Wednesday, October 25, 2006

வ வா ஆட்டோகிராப்-2!!!

முதல் பாகம்

எங்க ஊருல ஒரு வகுப்புக்கு 30 பேர்தான் இருப்பாங்க. ஆனால் கடலூர்ல ஒரு வகுப்புக்கு 70-80 பேர் இருப்பாங்க. மார்க்தான் 70- 80 வாங்க முடியல... ரேங்காவது அந்த ரேஞ்ச்ல வாங்கனும்னு சேர்ந்த அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன்.

ஆனால் ஏற்கனவே ஒரு வருஷம் ஆறாவது படிச்ச எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததால அந்த வருஷம் என்னால அந்த ரேங்க் வாங்க முடியலை. அப்பறம் போக போக பிக் அப் பண்ணி 70-80 ரேங்க் வாங்க ஆரம்பிச்சிட்டேன்.

எட்டாவது படிக்கும் போது வழக்கம் போல கடைசி பென்ச்ல உக்காந்து தூங்கிட்டு இருந்தேன். அந்த வாத்தியார் அதை பார்த்துட்டாரு...

வாத்தியார்: தம்பி, அந்த கடைசி பென்ச்ல இருக்கறவரே.. எழுந்திரிங்க...

நான் எழுந்து நின்றேன்...

வாத்தியார்: சரி, இப்ப நான் என்ன நடத்திட்டு இருந்தேன்...

இது கூட தெரியாம என்னயக் கேக்கறாரு...

நான்: வரலாறு சார்

வாத்தியார்: ஏம்பா, வரலாறு வாத்தியார், வரலாறு நடத்தாம அறிவியலா நடத்துவேன். வரலாறுல என்ன நடத்திட்டு இருந்தேன்...

நான்: காந்தி உப்பு சத்தியாகிரகம் சார்...

வாத்தியார்: சிந்து சமவெளி நாகரீகத்துல காந்தி எதுக்குப்பா உப்பு சத்தியாகிரகம் பண்ணுறாரு???

நான்: வெள்ளைக்காரவங்க கிட்ட இருந்து சுதந்திரம் வாங்க தான் சார்...
(காந்தி வேற எதுக்கு உப்பு சத்தியா கிரகம் பண்ண போறாரு... இதுவே தெரியல... இவர்ட படிச்சு நான் எப்படி கலெக்டர் ஆகறது? ஆமங்க.. அப்ப நம்ம ஆசை கலக்டர் ஆகறது தான்)

வாத்தியார்: உன்கிட்ட பேச்சு கொடுத்தது என் தப்பு. இனிமேல் முதல் பெஞ்ச்ல வந்து உக்கார்ந்துக்கோ...

நான்: சரி சார்.

அன்றிலிருந்து முதல் பெஞ்சில் உட்கார ஆரம்பித்தேன். என் வாழ்வின் திருப்பு முனை ஏற்பட்டது அதற்கு பிறகுதான். கடைசி பெஞ்சில் பயந்து பயந்து தூங்கி கொண்டிருந்த நான், அதற்கு பிறகு முதல் பெஞ்சில் உட்கார்ந்து நன்றாக தூங்க ஆரம்பித்தேன். எல்லா ஆசிரியர்களும் கடைசி பெஞ்சையே பார்த்து பாடம் சொல்லி கொடுத்தனர். இந்த டெக்னிக்கை எனக்கு சொல்லி கொடுத்த மணி சாரை இன்றளவும் மறக்காமலிருக்கிறேன்.

இங்கிலிஷ்ல மெமரி போயம்ஸ்னு ஒண்ணு இருக்கும். அதை நினைத்தாலே இன்றும் நமக்கு ஆகாது. யார் யாரோ வெள்ளைக்கார துறைங்க அவுங்க ஊர் படத்துல பாடின பாட்டெல்லாம் எடுத்து போட்டிருப்பாங்க. அந்த பாட்டாலையே எனக்கும் என் இங்கிலிஷ் வாத்தியாருக்கும் எப்பவுமே சண்டைதான்.

எப்பவும் அவர் என்னை ஒப்பிக்க சொல்லுவார். நமக்குதான் முதல் வரிக்கு மேல தெரியாதே... அதனால இம்பொஸிஷன் கொடுத்துடுவார். அவரை எப்படியாவது பழி வாங்கனும்னு பாத்துக்கிட்டே இருந்தேன். அதுவும் அவரைவிட எனக்கு ஆங்கிலம் அதிகமா தெரியனும்னு நிருபிக்கனும்னு காத்துக்கிட்டு இருந்தேன்.

பரிட்சை வந்தது. அவர்தான் சூப்பர்வைசர். கேள்வித்தாளையும், விடை எழுதற தாளையும் கொடுத்துட்டு அவர் கேட்ட கேள்வி

இங்கிலிஷ் வாத்தியார்: Has everyone got question paper and answer paper?

நான்: No sir...

அவர் என் அருகில் வந்து, என்னப்பா எது வரலைனு கேட்டாரு?

நான்: சார்... நீங்க சொன்னதுல பொருள் குற்றம் இருக்கு

இ.வாத்தியார்: என்ன பொருள் குற்றம்???

நான்: Question paperல Question இருக்கு... ஆனால் Answer paperல answer இல்லையே... அதனால இது answer paper இல்லை... Milk Paper (எங்க ஊருல வெள்ளை பேப்பரை பால் பேப்பர்னு தான் சொல்லுவோம்)

எல்லாரும் சிரிச்சாங்க. அப்பறம் வாத்தியாரும் என்னை பார்த்து சிரிச்சாரு.
கடைசியா அந்த பேப்பர்ல 100க்கு 34 போட்டு ஃபெயிலாக்கிட்டாரு. .. கேட்டா எந்த ஆன்ஸரும் கரெக்டா இல்லைனு சொன்னாரு. அப்ப இதுக்கு முன்னாடி மட்டும் என்ன கரெக்டாவா இருந்துச்சி நீங்க பாஸ் போடறதுக்குனு நான் சண்டை போட்டவுடனே... பயந்து போய் 35 மார்க் போட்டு பாஸாக்கிட்டாரு. ஒரு வழியா 70 ரேங்க் மேல எடுத்து பேரை காப்பாத்திட்டேன்

100 comments:

  1. அப்பமே வெவரமாத்தேன் இருந்திருக்கீக.

    ReplyDelete
  2. வெட்டி, ஏழாவதுல கண்ணன் என்று ஒரு கண்ணு தெரியாத வாத்தியாரு எடுத்தாரா ?

    அவரோட ஸ்பெஷாலிட்டி சொல்லுங்க பார்ப்போம் !!!!

    ReplyDelete
  3. //இலவசக்கொத்தனார் said...
    அப்பமே வெவரமாத்தேன் இருந்திருக்கீக.
    //
    கொத்ஸ்,
    விவரமா இல்ல அப்பாவியா...
    இப்பவும் அப்படித்தான்னு கூட இருக்கவங்க சொல்றாங்க ;)

    ReplyDelete
  4. //செந்தழல் ரவி said...
    வெட்டி, ஏழாவதுல கண்ணன் என்று ஒரு கண்ணு தெரியாத வாத்தியாரு எடுத்தாரா ?

    அவரோட ஸ்பெஷாலிட்டி சொல்லுங்க பார்ப்போம் !!!!
    //
    நான் ஏழாவதுல நர்சரில படிச்சேன்...

    பத்தாவதுல கண்ணனு இங்கிலிஷ் வாத்தியார் ஒருத்தர் இருந்தாரு... வயசானவர். அந்த வருஷம் ரிடையர் ஆனார்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  5. //கொத்ஸ்,
    விவரமா இல்ல அப்பாவியா...//

    அதான் விவரமா விவரமா இருந்திருக்கீங்கன்னு சொல்றாருல்ல..அப்புறம் என்ன மறுபடியும் கேள்வி ;)

    ReplyDelete
  6. //அதான் விவரமா விவரமா இருந்திருக்கீங்கன்னு சொல்றாருல்ல..அப்புறம் என்ன மறுபடியும் கேள்வி ;) //

    கப்பி,
    ஒரு புள்ளி வைக்க மறந்துட்டேன்...

    //விவரமா இல்ல. அப்பாவியா...//

    இப்ப படி புரியும் ;)

    ReplyDelete
  7. //ரேங்காவது அந்த ரேஞ்ச்ல வாங்கனும்னு சேர்ந்த அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன்.
    //

    அந்த சின்ன வயசுல இவ்வளவு வைராக்கியமா?? ;))

    ReplyDelete
  8. //கடைசியா அந்த பேப்பர்ல 100க்கு 34 போட்டு ஃபெயிலாக்கிட்டாரு. ..
    //

    ஆசிரியர்களே...நீங்கள் தெய்வங்களாஆஆஆஆ?? ;)

    //
    கேட்டா எந்த ஆன்ஸரும் கரெக்டா இல்லைனு சொன்னாரு. அப்ப இதுக்கு முன்னாடி மட்டும் என்ன கரெக்டாவா இருந்துச்சி நீங்க பாஸ் போடறதுக்குனு நான் சண்டை போட்டவுடனே... பயந்து போய் 35 மார்க் போட்டு பாஸாக்கிட்டாரு.
    //

    ஆமா தெய்வங்கள் தான் ;)))

    ReplyDelete
  9. //கப்பி பய said...
    //ரேங்காவது அந்த ரேஞ்ச்ல வாங்கனும்னு சேர்ந்த அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன்.
    //

    அந்த சின்ன வயசுல இவ்வளவு வைராக்கியமா?? ;))
    //
    பின்ன...

    நாங்க எல்லாம் தலைவர் ஃபேன்ஸ் இல்லை... மன்னன் படம் நான் ஆறாவது படிக்கும் போதுதான் வந்துச்சு. அந்த எஃபக்ட்தான்

    ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசானு கேப்பாரே.. நியாபகம் இருக்கா?

    அதே லாஜிக் தான் இங்கயும் ;)

    ReplyDelete
  10. //ஆசிரியர்களே...நீங்கள் தெய்வங்களாஆஆஆஆ?? ;)//

    //ஆமா தெய்வங்கள் தான் ;)))//

    ஆமாம்.. தெய்வங்கள் தான்...
    ஆனால் அடுத்த பாகத்துல முடிவ மாத்த வேண்டியதா இருந்தாலும் இருக்கலாம் ;)

    ReplyDelete
  11. ரொம்ப வெவரமாத்தான் இருந்துக்கிற,

    //(எங்க ஊருல வெள்ளை பேப்பரை பால் பேப்பர்னு தான் சொல்லுவோம்)//

    நல்ல வேல சாணி பேப்பர்ல சாணி இருக்குமான்னு கேக்காம விட்டியே!

    ReplyDelete
  12. நல்ல வெவரமாதான் இருந்திருக்க!

    //(எங்க ஊருல வெள்ளை பேப்பரை பால் பேப்பர்னு தான் சொல்லுவோம்)//

    நல்ல வேல... சாணி பேப்பர்ல சாணி இருக்குமான்னு கேக்காம விட்டியே!

    ReplyDelete
  13. ////(எங்க ஊருல வெள்ளை பேப்பரை பால் பேப்பர்னு தான் சொல்லுவோம்)//

    நல்ல வேல... சாணி பேப்பர்ல சாணி இருக்குமான்னு கேக்காம விட்டியே! //

    தம்பி,
    நான் என்ன பால் பேப்பர்ல இருந்து அவரை பாலா எடுத்து தர சொன்னேன்...

    எங்கடா தப்பு பண்ணுவானுங்க ஆப்பு வைக்கலாம்னு அலையறானுங்கப்பா...

    தம்பி,
    நீயும் அதே ஊர்தான் மறந்துடாத... புரியுதா ;)

    ReplyDelete
  14. //எல்லா ஆசிரியர்களும் கடைசி பெஞ்சையே பார்த்து பாடம் சொல்லி கொடுத்தனர். இந்த டெக்னிக்கை எனக்கு சொல்லி கொடுத்த மணி சாரை இன்றளவும் மறக்காமலிருக்கிறேன்//

    இந்த ஐடியாவை இன்னும் பல இடங்களில் பரப்பிக் கல்விப் பணியாற்ற வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

    //ஆமங்க.. அப்ப நம்ம ஆசை கலக்டர் ஆகறது தான்//
    எதைக் கலெக்ட் பண்ண கலெக்டர் ஆக ஆசைப்பட்டிங்க பாலாஜி? :-)))

    ReplyDelete
  15. //தம்பி,
    நான் என்ன பால் பேப்பர்ல இருந்து அவரை பாலா எடுத்து தர சொன்னேன்...

    எங்கடா தப்பு பண்ணுவானுங்க ஆப்பு வைக்கலாம்னு அலையறானுங்கப்பா...//

    யாருப்பா அவங்க எல்லாம்?
    ஏன் ஆப்பு வைக்கணும்னு அலையறாங்க?
    ஏன் இப்படி?

    ReplyDelete
  16. ---அந்த கடைசி பென்ச்ல இருக்கறவரே..---

    விளையும் பயிரிலேயே மரியாதை பெற்றவரின் சுயசரிதையை படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது.

    நல்லா இருந்துச்சுபா

    :)))

    ReplyDelete
  17. //யாருப்பா அவங்க எல்லாம்?
    ஏன் ஆப்பு வைக்கணும்னு அலையறாங்க?
    ஏன் இப்படி? //

    வீட்ல முகம் பாக்கற கண்ணாடி இருந்தா நேரா பாருப்பா... யாருனு உனக்கு தெரியும்... இல்லைனா ஒரு வாரத்துக்கு முன்னாடி தீபாவளி வாழ்த்துல கிராபிக்ஸ் எல்லாம் கலக்கலா ஒருத்தர் போட்டிருந்தாரு... அதுல அவர் படம் இருக்கு... வேணும்னா சொல்லு லிங் அனுப்பறேன் ;)

    ReplyDelete
  18. You guys are reallly awesome. Had very good time after long time....... keep it up guys.

    ReplyDelete
  19. முதல் பெஞ்சில உட்காரது சாதாரன விஷயம் இல்ல பாலாஜி.. சிலப் பல பிரச்சனைகள் இருக்கு...அதையும் சொல்லிடு
    - வாத்தியாருக்கும் நமக்கும் சிரிய இடைவெளிங்கிறதுனால, அடிக்கடி சாரல் மழைல நனைய வேண்டியதிருக்கும்.. சில சமயம் தமிழ் சாரல், சில சமயம் இங்கிலீஷ் சாரல்! Mathsல பிரச்சனை இருக்காது, அவரு எப்பவுமே Board பக்கதுல தான் இருப்பாரு!
    - எங்க ஸ்கூல்ல வாத்தியாருக்குன்னு தனி ஸ்டேஜெல்லாம் கிடையாது. முதல் பெஞ்சோட சேர்த்து இன்னொரு டேபிளையும் போட்டுருவாங்க. சரி நாம காலை முன்னாடி நீட்டி உட்காரலாம்னு பார்த்தா. வாத்தியாரும் காலை நீட்டுனாருனா கொஞ்சம் பிரச்சனையாகிடும்!
    - வகுப்புக்குள்ள நுழைஞ்சவுடனே எல்லாத்தோட கண்ணுல முதல்ல படுறது முதல் பெஞ்சு தான். தப்பி தவறி HM வந்துட்டாருனா மாட்டிக்குவோம்..அதனால, வாத்தியார் வர வரைக்கும் தூங்க முடியாது!
    - அப்புறம் முதல் பெஞ்சுங்கிறதுனால குறைந்தது 80க்கு 50 ரேங்காவது வாங்கனும்..இல்லைனா வாத்தியாரின் வசை பாட்டுக்கு ஆளாக வேண்டியிருக்கும்! எல்லாருக்கும் வெட்டி (கிடைத்த) வாத்தியாரு மாதிரி நல்ல்வங்களா? இருக்க மாட்டாங்க :)
    - தூங்கும் போது ஒளுங்கா எழுதுற/படிக்கிற மாதிரி நடிக்கனும்..இல்ல முதல் பெஞ்சுங்கிறதுனால மாட்டுறதுக்கு Chances அதிகம்!!

    (க)படிச்சது... விநய்* :)

    ReplyDelete
  20. ஹி ஹி மொத பெஞ்சுல உக்காந்து நிம்மதியா தூங்குனீங்களா!!!!!!! நானும் அப்படித்தான். பெரும்பாலும் மொத பெஞ்சு பசங்க நல்ல பசங்க. அதுக்கேத்த மாதிரி அமைதியா இருப்போம். அதுனால நெறைய நன்மைங்க இருக்குல்ல.

    காந்தி...உப்புச்சத்தியாகிரகம்....கலெக்ட்டர்....ரசித்தேன்.

    ReplyDelete
  21. //Question paperல Question இருக்கு... ஆனால் Answer paperல answer இல்லையே//

    அட! அட! அட!
    இப்படி ஒரு ஃபிரண்டு என் பக்கத்துல உட்காராம போனானே!

    ReplyDelete
  22. //Vino said...
    You guys are reallly awesome. Had very good time after long time....... keep it up guys.
    //
    Hi Vino,
    thx a lot...

    ReplyDelete
  23. //இந்த ஐடியாவை இன்னும் பல இடங்களில் பரப்பிக் கல்விப் பணியாற்ற வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.//

    ஆனாங்க எனக்கும் இந்த வேலை போர் அடிச்சு போச்சு. பேசாமல் கல்வித்துறை இயக்குனராயிடலாம?

    பரிட்சை எழுதற எல்லாரும் பாஸ்னா பசங்க ஓட்டு போட்டு நம்மல தேர்ந்தெடுத்துடமாட்டாங்க ;)

    //எதைக் கலெக்ட் பண்ண கலெக்டர் ஆக ஆசைப்பட்டிங்க பாலாஜி? :-))) //
    என்னங்க இப்படி கேக்கறீங்க... நம்மளும் கலெக்டராகியிருந்த மதுர படம் விஜய் மாதிரி "நான் கான்வெண்ட்ல படிச்சு கலெக்டராகல கவர்ண்மெண்ட் ஸ்கூல படிச்சு கலெக்டரானேனு" பஞ்ச் டயலாக் பேசி இருக்கலாம் இல்லை ;)

    ReplyDelete
  24. //விளையும் பயிரிலேயே மரியாதை பெற்றவரின் சுயசரிதையை படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது.

    நல்லா இருந்துச்சுபா

    :))) //

    ஆமாம் பாபா... மரியாத தெரிஞ்ச வாத்தியாரு...

    மிக்க நன்றி!!!

    ReplyDelete
  25. விநய்,
    எங்க ஸ்கூல்ல அந்த பிரச்சனையில்லை. வாத்தியாருக்கு கொஞ்ச தூரத்துலதான் இருப்பாரு.

    கதவு பக்கத்துல இருக்குற முதல் பெஞ்ச்ல உக்காந்தாதான் நீங்க சொல்ற பிரச்சனை... நாம் சொல்றது அதுக்கு அடுத்த சைட்ல ஜன்னல் பக்கத்து பெஞ்ச்... நல்லா காத்து வேற வரும்.

    மதியம் சாம்பார், ரசம், மோர்னு கலந்துகட்டி அடிச்சிட்டு வர ஹாஸ்டல் பசங்களுக்கு சொல்லவே வேண்டாம் ;)

    ReplyDelete
  26. //G.Ragavan said...
    ஹி ஹி மொத பெஞ்சுல உக்காந்து நிம்மதியா தூங்குனீங்களா!!!!!!! நானும் அப்படித்தான். பெரும்பாலும் மொத பெஞ்சு பசங்க நல்ல பசங்க. அதுக்கேத்த மாதிரி அமைதியா இருப்போம். அதுனால நெறைய நன்மைங்க இருக்குல்ல.

    //

    ஜி.ரா,
    அப்ப நம்மல நல்ல பையன்னு சொல்றீங்களா??? மிக்க நன்றி!!!

    ஆமாம்... முதல் பெஞ்ச்ல நிறைய நன்மை இருக்கு.. ஆனா அதுல சுவர் பக்கமா தான் உட்காரணும்.. இல்ல அம்பேல்தான் ;)

    கடைசி பெஞ்ச்ல ஆபத்து ரொம்ப அதிகம் ;)

    ReplyDelete
  27. //அட! அட! அட!
    இப்படி ஒரு ஃபிரண்டு என் பக்கத்துல உட்காராம போனானே! // ஒண்ணா சேர்ந்து வாத்தியார கலாய்ச்சிருக்கலாம்னு சொல்றீங்களா? ;)

    ReplyDelete
  28. //கப்பி,
    ஒரு புள்ளி வைக்க மறந்துட்டேன்...

    //விவரமா இல்ல. அப்பாவியா...//

    இப்ப படி புரியும் ;)//

    அடப்பாவிங்களா. ஒரு புள்ளி வைக்காம விட்டு அதுக்கு நாலு பின்னூட்டம் அடிக்கறீங்களா? நீங்க பண்ணற கயமைத்தனத்துக்கு, அட சாரி, கவுண்டிங்குக்கு ஒரு அளவே இல்லாம போச்சே.

    நல்லா இருங்கடா தங்கங்களா!

    ReplyDelete
  29. //அடப்பாவிங்களா. ஒரு புள்ளி வைக்காம விட்டு அதுக்கு நாலு பின்னூட்டம் அடிக்கறீங்களா? நீங்க பண்ணற கயமைத்தனத்துக்கு, அட சாரி, கவுண்டிங்குக்கு ஒரு அளவே இல்லாம போச்சே.

    நல்லா இருங்கடா தங்கங்களா! //

    தலைவரே,
    நீங்களே இப்படி சொல்லலாமா?

    இதெல்லாம் கவுண்டிங்காக செஞ்சது இல்லை.. தானா வந்தது...
    கவுண்டிங்காக செய்யனும்னா இந்நேரம் 100 தாண்டியிருக்க மாட்டோம் ;)

    ReplyDelete
  30. //இங்கிலிஷ்ல மெமரி போயம்ஸ்னு ஒண்ணு இருக்கும். அதை நினைத்தாலே இன்றும் நமக்கு ஆகாது.//

    எப்பவுமே ஒண்ணு புரிஞ்சிக்க வெட்டி
    இந்த போயம்னு ஒரு இம்சை இருக்கே அது பொல்லாதது, நாமதான் பொல்லாதவனுக்கும் பொல்லாதவனாச்சே, எங்க பள்ளிக்கூட வாத்தியாருகே டிமிக்கி கொடுப்பேன் இந்த போயம் எழுதற விஷயத்தில, எப்படின்னா பொதுவா வாத்தியாருங்க போயம் திருத்தும்போது மொத பாராவையும் கடைசி பாராவை மட்டுமே மொறச்ச்ச்ச்சி பார்த்து திருத்துவாங்க சோ நடுவால நாமளா எழுதுறதுதான் போயம்.
    இங்கதாம் நம்ம ட்ரிக்கே இருக்கு. மொத பாராவுல என்ன எழுதனையோ (ஆனா கண்டிப்பா மொத பாராவை கடம் அடித்திருத்தல் அவசியம்)அதையே வார்த்தைகள மட்டும் கலைச்சி போட்டு மீதி மூணு பாராவா அத தேத்தி, மாத்தி கடைசில நீ கடம் அடிச்சத கடைசி பாராவா வாந்தி எடுத்திட்டன்னா அழகான ஒரு போயம் ரெடி. இப்போ கண்ணுல இருந்து கொஞ்சம் தூரக்க வச்சி பாரு, உன்னாலயே நம்ப முடியாது நீதான் இத முழுக்க எழுதினேன்னு!


    இப்படிதான் நான் நடேசன ஏமாத்தறதா நெனச்சி வாழ்க்கையில ஏமாந்து போனேன். :-(

    ReplyDelete
  31. தம்பி,
    பாதி போயமே இரண்டு பேராதான்... அதுக்கு இந்த லாஜிக் ஒத்து வராது :-(

    அப்பறம் மீதி இருக்கறதுல இரண்டு பேரா படிக்கறதுக்கு நாங்க என்ன தம்பி மாதிரி இண்டலிஜெண்டா?

    ReplyDelete
  32. நல்லவேளை மைசூர் போண்டாவில் மைசூர் இருக்குமான்னு கேக்காம விட்டீங்களே?:-)

    சரி...க்ளாசில் தூங்கியே அமெரிக்கா வந்து சாதனை பண்ணிட்டிங்களே?தூங்காம இருந்திருந்தா பில்கெட்ஸே ஆயிருப்பீங்க போல

    ReplyDelete
  33. //செல்வன் said...
    நல்லவேளை மைசூர் போண்டாவில் மைசூர் இருக்குமான்னு கேக்காம விட்டீங்களே?:-)
    //
    செல்வன்,
    அதெல்லாம் மூணாவது படிக்கும் போதே கேட்டாச்சு ;)

    //
    சரி...க்ளாசில் தூங்கியே அமெரிக்கா வந்து சாதனை பண்ணிட்டிங்களே?தூங்காம இருந்திருந்தா பில்கெட்ஸே ஆயிருப்பீங்க போல
    //
    க்ளாஸ்ல தூங்கனதால தான் இஞ்சினியராகி அமெரிக்கா வந்தோம்... இல்லைனா இன்னும் ஏதாவது படிச்சிட்டு இருப்போமில்ல ;)

    ReplyDelete
  34. வ.வா.சங்கத்தின் இளைய தளபதி வெட்டி எழுதும் இந்தத் தொடரைப் பாராட்டி சங்கத்துக்கு இதுவரை தமிழகமெங்கும் இருந்து ஆறாம் கிளாஸ் ஆறு தடவை படித்த மாணவ மாணவியர்கள் எழுதிய வண்ணம் உள்ளனர்.

    நேற்று மாலை வரை 126788 கடிதங்கள் வந்துள்ளன.. அவற்றில் சிறந்தக் கடிதங்களைப் படித்து பிரசூரிக்கும் பணியினைத் தம்பி பாண்டியும் , புலிக்குட்டியாரும் ஏற்று உள்ளனர் விரைவில் கடிதங்களை ஒரு தனிப் பதிவாக எதிர்பாருங்கள்

    ReplyDelete
  35. அட வாப்பா வெட்டித்தம்பி :)))என்னைப்போல் ஒருத்தனா ???நானெல்லாம் காலேஜிலே பண்ணுனதை நீங்க ஸ்கூல் லெவல்லயே பண்ணி விளையும் பயிர்ங்கரதை நிரூபிச்சிடயேய்யா. கண்ணிலே ஆனந்த கண்ணீர் முட்டிகிட்டு நிக்குதுன்னா பார்துக்குங்களேன்

    ReplyDelete
  36. உங்க கதை படித்த உடன் பழய flash back வந்திருச்சு..
    when u get time .
    visit my page
    http://lunchtime-arratai.blogspot.com/

    ReplyDelete
  37. //மார்க்தான் 70- 80 வாங்க முடியல... ரேங்காவது அந்த ரேஞ்ச்ல வாங்கனும்னு சேர்ந்த அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன்.//

    ஆஹா அய்யா என்ன ஒரு தெளிவு!! என்ன ஒரு முடிவு !! கண்ணு அப்போவே இப்படியொரு தெளிவோட இருந்திருக்கறயேப்பா !!! :))

    ReplyDelete
  38. வாங்க Appu. இதை எப்படி படிக்கிறதுன்னு சொல்லுங்க. அப்பு'ன்னா? ஆப்புன்னா?
    படிக்கவே பயமா இருக்குங்க அபர்ணா.
    அப்படியே சங்கத்துக்கு தொடுப்பு குடுத்து பதிவு போட்டதுக்கு நன்றிங்கோ.

    ReplyDelete
  39. வாங்க Appu. இதை எப்படி படிக்கிறதுன்னு சொல்லுங்க. அப்பு'ன்னா? ஆப்புன்னா?
    படிக்கவே பயமா இருக்குங்க அபர்ணா.
    அப்படியே சங்கத்துக்கு தொடுப்பு குடுத்து பதிவு போட்டதுக்கு நன்றிங்கோ.

    ReplyDelete
  40. //தேவ் | Dev said...
    வ.வா.சங்கத்தின் இளைய தளபதி வெட்டி எழுதும் இந்தத் தொடரைப் பாராட்டி சங்கத்துக்கு இதுவரை தமிழகமெங்கும் இருந்து ஆறாம் கிளாஸ் ஆறு தடவை படித்த மாணவ மாணவியர்கள் எழுதிய வண்ணம் உள்ளனர்.

    நேற்று மாலை வரை 126788 கடிதங்கள் வந்துள்ளன.. அவற்றில் சிறந்தக் கடிதங்களைப் படித்து பிரசூரிக்கும் பணியினைத் தம்பி பாண்டியும் , புலிக்குட்டியாரும் ஏற்று உள்ளனர் விரைவில் கடிதங்களை ஒரு தனிப் பதிவாக எதிர்பாருங்கள்
    //

    ஆஹா,
    சீக்கிரம் போடுங்கப்பு... நமக்கு ஆதரவு எந்த அளவுக்குனு பாக்கலாம்...

    ReplyDelete
  41. //appu said...
    உங்க கதை படித்த உடன் பழய flash back வந்திருச்சு..
    when u get time .
    visit my page
    http://lunchtime-arratai.blogspot.com/
    //
    வந்துட்டோம் ;)

    ReplyDelete
  42. வெட்டி,
    கடைசி பெஞ்சில் அமர்ந்து நம் இனம் பெருமையை நிலை நிறுத்தி இருக்கு. அதுவரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்பால ஸ்கூலில் படிக்கும் போது நடுவில் தான் அமர வேண்டும். கல்லூரியில் மாப்பிள பெஞ்ச் தானே?

    ReplyDelete
  43. வெட்டி,

    உனக்கும் எனக்கும் எதோ ஒரு சேம் அலைவரிசை ஓடுதுப்பா.... :-)))

    நான் இப்போ மதுரை வெள்ளியம்பலம் ஸ்கூல்லே உட்கார்த்திருக்க பிலீங்ஸ்.... சரி சுருளே சுத்தி விட்டு ஒரு பதிவே போட்டுறே வேண்டியதுதான்... :-)

    ReplyDelete
  44. Here comes 45!

    :))))

    யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. செல்வன் பதிவ படிச்சு படிச்சு நமக்கும் வந்த பழக்கம் வந்து போச்சு. அது என்ன 44க்குனு கேட்குறீங்களா. எனக்கும் வெட்டிக்கும் எட்டாம் நம்பர் ஒத்துக்காது, அதான்

    ReplyDelete
  45. யோவ் ராம், நான் பின்னூட்டம் போட காட்டியும் உன்ன யாருய்யா சுருள் கொளத்த சொன்னது. நான் போட்ட பின்னூட்டம் இப்ப வேஸ்டா போச்சு பாரு.

    ReplyDelete
  46. //யோவ் ராம், நான் பின்னூட்டம் போட காட்டியும் உன்ன யாருய்யா சுருள் கொளத்த சொன்னது. நான் போட்ட பின்னூட்டம் இப்ப வேஸ்டா போச்சு பாரு. //

    சாரி புலி என்னை மன்னிச்சிரு.... ஏதோ ஆர்வக்கோளாறுலே பண்ணிட்டேன்.... :-)

    ReplyDelete
  47. //கொத்ஸ்,
    விவரமா இல்ல அப்பாவியா...
    இப்பவும் அப்படித்தான்னு கூட இருக்கவங்க சொல்றாங்க ;) //

    எப்படினு?

    ReplyDelete
  48. //நாகை சிவா said...
    வெட்டி,
    கடைசி பெஞ்சில் அமர்ந்து நம் இனம் பெருமையை நிலை நிறுத்தி இருக்கு. அதுவரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்பால ஸ்கூலில் படிக்கும் போது நடுவில் தான் அமர வேண்டும். கல்லூரியில் மாப்பிள பெஞ்ச் தானே?
    //
    புலி,
    நான் காலேஜ் போனா எந்த பெஞ்ச்ல இடம் இருக்கோ அங்க உக்காந்துக்குவேன்...

    ஏன்னா 8:45 காலேஜிக்கு நான் 9:15க்குத்தான் போவேன் :-)

    ReplyDelete
  49. யாரும் அவசரபட வேணாம்.... நான் 50 போட்டுக்கிறேன்.

    ReplyDelete
  50. //ராம் said...
    வெட்டி,

    உனக்கும் எனக்கும் எதோ ஒரு சேம் அலைவரிசை ஓடுதுப்பா.... :-)))
    //
    ஓ ராயல்,
    நீங்களும் கடைசி பெஞ்சா???

    //
    நான் இப்போ மதுரை வெள்ளியம்பலம் ஸ்கூல்லே உட்கார்த்திருக்க பிலீங்ஸ்.... சரி சுருளே சுத்தி விட்டு ஒரு பதிவே போட்டுறே வேண்டியதுதான்... :-)
    //
    I am the waiting...

    ReplyDelete
  51. //ஓ ராயல்,
    நீங்களும் கடைசி பெஞ்சா???//

    ம் இப்பிடி நான்சென்ஸ் கேள்வி கேட்டு கேட்டுதான் ஊருக்குள்ளே என்னோட ரெஸ்பெக்டே போயிருச்சு... :-))))

    ReplyDelete
  52. //Here comes 45!

    :))))

    யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. செல்வன் பதிவ படிச்சு படிச்சு நமக்கும் வந்த பழக்கம் வந்து போச்சு. அது என்ன 44க்குனு கேட்குறீங்களா. எனக்கும் வெட்டிக்கும் எட்டாம் நம்பர் ஒத்துக்காது, அதான் //
    புலி,
    இத முன்னாடியே சொல்லியிருந்தா இன்னும் 4 சேர்த்து வந்திருக்குமில்லை...

    சரிவிடு அடுத்த தடவை பாத்துக்கலாம் ;)

    ReplyDelete
  53. வெட்டிப்பயல் said...
    //ஜொள்ளுப்பாண்டி said...
    அட வாப்பா வெட்டித்தம்பி :)))என்னைப்போல் ஒருத்தனா ???நானெல்லாம் காலேஜிலே பண்ணுனதை நீங்க ஸ்கூல் லெவல்லயே பண்ணி விளையும் பயிர்ங்கரதை நிரூபிச்சிடயேய்யா. கண்ணிலே ஆனந்த கண்ணீர் முட்டிகிட்டு நிக்குதுன்னா பார்துக்குங்களேன்
    //

    ஜொள்ளண்ணே,
    காலேஜ்ல இந்த முதல் பெஞ்ச், கடைசி பெஞ்ச் பிரச்சனையெல்லாம் இல்லை...

    காலேஜ் போனாத்தானே இந்த பிரச்சனையே ;)

    நம்ம தான் பாதி நாள் கற்பகம் காம்ப்ளெக்ஸ், கே.ஜி, அர்ச்சனா, தட்சினானு சுத்திட்டு இருந்தமே அப்பறம் எப்படி ;)

    ReplyDelete
  54. //நாகை சிவா said...
    யோவ் ராம், நான் பின்னூட்டம் போட காட்டியும் உன்ன யாருய்யா சுருள் கொளத்த சொன்னது. நான் போட்ட பின்னூட்டம் இப்ப வேஸ்டா போச்சு பாரு.
    //
    புலி,
    Y feelings???
    இப்ப பாரு உன் பின்னூட்டம் 44வதுல இருக்கும் ;)

    முன்னாடி இருந்த ஒரு பின்னூட்டத்த "வெட்டி" பின்னாடி போட்டுட்டேன் ;)
    எப்படி நம்ம டெக்னிக்??? :-)

    ReplyDelete
  55. //நாகை சிவா said...
    //கொத்ஸ்,
    விவரமா இல்ல அப்பாவியா...
    இப்பவும் அப்படித்தான்னு கூட இருக்கவங்க சொல்றாங்க ;) //

    எப்படினு?
    //
    இன்னும் அப்பாவியாவே இருக்கியேடானு நிறைய பேர் சொல்றாங்க... என்ன புலி நான் சொல்றது சரிதான? ;)

    ReplyDelete
  56. //ஏன்னா 8:45 காலேஜிக்கு நான் 9:15க்குத்தான் போவேன் :-) //

    அவ்வளவு சீக்கிரம் போவிய்யா நீ. பெரிய ஆள் தாம்பா....

    ReplyDelete
  57. //புலி,
    Y feelings???
    இப்ப பாரு உன் பின்னூட்டம் 44வதுல இருக்கும் ;)

    முன்னாடி இருந்த ஒரு பின்னூட்டத்த "வெட்டி" பின்னாடி போட்டுட்டேன் ;)
    எப்படி நம்ம டெக்னிக்??? :-) //

    வெட்டி எப்படிம்மா எப்படி.....
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    நானும் அழ கூடாதுனு தான் பாக்குறேன். ஆனா எனக்காக நீ
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    என் இனம்டா நீ

    ReplyDelete
  58. //புலி,
    நான் காலேஜ் போனா எந்த பெஞ்ச்ல இடம் இருக்கோ அங்க உக்காந்துக்குவேன்... //

    நாம எல்லாம் எந்த கிளாஸ்க்கு போகனும் தோணுதோ அந்த கிளாஸ்க்குள்ள போயி வர்கார்ந்து இருப்பேன். B.B.A கிளாஸ்க்கு அடிக்கடி போவேன். ஹி ஹி

    ReplyDelete
  59. //அவ்வளவு சீக்கிரம் போவிய்யா நீ. பெரிய ஆள் தாம்பா.... //
    ஆமாம் போறதே எப்பவாதுதான்...
    9:15க்கு போய் டேஸ்காலர் பசங்க டிபன் பாக்ஸை காலி பண்ணிடுவேன்...

    பீரியட் நடுக்கும் போதே சாப்பிட்டாதான் எந்த நாயும் கை வெக்காதுங்க.. அப்பவும் 3,4 பேர் சேர்ந்துதான் சாப்பிடுவோம் ;)

    ReplyDelete
  60. //இன்னும் அப்பாவியாவே இருக்கியேடானு நிறைய பேர் சொல்றாங்க... என்ன புலி நான் சொல்றது சரிதான? ;) //

    அப்பாவியா இருக்கியா இல்ல "அப்பா"வாகி இருக்கியா. கிளீயரா சொல்லு வெட்டி

    ReplyDelete
  61. //வெட்டி எப்படிம்மா எப்படி.....
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    நானும் அழ கூடாதுனு தான் பாக்குறேன். ஆனா எனக்காக நீ
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    என் இனம்டா நீ //
    புலி,
    அழுவாத.. மக்கள் எல்லாம் பாத்துட்டு இருக்காங்க... நீ பாட்டுன்னு பொசுக்குனு அழுதனா நாளைக்கு தலைப்பு செய்தியா சன் டீவில போட்டுட போறாங்க...

    ஆனந்த கண்ணீர்னு உனக்கு தெரியும் எனக்கு தெரியும்.. மக்களுக்கு தெரியுமா???

    ReplyDelete
  62. //நாம எல்லாம் எந்த கிளாஸ்க்கு போகனும் தோணுதோ அந்த கிளாஸ்க்குள்ள போயி வர்கார்ந்து இருப்பேன். B.B.A கிளாஸ்க்கு அடிக்கடி போவேன். ஹி ஹி //
    புலி,
    நீ கடல போடத்தான க்ளாஸிக்கு போவ... எனக்கு உன்னயப்பத்தி நல்லா தெரியும் ;)

    ReplyDelete
  63. //அப்பாவியா இருக்கியா இல்ல "அப்பா"வாகி இருக்கியா. கிளீயரா சொல்லு வெட்டி //
    புலி,
    ஒரு சின்ன பையன பாத்து கேக்கற கேள்வியா இது??? ;)

    அப்பாவிய அடப்பாவினு சொல்ல வைக்காத புலி ;)

    ReplyDelete
  64. //பீரியட் நடுக்கும் போதே சாப்பிட்டாதான் எந்த நாயும் கை வெக்காதுங்க.. அப்பவும் 3,4 பேர் சேர்ந்துதான் சாப்பிடுவோம் ;) //

    இங்கயும் இதே கதை தான். அவனுங்க டிபன் பாக்ஸ் காலி பண்ணிட்டு, கேண்டின்லு அவன்களை நம்ம அக்கவுண்ட்டில் சாப்பிட சொன்ன நாட்கள் தான் அதிகம். இதில் சில சமயம் வாத்தியார்களும் அடக்கம் :-)

    ReplyDelete
  65. //புலி,
    நீ கடல போடத்தான க்ளாஸிக்கு போவ... எனக்கு உன்னயப்பத்தி நல்லா தெரியும் ;) //

    நான் படிச்ச காலேஜ்ல இது மட்டும் நான் வச்சுகவே மாட்டேன். வீக் பாயிண்ட் ஆயிடும் வெட்டி. அப்ப அப்ப மேடம்ஸ் உண்டு. அது ஆனா கணக்கில் வராது பாரு ;)

    ReplyDelete
  66. //அடப்பாவிங்களா. ஒரு புள்ளி வைக்காம விட்டு அதுக்கு நாலு பின்னூட்டம் அடிக்கறீங்களா? நீங்க பண்ணற கயமைத்தனத்துக்கு, அட சாரி, கவுண்டிங்குக்கு ஒரு அளவே இல்லாம போச்சே.

    நல்லா இருங்கடா தங்கங்களா!
    //


    புள்ளி வைக்காம விட்டதுக்கு நீங்க போட்டது 5, அதுக்கு வெட்டி பதில் 6, இது கவுண்டிங் 7 ;)

    ReplyDelete
  67. //இதெல்லாம் கவுண்டிங்காக செஞ்சது இல்லை.. தானா வந்தது...
    கவுண்டிங்காக செய்யனும்னா இந்நேரம் 100 தாண்டியிருக்க மாட்டோம் ;) //

    அப்படி சொல்லுய்யா என் சிங்க வெட்டி ;))

    ReplyDelete
  68. //ஒரு சின்ன பையன பாத்து கேக்கற கேள்வியா இது??? ;)//

    அடப்பாவீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  69. //புலி,
    Y feelings???
    இப்ப பாரு உன் பின்னூட்டம் 44வதுல இருக்கும் ;)

    முன்னாடி இருந்த ஒரு பின்னூட்டத்த "வெட்டி" பின்னாடி போட்டுட்டேன் ;)
    எப்படி நம்ம டெக்னிக்??? :-) ///


    சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சுடலாம்..நெஞ்சு கிழிஞ்சிடுச்சே எங்க முறையிடலாம் :)))

    ReplyDelete
  70. //இங்கயும் இதே கதை தான். அவனுங்க டிபன் பாக்ஸ் காலி பண்ணிட்டு, கேண்டின்லு அவன்களை நம்ம அக்கவுண்ட்டில் சாப்பிட சொன்ன நாட்கள் தான் அதிகம். இதில் சில சமயம் வாத்தியார்களும் அடக்கம் :-) //
    நமக்கும் அதே கதைதான்...
    மாசத்துக்கு மெஸ் பில்லை விட அக்கவுண்ட்தான் அதிகம்...

    இதுல உள்ள கேண்டீன், வெளிய பேக்கரினு ரெண்டு இடத்துல அக்கவுண்ட் வெச்சிருந்தேன்...

    ReplyDelete
  71. //நான் படிச்ச காலேஜ்ல இது மட்டும் நான் வச்சுகவே மாட்டேன். வீக் பாயிண்ட் ஆயிடும் வெட்டி. அப்ப அப்ப மேடம்ஸ் உண்டு. அது ஆனா கணக்கில் வராது பாரு ;) //
    புலி,
    நானும் அதே...
    மேடம்ஸ்கிட்ட அக்கானு பேசி நைசா இண்டர்னல் மார்க் வாங்கிடலாம் ;)

    ReplyDelete
  72. //புள்ளி வைக்காம விட்டதுக்கு நீங்க போட்டது 5, அதுக்கு வெட்டி பதில் 6, இது கவுண்டிங் 7 ;) //
    அப்ப இது எட்டாவதா?

    ReplyDelete
  73. ////புள்ளி வைக்காம விட்டதுக்கு நீங்க போட்டது 5, அதுக்கு வெட்டி பதில் 6, இது கவுண்டிங் 7 ;) //
    அப்ப இது எட்டாவதா? //

    8 ராசியில்லைனு புலி சொன்னது மறந்துடுச்சி... அதனால அது செல்லாது ;)

    ReplyDelete
  74. //கப்பி பய said...
    //இதெல்லாம் கவுண்டிங்காக செஞ்சது இல்லை.. தானா வந்தது...
    கவுண்டிங்காக செய்யனும்னா இந்நேரம் 100 தாண்டியிருக்க மாட்டோம் ;) //

    அப்படி சொல்லுய்யா என் சிங்க வெட்டி ;))
    //
    கப்பி,
    போற போக்க பாத்தா இன்னிக்கு 100 போட்டுடலாம் போல இருக்கே ;)

    ReplyDelete
  75. //சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சுடலாம்..நெஞ்சு கிழிஞ்சிடுச்சே எங்க முறையிடலாம் :))) //

    கப்பி,
    உனக்கு என்னப்பா ஃபீலிங்???

    ReplyDelete
  76. என்னயா நடக்குது இங்க?

    போலீஸ்கார்! போலீஸ்கார்!!

    மொத்தக்கூட்டமும் இங்கதான் இருக்கு சீக்கிரம் வந்திங்கன்னா இந்த மாசம் டார்கெட் அச்சீவ் பண்ணிறலாம்.

    ReplyDelete
  77. //கப்பி,
    போற போக்க பாத்தா இன்னிக்கு 100 போட்டுடலாம் போல இருக்கே ;)//

    இதெல்லாம் ரொம்ப அநியாயம், ப்ளானோட செஞ்சுபுட்டு...
    போல இருக்குன்னா சொல்ற!

    சரி சரி.. ட்ராவிட்டுதான் 100 போடல, நீயாச்சும் 100 போடு!

    ReplyDelete
  78. //தம்பி said...
    என்னயா நடக்குது இங்க?

    போலீஸ்கார்! போலீஸ்கார்!!

    மொத்தக்கூட்டமும் இங்கதான் இருக்கு சீக்கிரம் வந்திங்கன்னா இந்த மாசம் டார்கெட் அச்சீவ் பண்ணிறலாம்.
    //
    தம்பி,
    முதல்ல உன்னயத்தான் பிடிப்பாரு...

    நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கனு அவுங்களுக்கு தெரியும் ;)

    ReplyDelete
  79. //இதெல்லாம் ரொம்ப அநியாயம், ப்ளானோட செஞ்சுபுட்டு...
    போல இருக்குன்னா சொல்ற!

    சரி சரி.. ட்ராவிட்டுதான் 100 போடல, நீயாச்சும் 100 போடு! //
    தம்பி,
    ப்ளான் போட்டிருந்தா இந்நேரம் 100 போட்டிருக்கமாட்டோம்...

    ReplyDelete
  80. வெட்டி...சின்ன வயசுல இருந்தே என்ன மாதிரியே அறிவாளியா இருந்து இருக்கீங்க.... :-)

    ReplyDelete
  81. //Syam said...
    வெட்டி...சின்ன வயசுல இருந்தே என்ன மாதிரியே அறிவாளியா இருந்து இருக்கீங்க.... :-)
    //
    ஆஹா... நினைக்கவே பெருமையா இருக்கு ;)

    உங்களை மாதிரி பெரிய தலைங்களே இவ்வளவு லேட்டா வந்தா என்ன பண்றது :-)

    ReplyDelete
  82. //உங்களை மாதிரி பெரிய தலைங்களே இவ்வளவு லேட்டா வந்தா என்ன பண்றது //

    யே அய்யா ராசா நல்லாருங்கப்பு...ஏண்டா நாயே வரலனு வெளிகுத்தாவே குத்தி இருக்கலாம்.... :-)

    ReplyDelete
  83. //யே அய்யா ராசா நல்லாருங்கப்பு...ஏண்டா நாயே வரலனு வெளிகுத்தாவே குத்தி இருக்கலாம்.... :-) //

    என்னங்க பாஸ் உங்களை அப்படி சொல்லுவோமா??? நீங்கலாம் வரலைனா காமெடி பதிவானு எனக்கே சந்தேகமா இருக்கு... அதனாலத்தான் :-)

    ReplyDelete
  84. //என்னங்க பாஸ் உங்களை அப்படி சொல்லுவோமா??? நீங்கலாம் வரலைனா காமெடி பதிவானு எனக்கே சந்தேகமா இருக்கு... //

    சரி கோயம்புத்தூர்ல படிச்சிட்டு இது கூட இல்லனா எப்படி...நீங்களாவது எப்படியாவது கஷ்ட பட்டு 70-80 க்குள்ள எடுத்திட்டீங்க...எங்க ஸ்கூலுல வக்காளிங்க கணக்குல பெயில் ஆனா ரேங்க் போட மாட்டேனு கடைசி வரைக்கும் எனக்கு ரேங்க்குனாலே என்னானு தெரியாம போச்சு...ஆனா எங்கப்பா கையெழுத்து நல்லா தெரியும் :-)

    ReplyDelete
  85. //சரி கோயம்புத்தூர்ல படிச்சிட்டு இது கூட இல்லனா எப்படி...நீங்களாவது எப்படியாவது கஷ்ட பட்டு 70-80 க்குள்ள எடுத்திட்டீங்க...எங்க ஸ்கூலுல வக்காளிங்க கணக்குல பெயில் ஆனா ரேங்க் போட மாட்டேனு கடைசி வரைக்கும் எனக்கு ரேங்க்குனாலே என்னானு தெரியாம போச்சு...ஆனா எங்கப்பா கையெழுத்து நல்லா தெரியும் :-) //
    நமக்கு டோட்டல பாத்தா 75-80க்குள்ள வரும்... ஆனா ஒரு சிலர் இந்த மாதிரி கப் வாங்கறதால நமக்கு ரேங் குறைஞ்சிடும்...
    இதுக்காகத்தான் நான் பாஸ் போட சொல்லி வாத்தியார்கிட்ட சண்டை போட்டு பாஸாகிடுவேன் ;)

    கணக்கு பரிட்சைல நடந்த ஒரு துன்பியல் சம்பவம் அடுத்த பதிவுல வரும் ;)

    ReplyDelete
  86. //ஆனால் ஏற்கனவே ஒரு வருஷம் ஆறாவது படிச்ச எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததால அந்த வருஷம் என்னால அந்த ரேங்க் வாங்க முடியலை. அப்பறம் போக போக பிக் அப் பண்ணி 70-80 ரேங்க் வாங்க ஆரம்பிச்சிட்டேன்//

    நல்ல காமெடி!

    ReplyDelete
  87. //BadNewsIndia said...

    //ஆனால் ஏற்கனவே ஒரு வருஷம் ஆறாவது படிச்ச எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததால அந்த வருஷம் என்னால அந்த ரேங்க் வாங்க முடியலை. அப்பறம் போக போக பிக் அப் பண்ணி 70-80 ரேங்க் வாங்க ஆரம்பிச்சிட்டேன்//

    நல்ல காமெடி! //

    மிக்க நன்றி!!!

    ReplyDelete
  88. என்னப்பா இது நீங்க 100 போடுறதுக்கெல்லாம் யுவராஜ் சிங்கும், டோனியும் வருவாங்களா?

    நானே பார்த்துக்கறேன்!

    ReplyDelete
  89. //என்னப்பா இது நீங்க 100 போடுறதுக்கெல்லாம் யுவராஜ் சிங்கும், டோனியும் வருவாங்களா? நானே பார்த்துக்கறேன்! //
    இவுங்க ரெண்டு பேரும் இந்தியா டீமுக்கே வருவாங்களான்னு சந்தேகமா இருக்கு, இன்கியா வரப்போறங்க. நாமதான் ஆடனும்.

    ReplyDelete
  90. //ரவி சாஸ்திரி said...
    என்னப்பா இது நீங்க 100 போடுறதுக்கெல்லாம் யுவராஜ் சிங்கும், டோனியும் வருவாங்களா?

    நானே பார்த்துக்கறேன்!
    //
    சாஸ்திரி சார்,
    ஆடற காலத்துல கட்டைய போட்டுட்டு இப்ப வந்து தல மாதிரி டயலாக் பேசிட்டு இருக்கீங்க :-)

    ReplyDelete
  91. //இவுங்க ரெண்டு பேரும் இந்தியா டீமுக்கே வருவாங்களான்னு சந்தேகமா இருக்கு, இன்கியா வரப்போறங்க. நாமதான் ஆடனும்.//
    இந்தியா டீமுக்கு வருவாங்களானு இல்ல... 100 போடுவாங்களானு சந்தேமா இருக்கு...

    எதுக்கு சந்தேகமெல்லாம் இந்தியா B டீம்கூட ஆடும்போது 100 போடுவாங்க :-)

    ReplyDelete
  92. //சாஸ்திரி சார்,
    ஆடற காலத்துல கட்டைய போட்டுட்டு இப்ப வந்து தல மாதிரி டயலாக் பேசிட்டு இருக்கீங்க :-) //

    வெட்டி,

    சூப்பரு கொஸ்ட்டின். ஒன்னு சாஸ்திரி வந்து இதுக்கு பதில் சொல்லணும். இல்லே நம்ம தல சொல்லணும்!!!!!

    வேர் இஸ் அவர் ஹெட்

    (ஹவ் இஸ் மை இங்கிலிபிஸ்)

    ReplyDelete
  93. //வெட்டி,

    சூப்பரு கொஸ்ட்டின். ஒன்னு சாஸ்திரி வந்து இதுக்கு பதில் சொல்லணும். இல்லே நம்ம தல சொல்லணும்!!!!!
    //
    ரெண்டு பேருமே வந்து சொல்லட்டும்... (அப்பதான் சீக்கிரெம் 100 போட முடியும் ;))

    //
    வேர் இஸ் அவர் ஹெட்
    //
    அமாதாபாத்லதான் இருப்பாரு ;)

    //
    (ஹவ் இஸ் மை இங்கிலிபிஸ்)//
    வெள்ளக்கார துறையாயிட்டீங்க ராயலு :-)

    ReplyDelete
  94. //(ஹவ் இஸ் மை இங்கிலிபிஸ்)//
    வெள்ளக்கார துறையாயிட்டீங்க ராயலு :-) //

    ரொம்ப டாங்கீஸ் வெட்டி..... இத்தனை பேரும் வெயிட் பண்ணுறோம் தலயே காணோம், அவரு என்னா சூப்பர் ஸ்டாரா, இவ்வளவு லேட்டாக்குறாரு,,

    எப்போ வந்தாலும் சரி...
    லேட்டஸ்ட் ஆப்பு வாங்குனா சரிதான்.. :-))))

    ReplyDelete
  95. //ராம் said...

    //(ஹவ் இஸ் மை இங்கிலிபிஸ்)//
    வெள்ளக்கார துறையாயிட்டீங்க ராயலு :-) //

    ரொம்ப டாங்கீஸ் வெட்டி..... இத்தனை பேரும் வெயிட் பண்ணுறோம் தலயே காணோம், அவரு என்னா சூப்பர் ஸ்டாரா, இவ்வளவு லேட்டாக்குறாரு,,

    எப்போ வந்தாலும் சரி...
    லேட்டஸ்ட் ஆப்பு வாங்குனா சரிதான்.. :-)))) //
    வந்துடுவாரு... வராம எங்கயோம் போக விட்டுடுவோமா ;)

    ReplyDelete
  96. //சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சுடலாம்..நெஞ்சு கிழிஞ்சிடுச்சே எங்க முறையிடலாம் :))) //

    கப்பி, ஏதும் டி.ஆர். படம் பாத்திய்யா?

    ReplyDelete
  97. Here Comes 99
    புலி லாஜிக் படி 8 ராசியில்லாத நம்பர் :-)

    ReplyDelete
  98. //நாகை சிவா said...

    //சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சுடலாம்..நெஞ்சு கிழிஞ்சிடுச்சே எங்க முறையிடலாம் :))) //

    கப்பி, ஏதும் டி.ஆர். படம் பாத்திய்யா? //

    கப்பியே டி.ஆர் சிஷ்யந்தான் ;)

    இந்த பதிவுக்கு 100வது பின்னூட்டம் போடறவங்கதான் இந்த உலகத்திலயே ரொம்ப நல்லவங்களாம் :-)

    ReplyDelete
  99. சரி, அது என்னயத்தவிர வேற யாரா இருக்க முடியும் :-)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)