Wednesday, August 2, 2006

ஆகஸ்டு 2006- அட்லாஸ் வாலிபர்

கொங்குஆகஸ்டு 2006- அட்லாஸ் வாலிபர், ஒரு சக விவசாயி,புது மாப்பிள்ளை நம்ம கொங்கு "ராசா" தாங்க. எழுதுறதுலயும் படம் போட்டு கதை சொல்றதுலயும் அவருக்கு நிகர் அவரே. கிராமிய மணம் கமழ பாரதிராஜா மாதிரி ஆரம்பிச்சு பாலசந்தர் மாதிரி இமையம் தொட்டு, நவரசங்களையும் புழிஞ்சு எழுதிகிட்டு இருக்கிறவர். அரசியல், குழு மாதிரி எந்த பிரச்சினைகளையும் சந்திக்காத சங்கத்து கொள்கைக்கு சரி நிகர் கொள்கை வெச்சு இருக்கிறவர், அந்த கொள்கையினால ஈர்க்கபட்டுதான் இந்த மாத அட்லாஸ் வாலிபர் ஆகியிருக்கார். பதிவு மக்கள் சில பேர் "வாடா,போடா, மாப்பிள்ளை" அப்படின்னு கூப்பிடற அளவுக்கு அறிமுகம் ஆகி சீக்கிரமே நெருங்கி பழகக்கூடியஒரு நல்ல மனிதர். சுருக்கமா சொன்னா "DOWN TO EARTH". விவசாயம்தான் தன்னுடைய மூச்சுன்னு நினைக்கிற ஒரு விவசாய குடிமகன். பொள்ளாச்சிகாரர், கவுண்டரோட ரசிகர், "தல" அஜித் ரசிகர், யமாஹா பிரியர். காய்ச்சல் வந்தததைக்கூட கொங்கு மண்டல குசும்போட சொன்னவரு. வென்னிலா கேக், "தளபதி" வேட்டி கட்டு, ஜவ்வரிசி பாயாசம், குறள் #70 ன்னு அவரோட சூப்பர் பதிவுகளை என்னைக்குமே மறக்க முடியாது. தமிழ் பதிவு ஆரம்பிச்ச முத 20 பதிவாளர்களுள் இவரும் ஒருத்தர். வாத்தியாரோட செல்ல மாணவர்களில் இவரும் ஒருவர்(சுதர் கோவிச்சுக்காதீங்க).வாங்க கொங்கு "ராசா" வாங்க வந்து ஆரம்பிங்க உங்க கலாய்ச்சல. ஜூன் மாதம் தேன்கூடு போட்டியில ஆறுதல் பரிசு வாங்கினவரு(வாத்திக்கு முதல் இடத்த விட்டுகுடுத்த நல்ல மாணவர்)
அவரோட பதிவு-சொடுக்குங்க .
கவுண்டமணி பதிவு போடுவீங்கதானே ராசா?

19 comments:

  1. வாங்க வாங்க வந்து எங்க ஆப்ப எல்லாத்தையும் நீங்களே வாங்கிங்குங்க என இரு கரம் கூப்பி வரவேற்க்கின்றேன்.

    ராசாதி ராசா, ராச மார்தண்ட, ராச கம்பீர கொங்கு ராசா வருகிறார்
    பராக் பராக் பராக்

    ReplyDelete
  2. வாங்க ராசா வாங்க.

    ReplyDelete
  3. //நவரசங்களையும் புழிஞ்சு எழுதிகிட்டு இருக்கிறவர்.//

    :-))

    வா ராசா!! வா.

    ReplyDelete
  4. ராசா உங்களை சங்கத்துக்கு அன்போடு வரவேற்கிறோம்.
    இந்த மாதம் சங்கப் பக்கங்களை உங்கள் நகைச்சுவை உணர்வால் உழுது சிறப்பான சிரிப்பு அறுவடைச் செய்ய வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

    இளா - ராசா பற்றிய ஒரு நல்ல அறிமுகம் கொடுத்துருக்கீங்க.. நன்றி.

    ReplyDelete
  5. வாங்ண்ணா...வாங். ரவுசு ஸ்டார்ட் ஆவட்டுங்...
    :)

    ReplyDelete
  6. (இளா)!!!
    நாகையார் அவர்கள் "ராஜ குலத்துங்கு"வை விட்டு விட்டாரே அதை கவனித்தீரா, சரியான மங்குணி அமைச்சரையா நீர்.
    (அட்லாஸ் வாலிபரை வாழ்த்தி பின்னூட்டம் பின் இடப்படும்)

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  7. //நாகையார் அவர்கள் "ராஜ குலத்துங்கு"வை விட்டு விட்டாரே அதை கவனித்தீரா, சரியான மங்குணி அமைச்சரையா நீர்//
    நாகை சிவா-->உடனடியாக அந்த வசனத்தை 100 முறை சரவணன் தனி பதிவுக்கு காப்பி-பேஸ்ட் செய்து 100 தனி மடல் இடவும்- இம்சை அரசனின் கட்டளை இது.

    ReplyDelete
  8. //மங்குணி அமைச்சரையா நீர்//
    மங்குனி அமைச்சரே நாகை சிவாதாங்க(நோட் தி பாயிண்ட் மக்களே). தேவ், பாண்டி, சிபி, கைப்பு (நோட் தி பாயிண்ட் )

    ReplyDelete
  9. //100 தனி மடல் இடவும்//

    என்ன்ன்ன்ன.. 100 பதிவுகளா? அதுவும் தனித்தனியேவா...?
    ஆஹா இதுவல்லவோ நீதி, இதுவல்லவோ நியாயம்,
    வாழ்க நீ எம்மான்(ஆமா.. எம்மான்னா என்னங்க அர்த்தம்?)

    100 தனிமடல்கள் அளித்ததால் இன்று முதல் நீ"தனி மடல் தந்த தலைவா" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப் படுவாய்!!!


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  10. வந்தாச்சு.. வந்தாச்சு..

    ReplyDelete
  11. வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம் (சந்தேகப் பார்வை) ராசா!

    லாவண்யா ஐஸ்கிரீம் சாப்பிட்டீங்களா? அதான் ஜூரம் போல! இப்பொ சரியாய்டுச்சா!

    ReplyDelete
  12. //மங்குனி அமைச்சரே நாகை சிவாதாங்க//

    பாயிண்ட் நோட்டெட்!

    ReplyDelete
  13. //100 தனிமடல்கள் அளித்ததால் இன்று முதல் நீ"தனி மடல் தந்த தலைவா" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப் படுவாய்!!!
    //

    இப்படி ஒவ்வோரு செய்கைக்கும் பட்டம் கொடுத்து வாழ்த்தின ரெண்டு பேருக்கு எப்படி அடி விழுந்தது என்று தெரியுமா சரவணன்?

    ReplyDelete
  14. //தனி மடல் தந்த தலைவா" //

    இருந்தாலும் இந்தப் பட்டம் நல்லாத்தான் கீது!

    ReplyDelete
  15. //இம்சை அரசனின் கட்டளை இது. //
    உங்களின் கட்டளை உடனடியாக நிறைவேற்றப்படும் விவ் அவர்களே!

    ReplyDelete
  16. //மங்குனி அமைச்சரே நாகை சிவாதாங்க//
    இது என்ன புது கதையா இருக்கு
    என்ன இப்படி கிளப்புறீங்க. அது ராசா சொல்வது மாதிரில எனக்குப்பட்டது.

    ReplyDelete
  17. //"தனி மடல் தந்த தலைவா"//
    இந்த பட்டம் யாருக்கு, எனக்கா இல்ல இளாவுக்கா.
    யாருக்காக இருந்தாலும் பரவாயில்லை. எங்களுக்குள்ள அப்ப அப்ப மாத்திப்போம். அதனால ஒ.கே. தான்.

    ReplyDelete
  18. //தனி மடல் தந்த தலைவா//
    நன்றிய யாஹூ, ஜிமெயில், ஹாட்மெயிலுக்கு சொல்லுங்க. ஹிஹி

    ReplyDelete
  19. //ராசாதி ராசா, ராச மார்தண்ட, ராச கம்பீர கொங்கு ராசா வருகிறார்
    பராக் பராக் பராக் //

    பராக் ப்ராக் !!!:)))

    வாங்க ராசா கொங்குராசா !!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)