))

    ReplyDelete
  32. //எதிர்த்த வீட்டுப் பொண்ணப் பாத்து
    வாங்குனேன் நான் பொது மாத்து...

    சங்கத்து சிங்கங்களுக்கெல்லாம் சேத்து
    150க்கு என்னோட வாழ்த்து...//

    TR அண்ணே ,

    நீங்களா வந்து வாழ்த்து சொல்லுறது...? இந்நேரம் நீங்க இந்நேரம் உங்க படத்தோட கலக்சைனை எண்ணிக்கிட்டு இருப்பிங்கன்னு நினைச்சிட்டுருந்தோம் :)

    ReplyDelete
  33. //"ராம் எதையும் தாங்குற சிங்கம் நம்ம தலயே கேப் இல்லாம கதறுராருன்னா நான் எல்லாம் பச்சப்புள்ளடா தாங்க மாட்டேன்டா.. பரீட்சைக்கே நான் எல்லாம் ஜூரம் வந்து படுத்துருவேன் .. இது விஷப் பரீட்சைன்னு பாண்டி பரிதாபமா முழிக்க.. அண்ணன் வீராச்சாமி அரங்கத்தை ஆரம்பிக்கிறார்.//

    தேவு கதறக் கதற இப்படி அண்ணன் வீராசாமிய வுட்டு சுளுக்கு எடுத்திட்டியளே !!! :))))))))) சங்கத்து மக்கா எல்லாம் எப்படீப்பா இருக்கீங்க ?? :))))

    ReplyDelete
  34. //அடுத்த மாசமும் அதுக்கு அடுத்த மாசமும் நமக்கு நாமே ஆப்பு திட்டமா? ராம் மெல்லியக் குரலில் தலயிடம் சொல்ல..//

    தேவு சும்மா சொல்லக்கூடாது சும்மா மானாவாரியா வீராச்சாமி கூட எல்லா சங்கத்து சாமிகளுக்கும் அப்படியே சாம்பிராணி அடிச்சு பொகையக்கெளப்பியிருக்கீங்க போங்க :)))))))))

    ReplyDelete
  35. //போர்வாள் அக்கா அரங்கத்துக்கு வந்துட்டு சைலண்ட்டா கேப்பக் கஞ்சி காய்ச்சு வீராச்சாமிக்கு ஊத்திகிட்டு இருக்காங்க... விட்டாப் பதிவு பேரை கேப்பக் கஞ்சி வித் வீராச்சாமின்னு மாத்த வேண்டி வரும் ஆமான்னு அணில் குட்டி அலர்ட் கொடுக்க //

    அட கவிதாக்கா 'கேப்'புல கேப்பங்கூழு காய்ச்ச ஆரம்பிச்சுடறாங்களா ?? அலர்ட்டா இருக்கனும் போல இருக்கே !! :))))

    ReplyDelete
  36. அடிச்சாச்சி நூத்தம்பது!
    எல்லோருக்கும் ஊத்து நூத்திஎண்பது !!


    ;))))

    ReplyDelete
  37. 150 வது பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடுறவங்களுக்கு ராஜஸ்தான்ல ஒட்டகம் மேச்சாவது பிரியானி வாங்கித்தரேன்னு நம்ம தல சொல்லி இருக்காரு :-)

    ReplyDelete
  38. //ஆமாங்க அண்ணா.. நீங்க எப்பவுமே நேரா பேசாம ஏன் அடுக்கி அடுக்கி பேசுறீங்க?" //

    அவரும் நேரா பேச ஒன்னும் இல்லாமயே சமாளிக்கறார் பாருங்க அது தான் மேட்டர்... :-)

    ReplyDelete
  39. //"அண்ணே வேணாம்ண்ணே தமிழங்க பச்ச மண்ணுங்க.. தாங்க மாட்டாய்ங்க.. இனியும் இந்த கெட்டப்பு!! வேணாம்ண்ணே..நிப்பாட்டிருக்கங்கண்ணே... " அப்படின்னு கோரிக்கை வச்சுட்டு வந்துருக்கோம்....//

    உங்க கோரிக்கய கேட்டுட்டு வீராசாமி 100 நாள் விழாவுல உங்கள எல்லாம் மீட் பண்றேன்னு சொல்லிட்டு போனாறாமெ...உன்மையா?

    ReplyDelete
  40. //படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசமே யாரு வெளியே வர்றாங்கறதுதான் முக்கியம்....... //

    அப்படி இல்ல படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசம் யாரு செத்தாங்க அப்படிங்கறது தான் முக்கியம் :-)

    ReplyDelete
  41. 150ஆ? சூப்பர்! கலக்கிட்டீங்க போங்க!

    ReplyDelete
  42. //"யம்மா கரடின்னு அலறிகிட்டு தலயோட இடுப்புல்ல ஏறி உக்காந்துக்க//

    இந்த கரடிக்கெல்லாம் பயப்படற ஆளுங்க இல்ல நாங்க. சங்கத்துல ரெகமண்ட் பண்ணி துபாயில ஒரு ஷோ ஒரே ஒரு ஷோ போடச்சொல்லுங்கண்ணே!

    ReplyDelete
  43. 150க்கு வாழ்த்துக்கள் வ வா ச. நகைச்சுவை, யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவை, எப்போதும் சிரிக்கவைக்கும் நகைச்சுவை தொடர்ச்சியாக கொடுப்பது பெரிய சிரமம். அதைச் செய்வது மிகப்பெரிய சாதனையே. 300 - 3000 எனப் பலகிப் பெருகி, சிரிக்க வையுங்கள்.

    டோண்டுவுக்கு அடுத்ததா தமிழ் வலைப்பதிவுகள்லே ஹாட் மேட்டர் வீராச்சாமிதான். (அதையும் தாண்டிடுச்சோ? சான்ஸே இல்லை). எல்லாருக்குள்ளும் இருக்கும் குறும்பு நரம்புகளை சீரியஸாகவே இருந்துகொண்டு எழுப்பும் டி ஆர் வாழ்க வாழ்க. இந்த நன்றிக்கடனுக்காகவே வீராச்சாமி பார்க்க முடிவெடுத்திருக்கிறேன். (எங்க ஊர்லே ரிலீஸ் ஆகாதுன்ற தைரியம் வேற:-)

    தம்பி... மேற்படி தினத்தன்னிக்கு அஜ்மான் போக ப்ளான் தானே?

    ReplyDelete
  44. விரைவில் சங்கத்தில் ஒரு கிளி வெளிநாடு பறக்க போவதாக செய்தி கசிந்துள்ளது.

    அவருக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. //அடிச்சாச்சி நூத்தம்பது!
    எல்லோருக்கும் ஊத்து நூத்திஎண்பது !!//

    ஜொள்ளுண்ணே... இதுக்கு பேருதான் அடுக்குமொழி கவுஜ'யா???

    ReplyDelete
  46. //எங்க ஊர்லே ரிலீஸ் ஆகாதுன்ற தைரியம் வேற:-)//

    தல

    சீடி வேணும்னா சொல்லுங்க! இங்க ஒருத்தர் இலவசமா தர்றாராம்.

    //தம்பி... மேற்படி தினத்தன்னிக்கு அஜ்மான் போக ப்ளான் தானே?//

    தவிர்க்க முடியாத சில காரணங்களால், (வேற ஒண்ணுமில்லிங்க ஆட்டைய அரேஞ்ச் பண்ண ஆளே படுக்கையில இருக்காப்புல) அடுத்த வாரத்துக்கு தள்ளி வெச்சிருக்காங்களாம்.

    ReplyDelete
  47. wow...
    150யா??? கலக்குங்க...
    treat எப்போ??

    நம்மளையும் ஆட்டத்துல சேத்துக்கிட்டதுக்கு ரொம்ப டாங்க்ஸுங்ணோவ் :)))

    ReplyDelete
  48. //படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசமே யாரு வெளியே வர்றாங்கறதுதான் முக்கியம்....... //

    அப்படி இல்ல படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசம் யாரு செத்தாங்க அப்படிங்கறது தான் முக்கியம் :-) //

    12B,

    கலக்கீட்டிங்க....... :) ROFL

    ReplyDelete
  49. /150ஆ? சூப்பர்! கலக்கிட்டீங்க போங்க! //

    நன்றி! மதுரை தங்கம்..... :)

    ReplyDelete
  50. //இந்த கரடிக்கெல்லாம் பயப்படற ஆளுங்க இல்ல நாங்க.//

    பின்னே.... புலி சிங்கத்துக்கு தான் பயப் படுவியா???

    // சங்கத்துல ரெகமண்ட் பண்ணி துபாயில ஒரு ஷோ ஒரே ஒரு ஷோ போடச்சொல்லுங்கண்ணே! //

    ஏலே நீ தற்கொலை முயற்சி பண்ணுறது பத்தாதுன்னு அடுத்தவங்களை வேறே கொல்லபார்க்கிறே???

    ReplyDelete
  51. //பின்னே.... புலி சிங்கத்துக்கு தான் பயப் படுவியா???//

    அதெல்லாம் செல்லப்பிராணிங்க :))

    உண்மைக்கும், சத்தியத்துக்கும், அன்புக்கும் கட்டுப்பட்டவங்க நாங்க எதக்கண்டாலும் எதிர்த்து நிப்போம்.

    ReplyDelete
  52. For myself and my wife, the latest top entertainment (besides animal channel that shows black and polar bears a lot): watching Veerachamy segment on the Pudupadam. Just the dance TR renders with Mumtaz makes our day. We are so excited, our 12 year old son also is now a big fan of TR after having validated his doubts such as "Does he really talk Tamil?". We really look forward to the Arattai Arangam ... your this blog post is a great preamble to the show setting a high expectation in our minds!
    ..ram
    PS: The above note is supposed to be a satire ;-). BTW, a well deserved 150!

    ReplyDelete
  53. //150க்கு வாழ்த்துக்கள் வ வா ச. நகைச்சுவை, யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவை, எப்போதும் சிரிக்கவைக்கும் நகைச்சுவை தொடர்ச்சியாக கொடுப்பது பெரிய சிரமம். அதைச் செய்வது மிகப்பெரிய சாதனையே. 300 - 3000 எனப் பலகிப் பெருகி, சிரிக்க வையுங்கள்.//


    மிக்க நன்றி சுரேஷ் அண்ணே,

    உங்களை போன்றோர் ஆசிர்வாததினால் மேலும் மேலும் உயரவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது :)

    //டோண்டுவுக்கு அடுத்ததா தமிழ் வலைப்பதிவுகள்லே ஹாட் மேட்டர் வீராச்சாமிதான். (அதையும் தாண்டிடுச்சோ? சான்ஸே இல்லை).//

    அண்ணன் வீராசாமி என்ற வாழும் வரலாற்று காவியத்தை எப்பிடி சங்கத்துக்கு கொண்டு வராமல் இருப்பது...???!!!
    இனிமேல் சங்கத்தின் அங்கமான பரட்டை அரங்கத்தை நம்ம அடுக்குமொழி வேந்தன் அண்ணன் டிஆர் நடத்த போகிறார்.... :)

    //எல்லாருக்குள்ளும் இருக்கும் குறும்பு நரம்புகளை சீரியஸாகவே இருந்துகொண்டு எழுப்பும் டி ஆர் வாழ்க வாழ்க. இந்த நன்றிக்கடனுக்காகவே வீராச்சாமி பார்க்க முடிவெடுத்திருக்கிறேன். (எங்க ஊர்லே ரிலீஸ் ஆகாதுன்ற தைரியம் வேற:-)///

    ஹிம்.. ஒங்களை நெக்ஸ்ட் மீட் பண்ணுறோம்..... :))))

    ReplyDelete
  54. //எங்க ஊர்லே ரிலீஸ் ஆகாதுன்ற தைரியம் வேற:-)//

    தல

    சீடி வேணும்னா சொல்லுங்க! இங்க ஒருத்தர் இலவசமா தர்றாராம்.//

    நம்ம தள இதைபத்தி எம்புட்டு எச்சரிக்கையா பதிவெல்லாம் போட்டுருந்தார்...... ஆனா இப்பிடி ஆகிட்டாரே??? யாருப்பா அந்த ரொம்ப நல்லவரு???

    ReplyDelete
  55. //விரைவில் சங்கத்தில் ஒரு கிளி வெளிநாடு பறக்க போவதாக செய்தி கசிந்துள்ளது.

    அவருக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.///

    வெட்டி எப்பப்பா இந்தியா வரபோறே???

    ஏலே கதிரு அதுக்கும் ஒரு பதிவை போட்டு கும்மிரு ராசா...... :)

    ReplyDelete
  56. //wow...
    150யா??? கலக்குங்க...
    treat எப்போ??//

    என்னது டீரிட்டா?? சங்கமே நஷ்டத்திலே போயிட்டு இருக்கு... இப்போதைக்கு செலவு பண்ணுறது நம்ம தல மட்டும் தான்.... அவரை பிடிச்சு பிரியாணி கேளுங்க...

    தல எப்பிடி அதெல்லாம் செய்வாரு'கிறதே நம்ம சியாம் சொல்லிருக்கிறதை மேலே படிச்சு பாரு தாயி.....

    இல்லைன்னா இப்போதைக்கு சங்கத்து இரும்பு பொட்டியிலே தல அழுதா அவரை சிரிக்க வைக்க ஆட்டி விளையாடுற கிலுகிலுப்பையும் அவருக்கு பிடிச்ச அரக்கு பச்சை ஜிகினா சட்டையும் இருக்கு.... அதே வேணுமின்னா பாதி விலைக்கு வித்து புளிப்பு மிட்டாயி வாங்கி சாப்பிடுங்க...... :))))

    //நம்மளையும் ஆட்டத்துல சேத்துக்கிட்டதுக்கு ரொம்ப டாங்க்ஸுங்ணோவ் :)))//

    தேவ் அண்ணனுக்கு ஜே!!!!!

    ReplyDelete
  57. //For myself and my wife, the latest top entertainment (besides animal channel that shows black and polar bears a lot): watching Veerachamy segment on the Pudupadam.//


    வாங்க ராம்,

    உங்களோட அந்த Compare ரொம்ப நல்லாயிருக்கு... வீராசாமி டிரெயலரை பார்த்திட்டே எனக்கு சோறுதண்ணி இறங்கமாட்டேன்னு சொல்லிருச்சு :)))

    //Just the dance TR renders with Mumtaz makes our day. We are so excited, our 12 year old son also is now a big fan of TR after having validated his doubts such as "Does he really talk Tamil?". We really look forward to the Arattai Arangam ... your this blog post is a great preamble to the show setting a high expectation in our minds!
    ..ram
    PS: The above note is supposed to be a satire ;-). BTW, a well deserved 150!//

    நீங்களும் ஒரு முடிவோட தான் காத்திட்டு இருப்பீங்க போல..... இனிமே ஞாயித்துகிழமை காலை 11.00 மணி எல்லாருக்கும் சிரிச்சே வயித்த வலிக்க போகுது....

    வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)