Tuesday, September 5, 2006

அட்லாஸ் - வாலிபன்?

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினருக்கு என் வருத்தம் கலந்த வணக்கங்கள்

வருத்தம் ஏன்? வ வா ச வில் சேரத் தகுதியில்லாதவன் என்பதால்! அது ஏன்?

ப ம க அடிப்படை உறுப்பினர் என்பதாலா? நிச்சயமாக இல்லை. ப ம கவுக்கும் வ வா சவுக்கும் கொள்கைகள் கூடாது என்ற பொதுக்கொள்கை இருப்பதால் அதில் எந்தப் பிணக்கும் கிடையாது.

நான் வாலிபனில்லையா? என் வயசெல்லாம் ஒரு வயசா? வாலிபன் தான். இருந்தாலும், வருத்தப்படாதவன் இல்லை!

வருந்தி வருந்தியே வாழ்ந்த வாலிபப்பருவத்துக்குச் சொந்தக்காரன் நான்.

கேளுங்கள் என் கண்ணீர்க்கதையை. படிக்கும் போது அழுதுவிடாதீர்கள். கீபோர்டு தண்ணீர், காபி, இளநீர், பீர் போன்றவற்றோடு, கண்ணீரையும் தாங்காது. அச்சடித்துப் பின் படித்தாலும் எழுத்துகள் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு படியுங்கள்!

ஒவ்வொரு ப்ராஜக்ட் சைட்டிலும் ஏதோ ஒரு ஸ்பானர் சைட்டடிக்க முடியாத சோகத்தை போல்ட்டை டைட்டடிப்பதில் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

வார்த்தைகளுக்குள் அகப்படாத அந்த சோகத்தை வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மெக்கானிக்கல் பொறியாளனின் கதைதான் இது..

இதைப்படிக்கும் கல்நெஞ்சும் கரையும். கொதிக்கும் ரத்தம் உறையும்..

16 வயதினிலே
"எங்கடா கிளம்பிட்டீங்க?"

"டைம் நாலாச்சில்ல, காலேஜ் வுடற நேரம். கொஞ்ச நேரம் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கவேணாமா?"

"நானும் வரேண்டா"

"நீயா? சரியாப்போச்சு போ. மீசை கூட முளைக்கல. நீ கூட இருந்தா எவளும் எங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டாங்க!"

"அப்படிச் சொல்லாதேடா. இவன் வந்தா இரு கோடுகள் தத்துவப்படி நாம அழகாத் தெரிவோமில்லையா?"

"சரி ஒழிஞ்சிபோ. அங்க வந்து தொந்தரவு பண்ணக்கூடாது"

"அதோ வரா பாரு ஸ்வேதா. அவளைத்தான் நானும் அஞ்சு மாசமா ரூட் விட்டுகிட்டு இருக்கேன். ம்ஹூம். வேலைக்கு ஆவாது போல. டைம் கூட கேக்க முடியல இன்னி வரைக்கும்"

"என்னடா இது நேரா இங்கேயே வரா!"

"நீ.. சுரேஷ் தானே.. ____ தம்பி?"

"ஆமா"

"இங்கே என்ன பண்றே? சைக்கிள் இல்லையா? நான் வேணும்னா வீட்டுக்குக் கூட்டிப் போகட்டுமா?"

"...."

"இவங்கள்ளாம் உன் பிரண்ட்ஸா? அப்போ உன் வயசுதான் இருக்கும்.. பசங்களா.. உங்களை டெய்லி இதே இடத்திலே பார்க்கிறேன். படிக்கிற வயசிலே படிங்கப்பா. பாத்தா பெரிய பையனுங்க மாதிரி இருக்கீங்க! பொறுப்பு வரலியே.."

"அப்பா! போயிட்டாடா! உன் பேச்சக் கேட்டு இவனைப்போயி கூட கூட்டிகினு வந்தோமே! ஒரே அடியிலே நம்மளைக் குழந்தைங்களாக்கிட்டுப் போயிட்டா. மொத்துறா இவனை!"

எனக்கு இருபது, யாருக்கு பதினெட்டு?

"என்னடா ஊரு இது. ஒண்ணு 10 வயசுக் குழந்தைங்க இல்லியா, 50 வயசு ஆண்ட்டிங்க! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஒண்ணுமே பட மாட்டேங்குதேடா"
"நார்த் இந்தியாவே அப்படித்தான் டா"
"ஆமா, வந்துட்டாருடா அறிவுசீவி! வயசுப்பொண்ணுங்களே கிடையாதாடா நார்த் இந்தியாவுலே"
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல! இது டவுன்ஷிப் இல்லையா? இந்த ஊர்லே பத்தாங்கிளாசுக்கு மேலே ஸ்கூலே கிடையாது. வயசுப்பொண்ணுங்க எல்லாம் படிக்கறதுக்கு வேற ஊர் போயிடறாங்க!"
"நமக்கு மட்டும் ஏண்டா இப்படி?"
"கிடக்கட்டும் வா வேலையப் பாப்போம்! ரம்பா குஷ்பூ எல்லாரும் பிரேக்டவுண்"
"அது யாருடா ரம்பா குஷ்பூ?"
"50டன் லாரி ரம்பா.. ஒல்லியா இருக்கில்ல, 85டன்னுக்கு குஷ்பூ பேரை வெச்சு மனசத் தேத்திக்க வேண்டியதுதான்"
"அந்த பழைய காலத்து 35டன் லாரி?"
"அதுவா, கொல்லங்குடி கருப்பாயி!"
வேட்டையாடாதே விளையாடாதே! (25 வயதினிலே)

"சார் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும்"
"என்ன மேட்டர் சொல்லு. அப்புறம் யோசிக்கிறேன்"
"கஷ்டப்பட்டு மெட்ராஸ் ட்ரேன்ஸ்பர் வாங்கியிருக்கேன். இங்கே ஸ்டெல்லா
மேரிஸ், எஸ் ஐ ஈ டின்னு பல காலேஜுங்கள்லாம் இருக்குதாமே, அதையெல்லாம் ஒரு முறை பாத்துட்டு வரலாமுன்னு"
"சைட்டடிக்கப் போறயா?"
"தப்பா சார்?"
"இதுக்கு நான் பர்மிஷன் தர மாட்டேன். இது ஒரு நாள்லே முடியற வேலையில்லே. ஒரு நாள் போயிப் பாத்துட்டேன்னா, டெய்லி போகணுமுன்னு சொல்வே. நான் மாட்டேன்னா வேலைய விட்டுடுவே."
"அதனாலே?"
"வேலை செய்யற ஒரு ஆளு ரிசைன் பண்றதுக்கு நான் காரணமா இருந்தா அதனாலேயே என்ன டெர்மினேட் பண்ணிடுவாங்க! அதனால.."
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் (30 வயதினிலே)

சொல்ல ஒன்றுமில்லை. கல்யாணம் ஆகிவிட்டது:-((
பிறகு துபாய்க்கு வந்தும், சைட்டடிக்க உரிமை மறுக்கப்பட்டவனாயே என் சோக வாழ்க்கையைத் தொடர்கிறேன்.
ஏன் என்போன்ற சிலருக்கு மட்டும் இந்தக்கதி? பொட்டி தட்டும் பொறியாளர்கள் இளமை கொப்புளிக்கும் பருவத்தில் உலகெங்கும் சைட்டடிக்க, உள்ளூரிலும் ஜொள்விடத் தடை செய்யப்பட்ட ஸ்பானர் பொறியாளர்கள் சார்பாகக் கேட்கிறேன்..
இந்த இழிநிலை மாற வ வா ச ஒரு மாபெரும் போராட்டம் அறிவிக்குமாயின் அப்போராட்டத்தின் வெற்றிக்காக நான் நீர்க்குளிக்கத் தயார்!

55 comments:

  1. //அப்போராட்டத்தின் வெற்றிக்காக நான் நீர்க்குளிக்கத் தயார்! //

    அப்படியாவது குளிச்சா சரிதான்.

    அப்புறம், இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அப்புறம் வயசான பக்கத்து வீட்டு மாமா ஆயிடுவீங்க. அப்புறம் கவலை இல்லாம சைட் அடிக்கலாம், 'ஏண்டிம்மா குழந்தை' அப்படின்னு கூப்பிட்டு வம்படிக்கலாம், அப்புறம்.. சரி விடுங்க.

    இதெல்லாமும் நார்மல் ஆளுங்களுக்குத்தான். ஆனா உங்களை மாதிரி பாவப்பட்ட ஆத்மாவுக்கு இந்த வாய்ப்பு எதனால பறிபோகுமோ தெரியலையே.

    ReplyDelete
  2. //அப்போராட்டத்தின் வெற்றிக்காக நான் நீர்க்குளிக்கத் தயார்!//

    பினாத்தல் குளிக்கும் நீரில் பெனாயில் கலக்க நானும் தயார்.
    யப்பா! இதக்காரணங்காட்டியே குளிக்க ரெடியாகிட்டு இருக்குறாரு பெனாத்தலாரு.
    யாரும் ஏமாந்துராதீங்க.

    ReplyDelete
  3. //அப்பா! போயிட்டாடா! உன் பேச்சக் கேட்டு இவனைப்போயி கூட கூட்டிகினு வந்தோமே! ஒரே அடியிலே நம்மளைக் குழந்தைங்களாக்கிட்டுப் போயிட்டா. மொத்துறா இவனை!//


    ஆகா சேம் பிளட்.....

    ReplyDelete
  4. //"வேலை செய்யற ஒரு ஆளு ரிசைன் பண்றதுக்கு நான் காரணமா இருந்தா அதனாலேயே என்ன டெர்மினேட் பண்ணிடுவாங்க! அதனால.."//

    உலக பொய்யிடா சாமியோவ்.....:-)

    ReplyDelete
  5. ஹே ஹே ஹேய்ய்ய்...
    ஹா ஹா ஹா ஹா...

    :)

    தல.. ஒன்னோட பாஸ்டுல இவ்ளோ ஸேடு ஸ்டோரி இருக்குதாபா.

    ஆனா ஒண்ணுபா. உன் ஸேட் ஸ்டோரிய கேட்டா சிரிப்பு நல்லா வர்துபா.

    ReplyDelete
  6. ஜொல்லுதல் யார்க்கும் எளிய.

    ReplyDelete
  7. நான் நீர்க்குளிக்கத் தயார்! // நெலம அப்படியா? இந்த மாதிரி எக்குத்தப்பான நேரத்தில மட்டும்தான் 'நீர்க்குளிக்கிறதா'? அதுதான் என்னடா ஒருமாதிரி கப்பு அடிக்கிதே இந்தப் பதிவிலன்னு பாத்தேன்! :)

    ReplyDelete
  8. துபாய் குறுக்கு சந்தில் (நீ)ர் குளிக்கும் போராட்டத்தை வைத்தால் தல கலந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    அதனை தொடர்ந்து தீக்குளிக்கும் போராட்டத்தை தல தொடங்கி வைத்து தீக்குளிப்பார்..

    கண்டுகளிக்க அனைவரும் வருக ..!!!!
    போஸ்டர் அடிக்க ஆடர் குடுத்தாச்சி..::)

    ReplyDelete
  9. கேள்வியோட ஆரம்பிச்ச ஒரு கண்ணீர்க்கதை.ஸ்பேனர் புடிச்சா மட்டும் இப்படி ஆகாதுங்க, நம்மள மாதிரி கலைப்பை புடிச்ச ஆளுங்களுக்கும் ஆகி இருக்கு.

    ReplyDelete
  10. //கல்நெஞ்சும் கரையும்//
    நமக்கு கல் நெஞ்சு இல்லே, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப இளகின மனசு. அதனால கரையல. ஹிஹி

    //கொதிக்கும் ரத்தம் உறையும்..//

    BP இன்னும் வர வயசு இல்லே அதனால உரையல. சரி பினாத்திட்டாரேன்னு ஃப்ரிட்ஜுக்கு உள்ள உக்காந்து உரைய வெக்கிலாம்னா, வீட்ல நம்மள வேற மாதிரி டேப்பரா பார்க்கிறாங்க.

    ReplyDelete
  11. தங்கமணி வ.வா.ச படிக்க மாட்டாங்களா?

    ReplyDelete
  12. //நம்மள மாதிரி கலைப்பை புடிச்ச ஆளுங்களுக்கும் ஆகி இருக்கு.
    //

    இளா, நீங்க இ-கலப்பையைத்தானே சொல்றீங்க! இ-கலப்பை பிடிக்கிற எல்லாருக்குமே இப்படி ஒரு பின்னணிக் கதை இருக்குதுதான்!

    ReplyDelete
  13. இப்பவாவது குளிக்கனும்னு தோணுச்சே...அதுக்கே ஒங்களப் பாராட்டனும்.

    ஆனா ஒன்னு....இதுக்காக காவிரியில தண்ணி தொறந்து விடனும்னு மட்டும் கேக்கக் கூடாது. சொல்லீட்டேன்.

    நீங்க குளிக்காம இருக்கீங்கன்னு இப்பத்தான தெரியுது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. வாலிபர்களுக்கு எதிராகக் காலம் காலமாக் கட்டவிழ்த்து விடப்படும் அட்டுழியங்களை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்திருப்பதற்காக முதலில் வ.வா.ச சார்பில் உங்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் பதிவினை அப்படியே நகல் எடுத்து நாளை கோபி அன்னான் உடன் காபி அருந்தச் செல்லவிருக்கும் நம் அன்புத் தம்பி சிவா அவ்ரிடம் இதுக் குறித்து விரிவாய் பேசுவதாய் கூறியுள்ளார்.

    ReplyDelete
  15. மேலும் உலக வாலிபர்கள் யாருக்கு என்ன வருத்தம் உண்டு என்றாலும் தயங்க வேண்டாம் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
    வருத்தப்படாத வாலிபர் சங்கம்
    WWW.VAVAASANGAM.BLOGSPOT.COM

    வாலிபர்களின் பிர்ச்சனைகளுக்காக் உடனே நீர் குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட தம்பி போர்முரசு பாண்டி தலைமையில் பல பயமறியாக் காளைகள் பீர் பாட்டிலில் இருந்து தெறித்து விழும் மூடிகள் போல் சீறி சினமெடுத்து நிற்கிறார்கள்.. கவலை வேண்டாம்

    ReplyDelete
  16. சுரெஷ், நீ மட்டும் நீர்குளிக்கும் போராட்டத்தில் தனியாக ஈடுபடுவதை நினைத்து என் மனம் நீரிலிட்ட மீன் போல நீந்துகிறதே!...

    என்னால் தாங்க முடியவில்லை. இதோ உனக்கு துணையாக நானும் கிளம்பிவிட்டேன்.

    (இது வேறொரு கல்யாணமான வாலிபனின் சோகம்)

    ReplyDelete
  17. //இ-கலப்பையைத்தானே சொல்றீங்க!//
    கககபோ

    ReplyDelete
  18. 17 தானா? சரி நன்றிகள் அறிவிச்சு 30க்கு பக்கத்துலே கொண்டு வந்துடலாம்!

    ReplyDelete
  19. இலவசம் அண்ணா,

    உடல் குளிப்பதைப்பற்றிச் சொல்கிறீர்களா? உள்ளம் குளிப்பதைப்பற்றிச் சொல்கிறீர்களா?

    ReplyDelete
  20. //ஆனா உங்களை மாதிரி பாவப்பட்ட ஆத்மாவுக்கு இந்த வாய்ப்பு எதனால பறிபோகுமோ தெரியலையே. //

    நல்ல எண்ணமய்யா உமக்கு!

    ReplyDelete
  21. பெருசு.. பெனாயில் மட்டும்தானே? ஆசிட் எல்லாம் கிடையாதே?

    ReplyDelete
  22. ராம்.. அதென்ன சேம் பிளட்? நீங்களும் இரு கோடுகள் நண்பர்தானா;-)

    ReplyDelete
  23. அண்ணா, ராமண்ணா! அப்படி இப்படி ஒண்ணு ரெண்டு பொய்யக்கண்டுக்காம விட்டுடணும்.

    ReplyDelete
  24. பிரபு ராஜா! (அடுத்தவனுக்கு) துன்பம் வரும் வேளையிலே சிரிக்கற பார்ட்டிதானா நீங்களும்?

    ReplyDelete
  25. குமரன், நான் முடிக்கறேன்:

    அரியவாம் ஜொள்ளு விட வாய்ப்பு பெறல்:-((

    ReplyDelete
  26. தருமி.. அது என்ன 1500 வார்த்தையிலே அது ஒரு வார்த்தைய மட்டும் பிடிச்சுகிட்டீங்க! குளியலுக்குமா ஹிட் கவுண்ட்டர் போட்டு டிஸ்ப்ளே பண்ண முடியும்?

    ReplyDelete
  27. மின்னுது மின்னல், நீங்கள் குறிப்பிடும் தல.. கைப்ஸ்தானே? நான் இல்லையே!

    ReplyDelete
  28. கலப்பை பிடிச்ச விவசாயி, உங்களுக்கெல்லாம் இன்னும் சான்ஸு இருக்கு.. எனக்கு:-((

    ReplyDelete
  29. இளா, அதெல்லாம் நிஜமான கல்நெஞ்சுக்கும் கொதிக்கும் ரத்தத்துக்கும் சொன்னது. நீங்கள்லாம் சீரியல் பாத்தே அழாத இரும்பு நெஞ்சனுங்க!

    ReplyDelete
  30. பொன்ஸ்.. தங்கமணியா? இதைப்படிப்பாங்க! இந்தக்கதை ஏற்கனவே நான் பலமுறை அழுத கதைதானே!

    ReplyDelete
  31. வாங்க ஸ்டாரு! எங்ககிட்ட எல்லாம் பேச மாட்டீங்களோ?

    ReplyDelete
  32. ராகவன், காவிரிய எல்லாம் திறந்து விட வேண்டாம், கொஞ்சம் மாங்காய், சாம்பல் மட்டும் அனுப்புங்களேன்.

    ReplyDelete
  33. தேவ்.. எதோ நீங்க எல்லாம் இருக்கீங்கன்னுதான் உங்ககிட்டே முறையிடறோம்! கோபியண்ணன் யாரு இந்த மெட்டி ஒலி எடுத்தவர்தானே?

    ReplyDelete
  34. //ராம்.. அதென்ன சேம் பிளட்? நீங்களும் இரு கோடுகள் நண்பர்தானா;-) //

    ஹீக்கும் அது சொல்லி தெரியணுமா என்னா.... :-)))))

    ReplyDelete
  35. /./
    மின்னுது மின்னல், நீங்கள் குறிப்பிடும் தல.. கைப்ஸ்தானே? நான் இல்லையே!
    /./

    தீக்குளிக்க வீராதி வீர அஞ்சா நெஞ்சம் கைப்பூ இருக்கும் போது...

    நீங்க எதுக்கு குறுக்க வந்திங்க ..
    அட்லாஸ் வாலிபன்னா சும்மாவா..???

    மண்ணென்னை ஊத்தாதிங்கப்பு
    இங்க பெட்ரோல் ரொம்ப சீப்ப்பு...::)

    ReplyDelete
  36. //"நார்த் இந்தியாவே அப்படித்தான் டா"

    "ஆமா, வந்துட்டாருடா அறிவுசீவி! வயசுப்பொண்ணுங்களே கிடையாதாடா நார்த் இந்தியாவுலே"

    "அதெல்லாம் ஒண்ணும் இல்ல! இது டவுன்ஷிப் இல்லையா? இந்த ஊர்லே பத்தாங்கிளாசுக்கு மேலே ஸ்கூலே கிடையாது. வயசுப்பொண்ணுங்க எல்லாம் படிக்கறதுக்கு வேற ஊர் போயிடறாங்க!"//

    தலைவா! என் சோகக் கதையை நீங்களும் அனுபவிச்சிருக்கிங்களா? வருஷம் ஏழாச்சு நார்த் இந்தியா வந்து...எங்கே போனாலும் நம்ம கதையும் இதே கதை தான் :(

    என்ன ஒன்னு? இனிமே பெரியவரு பெனாத்தலாரே இதெல்லாம் அனுபவிச்சிருக்காரு...நீ என்னடா பிஸ்கோத்துன்னு என்னைய நானே தேத்திக்குவேன்.
    :)

    ReplyDelete
  37. //கீபோர்டு தண்ணீர், காபி, இளநீர், பீர் போன்றவற்றோடு, கண்ணீரையும் தாங்காது. //

    :-)))

    //நான் வாலிபனில்லையா? என் வயசெல்லாம் ஒரு வயசா? வாலிபன் தான்.//

    ஆமாமா.. நாமெல்லாம் எப்பவுமே வாலிபன் தானே...

    //அப்போராட்டத்தின் வெற்றிக்காக நான் நீர்க்குளிக்கத் தயார்!//

    எங்க ?

    நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய்லயா?

    மொதல்ல ஒரு ஸ்பான்சர் புடிங்கப்பா.. துபாய்ல தண்ணி வெலை ஜாஸ்த்தியாமா....

    ReplyDelete
  38. சுரேஷ்,

    என்னமோ போங்க முதல்வன்ல வர்ற டயலாக் ஞாபகம் வருகிறது "விசிஆர்ல இருக்கிற மாதிரி ரீவைண்ட் பட்டன் வாழ்க்கையிலயும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்" பழைய இரு கோடுகளில் கோணாலகிப்போன ஒரு கோட்டைச் சரியா "ஜொள்ளி"ச் சரியாப் போட்டிருக்கலாம்னு தோணுது.

    ஹேய்...ஒருநிமிஷம்...
    ஒண்ணுமில்லை பறந்துவந்த கரண்டி, குழவியைக் கேட்ச் பண்ணேன்.

    கல்யாணமானா சரியாப் பெனாத்தக்கூட முடியவில்லை. அப்பாம்மா பார்த்துக் கட்டிவைத்த சொர்ணாக்கா பிகர் கிட்ட மாட்டினவன் என்னத்தச் சொல்ல!

    பறந்து வர்றது கூரான விளிம்புள்ள அடுக்குச்சட்டியா... சுரேஷ் அப்புறமா நான் வர்றேன்.

    அன்புடன்,

    ஹரிஹரன்

    ReplyDelete
  39. புரியுதுங்க புரியுது :-( என்னத்த பன்ன.. அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கனும்..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  40. மின்னுது மின்னல்! எப்போ, எங்கே வெச்சுக்கலாம், போரட்டத்த?

    ReplyDelete
  41. ராம், பாம்பின் கால் பாம்பறியும்!

    ReplyDelete
  42. கைப்பு!

    வாங்கய்யா வாங்க.. அதென்ன "பெரியவர் பெனாத்தலார்?" என் வீக் பாயிண்ட்லே அடிக்கறீங்களே இது நியாயமா?

    ReplyDelete
  43. /./
    சுரேஷ் (penathal Suresh) said...
    மின்னுது மின்னல்! எப்போ, எங்கே வெச்சுக்கலாம், போரட்டத்த?
    /./

    ஆஹா கேட்குற வேகத்த பாத்தா என்னைய கொளுத்திடுவீங்க போல தெரியுது....::0

    ReplyDelete
  44. வாங்க தலைவா வாங்க...அந்த சின்ன மனசுல இவ்வளவு சோகமா!!

    :)))கறதா :((றதா??

    ReplyDelete
  45. பெரியவரே,
    Same Blood. அடடா வாழ்க்கையில தமிழ்மணத்துல இருக்குற எல்லாரும் ஒரே இரத்தம் தான் போல இருக்கே.

    ReplyDelete
  46. //அதென்ன "பெரியவர் பெனாத்தலார்?" என் வீக் பாயிண்ட்லே அடிக்கறீங்களே இது நியாயமா?//

    அதொன்னுமில்லீங்ணா...உங்க கிட்ட கத்துக்கிட்ட அதே இரு கோடுகள் டெக்னிக் தான்...ஹி...ஹி

    ReplyDelete
  47. கோபி,
    //ஆமாமா.. நாமெல்லாம் எப்பவுமே வாலிபன் தானே... // அதேதான்!

    //மொதல்ல ஒரு ஸ்பான்சர் புடிங்கப்பா.. // விவரமா வேடிக்கை பாக்கத் தயாராயிட்டீங்களா? கொண்டாட்டமா இருக்குமே??

    ReplyDelete
  48. ஹரிஹரன்,

    //சொர்ணாக்கா பிகர் கிட்ட மாட்டினவன் என்னத்தச் சொல்ல!//

    வீட்டுக்கு வீடு வாசப்படி.. வீக்கத்துக்கு ஐயோடெக்ஸ் தடவவும். தவிட்டு ஒத்தடம் பலன் தராவிட்டாலும் வோவரான் ஜெல் தடவினால் வலி உடனே பறந்து போகும்; நாமா அடி வாங்கியது என்று நினைப்பீர்கள் என்றால் பாருங்களேன்.

    ReplyDelete
  49. மின்னல்,

    கடமைக்கு முன்னால பாசத்துக்கு இடம் கொடுக்க மாட்டான் இந்த பினாத்தலான்!

    ReplyDelete
  50. கப்பி பய,

    இதிலே என்ன கன்ப்யூஷன்? நீங்க ஜொள்ளுப்பாண்டியோட டீமா இருந்தா :-))); என் கட்சியா இருந்தா :-((( அவ்வளோதானே?

    ReplyDelete
  51. சந்தோஷ்..
    அப்படி ஒரேயடியாவும் சொல்லிட முடியாது. வேற கட்சிக்காரங்களும் இருக்காங்க - கருங்காலிகள்!

    ReplyDelete
  52. கைப்ஸ்,

    உண்மையச் சொல்லுங்க.. இரு கோடுகள் தத்துவத்த "என் கிட்டயா" கத்துகிட்டீங்க?

    ReplyDelete
  53. மன்னிச்சுருங்க மனதின் ஓசை,

    நடுவுலே எங்கேயோ மாட்டிகிச்சு உங்க பின்னூட்டம்!

    என்ன பண்ண நாம கொடுத்து வச்சது கம்மின்றதால ஆண்டவன் நம்ம வாழ்க்கைய கெடுத்து வைச்சுடறான்:-(

    ReplyDelete
  54. //சந்தோஷ்..
    அப்படி ஒரேயடியாவும் சொல்லிட முடியாது. வேற கட்சிக்காரங்களும் இருக்காங்க - கருங்காலிகள்!//

    :))

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)