Thursday, November 2, 2006

எல்லாமே கைப்புள்ள மயம்


பாஸ்டன் பாலாஜி

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்திற்கு நூறாவது பதிவு. 'காதலன்' படத்தில் வடிவேலுவின் டிக்கி லோட் செய்வது போல் சிறப்பாக வெளிப்பட, ஸ்மைலி நிறையப் போட்டுத் தள்ளுவதாலோ என்னவோ, என்னை அழைத்திருக்கிறார்கள். ஏகோபித்த வரவேற்பையும் அன்றாட வாடிக்கையாளர்களையும் கொண்ட வ.வா.ச.வில் எழுத அழைத்ததற்கு நன்றி.

இவ்வளவு நாள், நீங்கள் ஆழ்துயிலில் அமிழ்ந்திருக்கா விட்டால் 'கைப்புள்ள லொள்ளு சபா'வாம் வவாச-வை மிஸ் செய்திருக்க முடியாது. அப்படி உறக்கத்தில் இருந்து விழித்தவர்களுக்காக அட்டெண்டன்ஸ் ரெகார்ட்.

வம்சாவளி:

holy shit.. look at that moneyyyyயூத்தாக இருக்கவேண்டும் என்றால் சிலர் தலைக்கு ஏசியன் பெயிண்ட்ஸ் உபயோகிப்பார்கள். நான் சட்டையை, பேண்ட்டுக்குள் திணித்து, ஜீன்ஸ், டி-சர்ட், அரைக்கால் சட்டை என்று ஒப்பேத்துவேன். பெயரிலேயே இளமையை கொண்டிருக்கும் இளாவை 'வாலிபமே வா வா'விற்கு அடையாளமாக வைத்திருக்கிறார்கள்.

தலைவர் கூட 'தேவுடா... தேவுடா' என்றழைப்பார். இந்தியாவில் கிரிக்கெட் ஜுரத்தை ஏற்றி, வாலிப வயோதிக அன்பர்களிடம் நாட்டுப்பற்றைக் கிளறிவிட்ட 1983 உலகக் கோப்பை பெற்றதும் தேவ். இங்கே வ.வா.ச.விற்கு வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று உசுப்பும் தேவ் இருக்கிறார்.

நாலைந்து பெரிய ஹீரோயின்கள் படத்தில் நடித்திருந்தால் 'தங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்' என்று டைட்டில் போட்டு இட்டுக் கட்டுவார்கள். 'நயன் தாரா பெயரை முதலில் சொன்னார்களா? ரீமா சென் பெயர் முதலில் வந்ததா?' என்னும் தலைப்பு பட்டியலை தவிர்க்க ஹீரோ கைப்புள்ள, சிங்க சங்கத்தில் தப்பிப் பிறந்த புலி நாகை சிவா, போன்ற வாஞ்சையான வாலிபர்களை வாஸ்து சாஸ்திர முறைப்படி இடம்பெற்றிருக்கும் சோத்தாங்கைப் பக்கம் டாப்பில் பார்க்கலாம்.

கல்வெட்டு:

Alhambra Calligraphyதான் பட்ட கஷ்டத்தை அடுத்தவனிடம் சொல்வது நகைச்சுவை. அடுத்தவன் பட்ட கஷ்டத்தை அவனிடமே, அவன் மனம் கோணாமல் சொல்வது அதனினும் பெரிய நகைச்சுவை.

திரைப்படத்திலோ, ஸ்டாண்ட்-அப் காமெடியிலோ, முக சேஷ்டை செய்யலாம்; வெள்ளித்திரையிலோ கைப்புள்ள என்னும் அந்தஸ்து; விவேக் வந்துட்டான்யா என்னும் எதிர்பார்ப்பு; கேலியான துள்ளல் பின்னணி இசை, என்று ஆயிரம் விதத்தில் சரியான சூழலை அமைத்துவிடலாம். வசனம் சிரிக்க வைக்காவிட்டாலும், ஏனோ சிரித்து விடுவோம்.

நகைச்சுவை எழுத உட்கார்ந்து, அடுத்தவனை அழ வைப்பதுதான், பலருக்கு கை வந்த கலை.

அந்த மாதிரி 'வேணாம்... விட்டுடு' என்று அலற வைக்காமல், குண்டக்க மண்டக்க பயணத்தை கலக்கிப் போட்டிருக்கும் வவாச-வின் பெருமை எவ்வாறு நிலைக்கும் என்றால்:

  • மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கு நாயகிகள் இறக்குமதியாகும் வரை நீடுழி நிற்கும்.

  • காபி, பேஸ்ட் செய்து இலக்கியம் படைக்கும் வலைஞர்கள் உள்ள வரை - வெட்டி, ஒட்டி, மின்னஞ்சல் பயணங்களை மேற்கொள்ளும்.

  • செயப்பாட்டுவினை தெரியாதவர்கள் காதல் கவிதை எழுதித் தள்ளும்வரை - காமெடிக் காவியத்தின் புகழ் வாழும்.

  • நயாகராவுக்கு சென்று படேல் வால்யூ காணும் இந்தியர்கள் இருக்கும்வரை - இனிப்பான நகைச்சுவை மகாத்மியம் பேசப்படும்.


இவ்வாறு சரித்திரத்தை சுருக்கமாக சொல்லலாம்.


வாழ்த்துகள்:

DSC00025இணையத்தில் சண்டை, சச்சரவு இல்லாவிட்டால் பதிவு புகழ் பெறாது. அந்த மாதிரி சுழலில் எல்லாம் சிக்காமல் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

அரசியல் கலக்காமல் எனக்கு நகைச்சுவை வராது. துளி பொடி, உள்குத்து, எதுவும் வைக்காத க்ளீன் காமெடி கொடுக்கிறார்கள்.

வலையில் குழு ஆரம்பிப்பது யாவருக்கும் எளிது. ஒருவரே இரு கதாபத்திரம் எடுத்துக் கொண்டால் கூட, 'நானே எனக்கு நண்பனில்லையே' என்று தன்னுடனே பிணக்கு கொண்டு, முறிந்து செல்லும் வலையின் நிர்ப்பந்தங்களில் இத்தனை பதிவுகளை ஒருங்கிணைப்புடனும், மங்காத ஊக்கத்துடனும் இட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.

பெயரில் மட்டும் 'வருத்தப்படாத' என்று வைத்துக் கொண்டு, கொண்ட கொள்கையில் நீர்த்துப் போய் சேரிய பதிவுகள் இட்டு, மேற்கொண்ட பயணத்தில் இருந்து வழுவாமல் நிலைத்து நிற்கிறார்கள்.

World of Smilies'வலைப்பதிவா... ஒரே போர். அக்கப்போர் அல்லது உப்பு, புளி சமாச்சாரம்' என்னும் அண்டை வீட்டாருக்கு மறுத்து மொழிய, மெல்லிய இதயங்களின் அணிவகுப்பாக்கி இருக்கிறார்கள்.

மனசு லேசாகணுமா? படிக்க சுகமா இருக்கணுமா? சாதாரணனுக்கு பரிந்துரைக்கணுமா? சஜஸ்ட் செய்யக்கூடிய பதிவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.

பிடித்தவை:

  • மாதமொரு அட்லாஸ் வாலிபரைப் பிடித்து, பச் பச் காய்கறி போன்ற புத்துணர்வுடன் காமெடி வாசம் வீசச் செய்வது.

  • போட்டோ போட்டாச்சு போன்ற சுருக் பதிவுகள்.

  • இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் (மட்டும்) அருமையாகத் தெரியும் வார்ப்புரு (டெம்ப்ளேட்).

  • கவிதைப் போட்டி- 1


    ஆபீசில் 'ஆப்பர்ச்சுனிட்டீஸ் ஃபார் இம்ப்ரூவ்மெண்ட்' என்று ஜல்லியடிப்பாங்களே... அந்த மேட்டர்:

    pirate con leche
  • இந்த text-align: justify; என்பது ஃபயர்ஃபாக்சுக்கு சரிப்படாது. எடுத்து விடலாம்.

  • 'காக்காய் கறி உண்ட மாவீரன்', 'பாவாடை சாமியாராக சித்து காட்டிய அண்ணன்' விவேக்கையும் ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.

  • சென்ற மாத அட்லாஸ் வாலிபர்களை, முகப்புப் பக்கத்தில் புகைப்படங்களுடன் தொகுத்து, அவர்களின் இடுகைக்கு சுட்டியைத் தரலாம்.

  • அடுத்த போட்டியை அறிவிக்கலாம்.

  • என்னைப் போன்ற வெள்ளெழுத்து வாலிபர்களுக்காக எழுத்துரு சைஸை பெரிதுபடுத்தலாம்.

  • கண்ணுக்குக் குளிர்ச்சியாக சூர்யா, விக்ரம், பிரசன்னா போன்றோரின் நிழற்படங்களை இடலாம். (இவர்களுடன் பூமிகா, அசின், நவ்யா நாயர் போன்றோருக்கும் கொசுறாக இடம் கொடுத்தால் சாலச் சிறந்தது.)

  • டுபுக்குவின் ஒரு பதிவை படித்தவர், அநேகமாக, க்ளிக் செய்து வேறெங்காவது ஓடிப் போய் விடுவார். இருந்தாலும், அவரின் மற்ற பதிவுகளையும் ஒரு சேரப் படிக்க விரும்புவோருக்கு வசதியாக, சிங்கங்கள் ஒவ்வொருவரின் பதிவையும் தனித்தனியே தொகுத்து வழங்கலாம்.

  • குழு என்பது உறுப்பினர்களுக்காகவே என்பது உண்மையே என்றாலும், சங்க சிங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஆக்கங்களைக் குறைக்கலாம். அல்லது புகைப்படங்களை ஆங்காங்கே இட்டு சுவாரசியம் கூட்டலாம்.


    சங்கத்தின் புகழ் திக்கெட்டும் பரப்புபவர்களில் சிலரை டெக்நொரட்டி துணையுடன் வலைவீசிப் பிடித்தேன்:

    Five Muppets. Ah ah ah. One Line Up. No Coincidence.
  • kadalaimittai - Adiya

  • Chennainetwork.com - Website about Chennai - Tamil Blogs

  • ஜொள்ளுப் பட்டறை

  • இலவசம்

  • Dhinamum Ennai Kavani

  • VamBlogs

    முழுதும் அறிய: Technorati Search: vavaasangam.blogspot.com

    வாய்ப்புக்கு நன்றி. வெல்க சிரிப்பு சங்கம்.
    :)))
  • 39 comments:

    1. உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் சங்கம் சிரம்தாழ்ந்து நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறது.
      //இந்த text-align: justify; என்பது ஃபயர்ஃபாக்சுக்கு சரிப்படாது. எடுத்து விடலாம்.//
      உங்கள் முதல் கருத்தை ஏற்றுக்கொண்டு சரி செய்தாகிவிட்டது. மற்றவர்களின் சரியான கருத்தை சங்கம் என்றும் ஏற்றுக்கொள்ளும்.

      ReplyDelete
    2. இந்த வார அட்லாஸ் நிலவு நண்பன் தலையில் தானே ? ;)

      பாலா, படமெல்லாம் ஜோரா இருக்கு... :)))

      ReplyDelete
    3. //இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் (மட்டும்) அருமையாகத் தெரியும் வார்ப்புரு (டெம்ப்ளேட்).//
      பாலா இப்போது நெருப்பு நரியிலும் நன்றாக தெரிவதாக தகவல் வந்துள்ளது.
      இதனை எங்களுக்கு எடுத்துசொன்ன கொத்ஸ்க்கும், உங்களுக்கும் நன்றிகள் பல.

      ReplyDelete
    4. வ. வா சங்கத்தில் பாபாவா?- தெய்வமே.. தெய்வமே

      ReplyDelete
    5. பாஸ்டன் பாலா,
      100 பதிவை தாங்கள் போட்டு எங்களை பெருமைப்படுத்தியதற்கு சங்கத்தின் சார்பில் என் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கின்றேன்.

      ReplyDelete
    6. //வ. வா சங்கத்தில் பாபாவா?- தெய்வமே.. தெய்வமே //

      உஷாக்கா, ஏன் இந்த ஆச்சரியம்.... அதிர்ச்சி எல்லாம்....

      ReplyDelete
    7. /பாலா, படமெல்லாம் ஜோரா இருக்கு... :))) //

      ஆமாங்க டக்கராக்கீது. சங்கத்துக்காவே தேடிப் புடிச்சு போட்டு இருக்கார் போல நம்ம பா.பா.

      ReplyDelete
    8. சங்கத்தின் 100வது பதிவினை எழுதி சிறப்பித்த நட்புக்குரிய பாபாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

      ReplyDelete
    9. சங்கத்தின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் நின்று வழிகாட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் இனிய நன்றிகள்

      ReplyDelete
    10. 100வது பதிவு காணும் நேரத்தில் இந்தக் கூட்டுப் பதிவு துவங்க காரணமாய் இருந்த பொன்ஸ் அக்காவுக்கு சங்கம் தன் இனிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

      ReplyDelete
    11. சங்கத்தின் நூறாவது பதிவை ஒரு திறனாய்வு பதிவாக எழுதிச்
      சிறப்பித்த பாஸ்டன் பாலா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த
      நன்றிகள்.

      சங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து
      வலைப்பூ நண்பர்களுக்கும், சங்க வலைப்பூவைப் போர்வாள் தேவுடன் இணைந்து தொடக்கிய ஆற்றலரசி பொன்ஸுக்கும், முதன்முதலாக கைப்புள்ளையைக் கலாய்ப்பதை ஆரம்பித்து வைத்த தளபதியார் நாமக்கல் சிபிக்கும், மற்றும் தேவ், இளா, ஜொள்ளுப்பாண்டி, நாகை சிவா, வெட்டிப்பயல், ராசுக்குட்டி ஆகியோருக்கும், இது வரை சங்கத்தில் அட்லாஸ் வாலிபர்களாக இருந்து எங்களைப் பெருமை படுத்திய இலவசக்கொத்தனார், ராசா, பெனாத்தல் சுரேஷ், டுபுக்கு, (வரவிருக்கும் அட்லாஸ்) நிலவு நண்பன் ஆகியோருக்கும் நூறு பதிவுகள் கண்ட இம்மகிழ்ச்சியான வேளையில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

      ReplyDelete
    12. வாழ்த்துக்கள்

      100 பதிவுக்கு...

      ReplyDelete
    13. சங்கத்து அழைப்பை ஏற்று சிற(ரி)ப்பித்த பாபா அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றிகள் பல...

      //'காக்காய் கறி உண்ட மாவீரன்', 'பாவாடை சாமியாராக சித்து காட்டிய அண்ணன்' விவேக்கையும் ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.//
      கண்டிப்பாக... சீக்கிரம் விவேக்கை சங்கத்தில் எதிர்பார்க்கலாம் :-)

      //டுபுக்குவின் ஒரு பதிவை படித்தவர், அநேகமாக, க்ளிக் செய்து வேறெங்காவது ஓடிப் போய் விடுவார். இருந்தாலும், அவரின் மற்ற பதிவுகளையும் ஒரு சேரப் படிக்க விரும்புவோருக்கு வசதியாக, சிங்கங்கள் ஒவ்வொருவரின் பதிவையும் தனித்தனியே தொகுத்து வழங்கலாம்.//
      விரைவில் செய்து முடிக்கப்படும்...


      //பூமிகா, அசின், நவ்யா நாயர் போன்றோருக்கும் கொசுறாக இடம் கொடுத்தால் சாலச் சிறந்தது//
      மக்கா, நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா...

      ReplyDelete
    14. போட்டோக்கள் அருமை... டிப்பிக்கல் பாபா பஞ்ச் :-)

      ReplyDelete
    15. மக்களே!!! நீங்களும் உங்கள் கருத்துக்களை சொல்லலாம்...

      கம் ஆன் ஸ்டார்ட் த மியுசிக் :-))

      ReplyDelete
    16. @இளா
      ---சரி செய்தாகிவிட்டது. ---

      எள்ளுன்னா எண்ணெய்யா நிற்கிறாயே என்பார்கள்! (பார்த்திபன் நியாயமாக எதிர் கேள்வி போடுவார்: 'நான் எள்ளுதானே கேட்டேன்... எண்ணெயையா கேட்டேன்?' அது வேறு விஷயம் : )

      அதிரடி இளாவிற்கு நன்றி. தீநரியிலும் சிறப்பாக தெரிகிறது.

      ReplyDelete
    17. 100க்கு வாழ்த்துக்கள்!!

      ReplyDelete
    18. வாருங்கள் பாபா ---/\---

      ReplyDelete
    19. மைக் கிடச்சா போதுமே ஆளாளுக்கு ஆரம்பிச்சுட்டாங்க....எலக்சன் மேடை எல்லாம் தோத்துது போங்க....நானும் கேனை மாதிரி இல்லாம...ரெடி மைக் டெஸ்டிங் 1....2....3..... :-)

      ReplyDelete
    20. பேரன்பு கொண்ட பெரியோர்களே தாய்மார்களே (அப்புடி யாரும் இங்கன வர மாட்டீங்கனு தெரியும்)...சங்கத்து சிங்கங்களே...மாதம் மாதம் வந்து ஆப்பு வாங்கும் அட்லாஸ் வாலிபர்களே...சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இங்கே வந்து 100 வது பதிவு இட்டு சங்கத்தையும் எங்களயும் கவுரவித்த தமிழ் வலையுலகின் சிங்கம்,பாஸ்டனின் விடிவெள்ளி அண்ணன் பாலா அவர்களுக்கு இந்த சந்தர்பத்தில் நன்றி கூறி...பேச சந்தர்பம் அளித்த அனைவருக்கும் (என்னாது அப்படி யாரும் இல்லயா) நன்றி கூறி விடை பெருகிறேன் நன்றி வணக்கம் :-)

      ReplyDelete
    21. //பூமிகா, அசின், நவ்யா நாயர் போன்றோருக்கும் கொசுறாக இடம் கொடுத்தால் சாலச் சிறந்தது//

      //மக்கா, நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா... //

      நம்ம கண்ணுலயெல்லாம் முதல்ல படுறது இதுதான...என்ன இருந்தாலும் அண்ணன் நமக்கு சப்போர்ட்னு நிரூபிச்சுட்டாரு :-)

      ReplyDelete
    22. //Syam said...

      மைக் கிடச்சா போதுமே ஆளாளுக்கு ஆரம்பிச்சுட்டாங்க....எலக்சன் மேடை எல்லாம் தோத்துது போங்க....நானும் கேனை மாதிரி இல்லாம...ரெடி மைக் டெஸ்டிங் 1....2....3..... :-) //
      மைக் நல்லா வேலை செய்யிது...

      சொற்பொழிவை ஆரம்பிக்கலாம் ;)

      ReplyDelete
    23. வந்துட்டேன்யா வந்துட்டேன்.

      100வது பதிவு இட்டு சிறப்பித்த பாஸ்டன் பாஸூக்கு நன்றி

      ReplyDelete
    24. //நன்றி கூறி விடை பெருகிறேன் நன்றி வணக்கம் :-)//
      அதென்ன எல்லாரும் மீட்டிங்ல பேசி முடிச்ச பின்னாடி விடை பெற்றுக்கொள்வது? ஏன் கேள்வி பெறக்கூடாதா?

      ReplyDelete
    25. //நம்ம கண்ணுலயெல்லாம் முதல்ல படுறது இதுதான...என்ன இருந்தாலும் அண்ணன் நமக்கு சப்போர்ட்னு நிரூபிச்சுட்டாரு :-)//

      ஆமாம்பா...
      அப்படியே இலியானா, ஜெனிலியா, த்ரிஷா, அனுஷ்கா போட்டோவெல்லாம் பொட்டுடலாம் :-)

      ReplyDelete
    26. //பூமிகா, அசின், நவ்யா நாயர் போன்றோருக்கும் கொசுறாக இடம் கொடுத்தால் சாலச் சிறந்தது//

      ஜொள்ளுப்பாண்டியின் சிறப்பு நடிகை இந்த லிஸ்ட்டில் இல்லாதது பெருத்த ஏமாற்றம்

      ReplyDelete
    27. //அதென்ன எல்லாரும் மீட்டிங்ல பேசி முடிச்ச பின்னாடி விடை பெற்றுக்கொள்வது? ஏன் கேள்வி பெறக்கூடாதா? //

      ஹி ஹி நம்ம கிட்ட இல்லாதத தான் பெற ஆசை படுவோம்..ஒன்னாவதுல இருந்து நமக்கு தெரியாதது இந்த பாழாப்போன விடை ஒன்னு தான :-)

      ReplyDelete
    28. //ஆமாம்பா...
      அப்படியே இலியானா, ஜெனிலியா, த்ரிஷா, அனுஷ்கா போட்டோவெல்லாம் பொட்டுடலாம் :-) //

      //ஜொள்ளுப்பாண்டியின் சிறப்பு நடிகை இந்த லிஸ்ட்டில் இல்லாதது பெருத்த ஏமாற்றம் //

      அண்ணன் புள்ளி வெச்சு குடுத்துட்டாரு...நம்ம இண்டர்நேசனல் ஹைவே போட்டுக்க வேண்டியது தான் :-)

      ReplyDelete
    29. சங்கத்துல நூறா!
      கேக்கவே சந்தோஷமா இருக்கு.
      மேலும் பல நூறுகள போட்டு மக்கள சிரிக்க வைங்க சங்கத்து சிங்கங்களே!

      ReplyDelete
    30. //ஹி ஹி நம்ம கிட்ட இல்லாதத தான் பெற ஆசை படுவோம்..ஒன்னாவதுல இருந்து நமக்கு தெரியாதது இந்த பாழாப்போன விடை ஒன்னு தான :-)//

      நம்ம எல்லாம் ஒரே இனம் தான :-)

      ReplyDelete
    31. நூறு போட்டுவிட்டு ஆடாம நிக்கும் நம்ம சங்கத்து சகாக்களுக்கு வாழ்த்துக்கள்.

      நூறைப்போட பாபாவை அழைத்தது உங்க சீரியஸ்னெஸ காட்டுது..

      //அடுத்த போட்டியை அறிவிக்கலாம். //

      பாபா கூடவே முதல் போட்டிக்கு முடிவ அறிவிக்கச் சொல்லுங்க.

      ReplyDelete
    32. This comment has been removed by a blog administrator.

      ReplyDelete
    33. //பூமிகா, அசின், நவ்யா நாயர் போன்றோருக்கும் கொசுறாக இடம் கொடுத்தால் சாலச் சிறந்தது//

      நயன்தாரா பெயரை இருட்டடிப்பு செய்ததை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஜொள்ளுப் பாண்டி புகழ் நமீதா பெயரை இருட்டடிப்பு செய்ததற்காக ஜொள்ளுப் பாண்டியின் சார்பாகவும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

      ReplyDelete
    34. 100 வது பதிவை சிறப்புற வந்து பதிவு செய்தமைக்கு பாஸ்டன் பாலா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

      நூறாவது பதிவைக் கொண்டாடும் சக சங்கத்து சிங்கங்களுக்கும், சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், சங்கத்தின் தலையாய உறுப்பினராம் தலை கைப்புள்ளை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

      சங்கத்தின் பதிவுகளை ரசித்து, சிரித்து, உற்சாகமும், ஊக்கமும் வரும் வாசக உள்ளங்களுக்கும் இச்சிஅளித்து வரும் வாசக உள்ளங்களுக்கு சிச்சிறப்பான வேளையிலே நன்றி சொல்வதில் பெருமை அடைகிறேன்.

      தமிழ்ப் பதிவுகளை தொகுத்து உலகளாவிய தமிழ்ப்பதிவர்களை இணைக்கும் ஊடகமாய் சீரிய பணியாற்றிவரும் தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளின் நிர்வாகிகளுக்கும் என் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி

      ReplyDelete
    35. wow!! 100th blog!! great ..congrats!! as Bala said ..this blog is a huge success coz of its simplified humor..welldone lions ;-) Keep it up! we expect more and more form u!!

      ReplyDelete
    36. 100 அடிக்கறது முக்கியம் இல்ல 100 பேர் வந்து வாழ்த்துறாங்களாங்கற்து தான் முக்கியம்...

      இந்த பஞ்சை கவனி... ரோட்டுல்ல ஒழுங்காப் பயணி...

      அடுத்த அட்லாஸ் வாலிபரா என்னியத் தான் கூப்பிடணும்.. மாத்திக் கூப்பிட்டா... (இங்கே பாட்ஷா மிஜிக் போட்டுக்கோங்க...) இப்போ நான் வர்றேன்...

      ReplyDelete
    37. நல்ல பதிவு

      வாழ்த்துகள் பாபா
      உங்களுக்கும் வ.வா. சங்கத்துக்கும்

      அதுசரி பாபா
      உங்களுக்கு மட்டும் எப்படி ஒரு நாளைக்கு நூறுமணிநேரம் கிடைக்குது???

      ReplyDelete
    38. 100க்கு வாழ்த்துக்கள்.

      மேன்மேலும் பல சதங்கள் அடிக்க( இருங்க.. இருங்க.. நான் கைபுள்ளய சொல்லல.. ) வாழ்துக்கள்.

      ReplyDelete
    39. சதம் கண்ட சங்கத்திற்கு வாழ்த்துக்கள். அதனை கொண்டாட சரியான ஆளைத்தான் பிடித்திருக்கிறீர்கள். அருமையான பதிவு. சூப்பர் பாபா.

      அப்புறம் நமக்கும் நன்றி எல்லாம் சொல்லி இருக்கீங்க. அதுக்கு நம்ம பதில் நன்றி சாமிங்களா.

      ReplyDelete

    இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)