Sunday, October 8, 2006

ஞாபகம் வருதே...

தமிழ் திரைப்படங்கள் கேன்ஸரை விட்டு விட்டு செல்க்டிவ் அம்னிஷியாவை கையிலெடுப்பதற்கு முன்னரே எனக்கு சின்ன வயதிலேர்ந்து இந்த வியாதி உண்டு. "ஜிஞ்ஜினக்கு ஜனக்கு சொல்லித் தரேன் கணக்கு"- பாட்டெல்லாம் கரெக்டாக நல்லா நியாபகம் இருக்கும் ஆனால் ஒன்பதும் பன்னிரெண்டும் எவ்வளவுடா என்றால் திருதிருதரேஷ்வரா தான். இதில் தெரிந்த குடும்ப வட்டத்தில் ஒரு மாமா மனக்கணக்கு போட்டால் தான் புத்திசாலிப் பட்டம் வழங்குவார். தெருவில் கல்யாணம், சீமந்தம் எல்லாத்திலும் என்னைப் போன்ற வாண்டுகளைப் பிடித்து வைத்துக் கொண்டு "ஐந்து மாம்பழத்தை நான்கு பேர்களுக்கு சமமாய் பங்கு போட்டுக் குடுக்கனும்னா எத்தனை துண்டங்கள் போடவேண்டும்" என்று அமிதாப்பச்சன் மாதிரி கேள்வியெல்லாம் கேட்பார். "நறுக்க வேண்டாம் அப்படியே காக்கா கடி கடிச்சுக்கலாம்"னு சொன்னா ஒத்துக் கொள்ள மாட்டார். "ஒருத்தன் பத்து எருமைகளை குளிப்பாட்ட போன போது இரண்டு எருமைகள் ஆத்தோடு போச்சு, ஒரு எருமை தானா வீடு வந்து விட்டது..அப்போ அவன் திரும்ப வரும் போது எத்தனை எருமைகளை ஓட்டிவருவான்"- வித விதமாய் கணக்கு கேட்பார். பேப்பர் பேனாலாம் கிடையாது. விரலை மடக்க கூடாது எல்லாம் மனக் கணக்கு தான்.அவரப் பார்த்தாலே நான் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொள்வேன். உள்ளே விரலை மடக்கி கூட்டிக் கழித்து விடையைச் சொன்னால் "தப்பு...இதுக்குத் தான் வெண்டைக்காய் நிறைய சாப்பிடனும்..அப்போ தான் நியாபக சக்தி நிறைய வரும் " என்பார். மாம்பழம் பங்கு போடறதுக்கும், எருமை மாட்டைக் குளிப்பாட்றதுக்கும் போய் எவனாவது கொழ கொழ வெண்டைக்காயை சாப்பிடுவானா என்று புத்திசாலித்தனமாய் இருந்ததில், சின்ன வயதிலிருந்தே சயன்ஸில் வீக், அத்தோடு இந்த செலக்டிவ் அமினிஷியா வியாதியும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்க தாத்தாவைப் பொறுத்த வரை மனக்கணக்கு அவிழ்த்து விட்ட குதிரை மாதிரி ஓடவேண்டும் என்பார். எங்க...எனக்கு கணக்கு பேச்சு எடுத்தாலே நம்மள அவிழ்த்து விட்டா ஓடிவிடலாம் என்று தான் தோன்றும். கணக்கு மட்டும் இல்லை மற்ற பாடங்களும் பரீட்சை வரை தான் நியாபகம் இருக்கும் அப்புறம் நாமா இதைப் படிச்சு எழுதினோம்ன்னு இருக்கும். அப்புறம் தான் இது படிப்பு பிரச்சனை இல்லை நியாபகமறதிப் பிரச்சனை என்று தெளிவாச்சு. கல்யாண நாளை கேட்டால் டக்கென்று சொல்லிவிடுவேன் ஆனால் வருஷத்தை கேட்டால் சில சமயம் கஜினி மொட்டை சூர்யா மாதிரி மண்டைய அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டி பத்து விநாடி ஆகும் விடை வருவதற்கு. முதலில் வீட்டுக்காரியின் பிறந்தநாளும் இப்படித் தான் இருந்தது அப்புறம் வேப்பிலையடித்ததில் சரியாகிவிட்டது. வீட்டில் இந்த விஷயத்தில் கொஞ்சம் கெட்டி. பேப்பர் பேனா கிடைக்காவிட்டால் இந்த நமபரை கொஞ்சம் நியாபகம் வைச்சுக்கோ என்று சொல்லி விட்டு அப்புறம் கேட்டால் டாண் என்று வரும். ஆனால் அதான் எனக்குப் பிரச்சனையே. "கல்யாணப் பரிசு" தங்கவேலு மாதிரி அடிக்கடி மாட்டிக்கொள்வேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மாதிரி இப்பவும் பயப்படுவது ஒரு விஷயத்துக்கு என்றால் அது கோயிலில் அர்சனைக்குத் தான்.(ஹூம் கோயிலுக்குப் போறதே ரொம்ப அபூர்வமாகி விட்டது இப்பவெல்லாம்). குடும்ப சகிதமாய் போய் தான் அர்சனை வைப்போம் என்பதால் வசமாய் மாட்டிக்கொள்வேன். அர்சகர் அர்சனை சீட்டைக் குடுத்தால் பூஜை செய்வார் என்ற பாடு கிடையாது. பெயர் நட்சத்திரம் கேட்க ஆரம்பித்துவிடுவார். நமக்கு அங்கே தான் உதறலே..தங்கமணி குஷியாய் பின்னால் இருந்து நமுட்டுச் சிரிப்புடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பார். 99 சதவீதம் பெயர் மட்டும் தான் கரெக்டாக இருக்கும் நட்சத்திரத்தை குழப்படி செய்துவிடுவேன். அப்புறம் தங்கமணி புகுந்து கரெக்ட் செய்து அம்மனுக்கு சாதா அர்ச்சனையும் எனக்கு தங்கமணியின் கடைக்கண் ஸ்பெஷல் அர்சனையும் நடக்கும். "நான் தடுமாறும் போது உனக்கு ஒரு அல்ப சந்தோஷம் பாரு...அதுக்காகததான் இதெல்லாம்...உங்கண்ணன்கிட்ட உன்ன சந்தோஷமா வைச்சிகிறேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்...அதுக்குத் தான் இந்தமாதிரியெல்லாம்" ஹூம்...என்ன சமாளித்தாலும் எடுபடாது கோயிலில் துப்ப முடியாது என்பதால் "க்ர்ர்ர்ர்ர்..." என்று பி.ஜி.எம்முடன் நிப்பாட்டிக் கொள்வார்.

பெரும்பாலான கல்யாணமான பெண்களிடன் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. கல்யாணமான புதிதில் நடந்த ஸ்டாடிஸ்டிக்ஸில் எல்லாம் நோண்டி நொங்கெடுப்பார்கள். இந்த ஹோட்டல் நியாபகம் இருக்கா? ...இந்த புடவை நியாபகம் இருக்கா?.. எங்க எனக்கு இனிமே நடக்கப் போறதே நியாபகம் இருக்காது இதுல எப்பவோ நடந்ததெல்லாம் கேட்கவே வேண்டாம். ஆனா வாயக் குடுத்து மாட்டிகிறது கூட பொறந்த குணம். "சலங்கை ஒலி ஜெயப்பிரதா இதே கலரில் புடவை உடுத்திக் கொண்டு வருவாரே" என்று ஒரு தரம் சொல்லி அன்னிக்கெல்லாம் ஏக மரியாதை தான்.

சரி இந்தப் பிரச்சனையை இதுக்கு மேலும் வளரவிடக் கூடாது என்று இப்பவெல்லாம் வெண்டைக்காய் நிறைய சாப்பிடறேன்...ஆனா சலங்கை ஒலி ஜெயப்பிரதா மாதிரியான ஸ்டாஸ்டிக்ஸ் மட்டும் தான் நியாபத்துல நிக்குது. இந்த செலெக்டிவ் அமினீஷியாவிற்கு என்னிக்கு விடிவு காலம் பொறக்குமோ தெரியல. "சலங்கை ஒலி" ஜெயப்பிரதா தான் நல்ல வழி காட்டனும் !!

31 comments:

  1. //அவரப் பார்த்தாலே நான் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொள்வேன்//

    பாக்கெட்டுக்குள் பாக்கெட் இருந்ததா என தெளிவு படுத்தவும் :)

    பதிவு மிக அருமையாக உள்ளது. கடைகண்ணால் அர்சனை பெண்களின் புது style போலும் !!

    ReplyDelete
  2. சரி, இப்ப என்ன சொல்ல வரீரு? இவ்வளவு நேரம் படிச்சதுல முதல்ல சொன்னது மறந்து போச்சு. :)

    ஆனா உலகத்தில் எனக்கு மட்டும் இந்த பிரச்சனை இல்லை என்பதை தெரிஞ்சுக்கும் பொழுது மனசு லேசாவது உண்மைதான். ஹிஹி.

    //பேப்பர் பேனாலாம் கிடையாது. விரலை மடக்க கூடாது எல்லாம் மனக் கணக்கு தான்.// அட இதுக்கெல்லாம் டெக்னிக் இருக்குங்காணும். நம்ம குரூப்பில் ஒரு பையனை அந்த மாமா அல்லது தாத்தாவின் பின் நிற்க வைக்க வேண்டும். அப்புறம் என்ன? அவன் கையில் இருக்கும் விரல்களை எண்ண வேண்டியதுதான். சமயத்தில் 10க்கு மேல் விடை போக பை ரன்னர் எல்லாம் அனுப்ப வேண்டிய கட்டாயம் வரும். அந்த பையன் தப்பு பண்ணினா அவனுக்குப் பொது மாத்து கிடைக்கும். ஜாலியா இருக்கும்.

    என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்? சரி, விடுங்க. ஆமா அடுத்தவங்களை கலாய்க்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு இங்கயும் வந்து உங்க ராமாயணத்தையே எழுதுனா என்ன அர்த்தம்?

    நம்ம பின்னூட்டம் போட்டா பதிவு மாதிரி இருக்குன்னு திட்டறாங்க. இதோட நிறுத்திக்கறேன்.

    ReplyDelete
  3. //முதலில் வீட்டுக்காரியின் பிறந்தநாளும் இப்படித் தான் இருந்தது அப்புறம் வேப்பிலையடித்ததில் சரியாகிவிட்டது.//
    :))
    டுபுக்கு, இந்த மாதிரி எத்தனை முறை வேப்பில்லையடி வாங்கிருக்கீங்க??

    -விநய்*

    ReplyDelete
  4. நல்ல நகைச்சுவைப் பதிவு. மிக இயல்பான நடை . வளரும் தேவன், கல்கி வாரிசே, வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  5. //"சலங்கை ஒலி ஜெயப்பிரதா இதே கலரில் புடவை உடுத்திக் கொண்டு வருவாரே"//

    பின்ன, மரியாதை செய்யாம கொஞ்சுவாங்களா? Anyway எனக்கு நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா தான் பிடிக்கும், முதல்ல உங்கள நீங்களே கலாய்ச்சுக்கிட்டு அப்புறம்தான் மத்தவங்கன்னு தெளிவா இருக்கீங்க போல...

    வழக்கம்போல காமெடி பட்டய கெளப்புது!

    ReplyDelete
  6. //கோயிலில் துப்ப முடியாது என்பதால் "க்ர்ர்ர்ர்ர்..." என்று பி.ஜி.எம்முடன் நிப்பாட்டிக் கொள்வார்.//
    //முதலில் வீட்டுக்காரியின் பிறந்தநாளும் இப்படித் தான் இருந்தது அப்புறம் வேப்பிலையடித்ததில் சரியாகிவிட்டது.//

    கலகல்!!! thangamani அக்கா வெண்டைகாய் சமயல் tips அனுப்பவா??;-)
    அனுபவம் பேச வைக்குது!!

    ReplyDelete
  7. Kalkureyapa dubbukku! Promis panni matiketi'a:)

    ReplyDelete
  8. கை நிறைய சாக்லேட் அதில பாதிய மொதல்ல பார்த்த ஒருத்தனுக்கும், மிச்சம் இருக்கிறதில பாதிய அடுத்தவனுக்கும் கொடுத்து, மீதமிருக்கிறதுல பாதிய மூன்றாமவனுக்கும் கொடுத்து போக பாக்கி கையில் 2 சாக்லேட் இருந்ததுன்னா மொதல்ல இருந்த சாக்லேட் எத்தனை அப்ப்டின்னெல்லாம் கனக்கு போட்டதில்லையா நீங்க. அதிர்ஷ்டசாலி ரங்கா.

    ReplyDelete
  9. எங்க ஊர் தாத்தா ஒருவர், 'மூன்றரை நாலரை பைசாவுக்கு ஏழரை எட்டரை வாழக்காய்ன்னா பைசாவுக்கு எத்தனை வாழக்காய்' என்ற கணக்கை தன் வாழ் முழுதும் சொல்லி போயே போய்ட்டார்.

    என்றாலும் வாழ்ந்த மனிதர்கள் அனுபவத்தை கேட்பதிலே மன மகிழ்ச்சி இருந்தது.

    ReplyDelete
  10. Hi

    Sorry for the spam, but I think you will be interested in www.pdstext.com, an online Unicode word processor for Tamil and English that we have developed.

    You can also use the site search Google, Yahoo! and MSN in Tamil.

    I look forward to your feedback. If you like the service, do spread the word among Tamil-speaking friends.

    C Ramesh

    ReplyDelete
  11. Dubukku,

    Unga Web-site ilirundhuthaan inga vandheyn. Ooru vittu ooru vandhu kalakareenganna, ippadi URI vittu URI vandhum kalakkareenga. :):):)

    SLN

    ReplyDelete
  12. அண்ணே கலக்கிட்டீங்க செலக்ட்டிவ் அம்னீஷியால ஆரம்பிச்சு செயப்ரதால முடிச்சு இருக்கீங்க...உங்க அறிவே அறிவு...

    இது உள்குத்து எல்லாம் இல்ல...ஆப்பு வெய்க்க மறுபடியும் வருவேன்...

    ReplyDelete
  13. //ஐந்து மாம்பழத்தை நான்கு பேர்களுக்கு சமமாய் பங்கு போட்டுக் குடுக்கனும்னா எத்தனை துண்டங்கள் போடவேண்டும//

    பங்கு போடுவதுக்கு முன்னாடி இன்னொரு மாம்பழம் திருட வேண்டும்னு சொன்னீங்களா :-)

    ReplyDelete
  14. //மாம்பழம் பங்கு போடறதுக்கும், எருமை மாட்டைக் குளிப்பாட்றதுக்கும் போய் எவனாவது கொழ கொழ வெண்டைக்காயை சாப்பிடுவானா என்று புத்திசாலித்தனமாய் இருந்ததில், சின்ன வயதிலிருந்தே சயன்ஸில் வீக், அத்தோடு இந்த செலக்டிவ் அமினிஷியா வியாதியும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.//

    சயன்ஸில வீக்கா? இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு செலக்டிவா இருக்க கூடாது

    ReplyDelete
  15. //டக்கென்று சொல்லிவிடுவேன் ஆனால் வருஷத்தை கேட்டால் சில சமயம் கஜினி மொட்டை சூர்யா மாதிரி மண்டைய அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டி பத்து விநாடி ஆகும் விடை வருவதற்கு. முதலில் வீட்டுக்காரியின் பிறந்தநாளும் இப்படித் தான் இருந்தது அப்புறம் வேப்பிலையடித்ததில் சரியாகிவிட்டது. //

    ஹா...ஹா...ஹா. வெண்டைக்காய் புடிக்கலைன்னா வல்லாரை சாப்பிடலாம் இல்ல? இப்படி எத்தனை காலத்துக்குத் தான் அர்ச்சனை வாங்குவீங்க? இப்படியே போனா ஏஞ்சலினா அம்பாளும், சலங்கை ஒலி ஜெயப்பிரதாவும் உங்களைக் காப்பாத்துனா தான் உண்டு.
    :)

    ReplyDelete
  16. இந்த பாக்கெட்டில் கை விட்டு எண்ணும் கதை தெரியுமா? ஆனால் அது கொஞ்சம் அடல்ட்ஸ் ஒன்லி. உங்களுக்கு இன்னமும் பேவரிட் ஜெயப்பிரதாவா? வணக்கம் பெரிசு.

    ReplyDelete
  17. //சாப்பிடுவானா என்று புத்திசாலித்தனமாய் இருந்ததில், சின்ன வயதிலிருந்தே சயன்ஸில் வீக//

    பங்கு அண்ணன் என்ன சொல்றாருனா...தப்பி தவறி கூட கணக்குனு சொல்லிட மாட்டார்...எதுக்கு வம்புனு :-)

    ReplyDelete
  18. அய்யா யோசிக்கிற பீரங்கியாரே நீங்க யாரை வச்சு இந்தப் பதிவைப் போட்டிங்களோ அவர் வந்த மாதிரியேத் தெரியல்ல... ம்ம் அடங்குடா மவனேன்னு அவரை அடக்கி வச்சிட்டீங்களா:)

    ReplyDelete
  19. Hilarious post!

    எனக்கு என்னோட முதல் பிறந்தநாள் ட்ரெஸ் முதற்கொண்டு எல்லாம் ஞாபகம் இருக்கு, ஆனா அந்த முக்கியமான பில்லை, ஒதுங்க வைக்கிறேன் பேர்வழினு, எங்க வைச்சேன்னுதான் தெரியாது :(

    After making a few late payments, now The Mr handles all paperwork :D
    ஜாலியோ ஜிம்கானா!

    இங்க வாலிபிகளும் Comment பண்ணலாம்ல? :)

    ReplyDelete
  20. Hi.. Chancella ponga.. pinni putinga....
    aaanalum salangai oli.. konjam over....

    ReplyDelete
  21. மன்னிக்கவும். ஆபிஸில் பெண்டு நிமித்தறாங்க...வாராஇறுதியில் வந்து பதில் போடுகிறேன். தயவு செய்து பொறுத்தருள்க !!

    ReplyDelete
  22. அண்ணே/ அக்கா - வெவகாரமா கேக்கறீங்க...நான் நல்ல பையன். பாக்கெட் இருந்தது :)

    கொத்ஸ் - சீனியர் சீனியர் தான் ஜூனியர் ஜூனியர். இந்த டெக்னிக்கெல்லாம் நமக்குத் தெரியாம போச்சேய்யா...மொள்ளமாரித்தனத்துக்கு கல்லிடைக்குறிச்சிகாரன் கிட்ட அம்பை மக்களெல்லாம் டியூஷன் எடுத்துகனும் :)

    விநய் - வருஷத்துக்கு ஒரு தரம் வேப்பிலையடி என்று அம்மனுக்கு வேண்டுதல் இருக்கில்ல :)

    மணியன் - அடியாத்தீ என்ன இப்படிச் சொல்லிட்டீக...அவுக எங்க...நான் எங்க...இதுக்கெல்லாம் தகுதியானவனா ...இருந்தாலும் நீங்க சொன்னது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

    ReplyDelete
  23. ராசுக்குட்டி - சலங்கை ஒலி ஜெயப்பிரதாக்கும், நினைத்தாலே இனிக்கும் ஜெயப்பிரதாக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை...ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன்...எதச் சொன்னாலும் அடி ஒரே மாதிரி தான் விழுது...யாரப் பிடிச்சா என்னங்க :)

    appu - யெக்கா...ரொம்ப நன்றி. உலகத்துல எனக்கு இவ்வளவு wellwishers இருக்காங்கன்னு தெரியும் போது உடம்பெல்லாம் அப்படியே புல்லரிக்குது :))

    ReplyDelete
  24. Jeevan - ஆமாம் ஜீவன்...என்னத்த சொல்ல...கல்யாண வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா :)

    பத்மா - இந்த மாதிரி கணக்கையெல்லாம் நியாபகம் வெச்சிகிறதுக்கே கொஞ்சம் மூளை வேனுமே...இங்க எங்க அதெல்லாம் :)

    சுல்தான் - //என்றாலும் வாழ்ந்த மனிதர்கள் அனுபவத்தை கேட்பதிலே மன மகிழ்ச்சி இருந்தது. // நீங்க சொல்றது ரொம்ப சரிங்க...ஆனாலும் நீங்க யாரச் சொல்றீங்க...எங்க தாத்தாவைத் தானே...என்னை இல்லையே?? :P

    ReplyDelete
  25. ரமேஷ் - நன்றி. இருந்தாலும் பதிவு எப்படி இருந்ததுன்னு ஒரு வார்த்தையும் சொல்லி இருக்கலாம் நீங்க :)

    SLN - ரொம்ப நன்றி - எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாங்க :)

    ஸ்யாம் - என்ங்க...ஒரு பின்னூட்டத்துல பாராட்டிட்டு அப்புறம் ஆப்பு வைக்கிறீங்க...சங்கத்துகாரன நம்பவே கூடாதுங்கிறது இதுதானா?

    நாகை சிவா - அண்ணே கொஞ்சம் அட்ஜீஸ் செஞ்சுக்கோங்க :)

    ReplyDelete
  26. கைப்புள்ள - இப்படி புத்தி சொல்றதுக்கு ஆள் இல்லாம தான் இப்படி புத்தி பேதலிச்சு கல்யாணம் செஞ்சிக்கிட்டேன் :) அப்போ இப்படியே போனா அவங்களெல்லாம் கண்டிப்பா காபாத்துவாங்களா..அப்புறம் பேச்சு மாறமாட்டீங்களே

    மிதக்கும் வெளி - அடல்ட்ஸ் ஒன்லியா அப்பிடீன்னா? ஏங்க ஸ்கூல் போகிற பையன் கிட்ட என்ன பேச்சு பேசறீங்க :)

    ஸ்யாம் - அதே அதே...:))

    ReplyDelete
  27. Dev- இல்லீயே நல்லா படிச்சுப் பாருங்க...பதிவு முழுக்க வராறே :)

    kumari - ஹை இந்த ஐடியா கூட நல்லா இருக்கே...ட்ரை பண்ணி பார்த்துட்டு ரிசல்ட் சொல்றேன் :)
    ஓ கண்டிப்பா வாலிபிகளுக்கு இடமிலாமலையா...

    itsme - நன்றி. என்ங்க இப்படி சொல்லிபுட்டீங்க?
    உங்க பதிவு டிசைனும் போடற படங்களும் பட்டைய கிளப்புது! நல்லா இருக்கு :)

    ReplyDelete
  28. உன் மனசுல இம்புட்டு ஃபிலிங்க்சு இருக்காப்பு
    அதுக்குதானே இருக்கவே இருக்கு வருத்தபடாத வலிபர் சங்கம்.
    வந்துட்டிங்களே..வைச்சிடுவோம்


    ஆமா இவ்வளவு மேட்டரையும் மறக்காம எழுதிரீங்க உங்களுக்கு செலக்டிவ் னு சொன்னா நம்ப முடியல..

    இல்ல வேப்பில்லை அடி பலமோ..??


    வந்துடோமுல்ல
    சின்னபுள்ள

    ReplyDelete
  29. டுபுக்கு,
    தனியா, 'இந்த வரி நல்லா இருக்கு'ன்னு எழுத முடியலை..

    எல்லாமுமே..

    மணியன் சொல்வது மிகையே இல்லை.. ஆனாலும், ஏன் அவர்களைக் குறிப்பிட வேண்டும்.. அடுத்த தலைமுறை உங்களைத் தான் 'ரோல் மாடல்' என்று அடையாளம் காட்டும்.. அவ்வளவு எளிதாக நகைச்சுவை உங்கள் எழுத்தில்- வார்த்தைக்கு வார்த்தை..

    ReplyDelete
  30. சலங்கை ஒலி பாடல்கள்...
    தலைவா உங்களுக்காக

    http://www.youtube.com/watch?v=q1X1a0A7bFU

    http://www.youtube.com/watch?v=jHASZXKswms

    http://www.youtube.com/watch?v=XHHnNi1t5zk

    http://www.youtube.com/watch?v=oseMlO20ads

    ReplyDelete
  31. //"சலங்கை ஒலி" ஜெயப்பிரதா தான் நல்ல வழி காட்டனும் !! //
    நினைத்தாலே இனிக்கும்'ல ஜெயப்ப்ரதா ஆட்டுன தலைகே இன்னும் எனக்கு விடை தெரியல இதுல சலங்கை ஒலி வேறையா? நீங்க ஞாபகம் வருதேன்னு எழுதி இருக்கீங்க எனக்கு எல்லாமே மறந்துபோச்சேன்னுதான் சொல்ல வருது.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)