Tuesday, July 11, 2006

வாருங்கள், துபாய் ராஜாவை வாழ்த்துவோம்

வலை உலக மகா ஜனங்களே,

நம்ம சங்கத்து வளைக்குடா சிங்கம்
தெக்கத்தி சீமை கிங்...
பாசத்துல்ல பனிமலை...
எழுச்சியிலே எரிமலை...

போதுமய்யா பில் டப்பு...

ஆங் சொல்ல வந்தது என்னன்னா...

பிளேன் ஏறி ஊருக்கு வந்த 'தங்கத்தோட' வாழ்க்கையிலே தவிர்க்க முடியாத ஒரு சம்பவம் நடந்துப் போச்சாம்... தங்கம் போன் பண்ணிச் சொல்லிச்சுண்ணா...

ஆமா குதூகாலாமா அங்கன நீல லுங்கியும் நீல பனியனும் கருப்பு கண்ணாடியும் போட்டுகிட்டு துபாய் சந்தையிலே வெள்ளிகிழ்மை வெள்ளிகிழமை ஹே.. யாரடி நீ மோகினின்னு.....ஆசையாப் பாடித் திரிஞ்ச அந்தப் பயப் புள்ள வாழ்க்கையிலே நடந்த சம்பவம் என்னான்னா...

வேகாத வெயில்ல வேலைப் பாத்தக் களைப்பு தீர சொந்த மண்ணுக்கு வந்து உறம்மொறையெல்லாம் பார்த்து மகிழ் ஊருக்கு வந்த நம்ம கிங் வந்த வேகத்தில்ல களவுக் கொடுத்துட்டு கண்ணை உருட்டிட்டு நின்னுருக்கார்...

ஆமாங்கோ.. கன்னா பின்னாத் திருட்டு... எக்கச் சக்கத் திருட்டு..

நம்ம துபாய் ராசா இதயம் களவுப் போயிருச்சாம் இல்ல..
பதிலுக்கு நம்மாளும் திருடுனவங்க இதயத்தை லவட்டிட்டுத் தாம் வந்துருக்கார் ( அதைக் கேட்டப் பொறவு கைப்பு விட்ட் பெருமித லுக் இருக்கே அதுப் பத்தி தனிப் பதிவு போடுறோம்ய்யா)

சரி இப்போ அந்த இதயங்கள் இரண்டும் நாளைக்கு இணையப் போகுது....


இணையும் அந்த இதயங்களை வாழ்த்த உங்களை அன்போடு அழைக்கிறோம்...

துபாய் ராஜாவிற்கும் அவர் தம் உள்ளம் கொள்ளைக் கொண்ட அவர் அன்பின் துணைவியாருக்கும் சங்கம் சார்பில் இனிய மண நாள் ( 12-07௨006) வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன்

35 comments:

  1. தம்பதியரை மருக்கா ஒரு தடவ வாழ்த்திக்கறேன் பா....

    இனிய திருமண வாழ்த்துக்கள் ராஜா!

    ReplyDelete
  2. துபாய்ல இருக்கிற குவாட்டர் கோவிந்தன்கிட்ட சொல்லாமல் போனதால் அவர் திருமணத்துக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பி உள்ளார்
    ஓல்ட் மங்கும் வாட்டர் பாக்கட்டும் போல
    பட்டையும் ஊறுகாயும் போல
    செவனப்பும் பேக் பைப்பரும் போல
    ஜின்னும் எலுமிச்சை பழமும் போல
    என்றும் பிரியாமல் பிரியமுடன் இருக்க
    மப்புடண் வாழ்த்தும்
    குவாட்டர் கோவிந்தன்

    ReplyDelete
  3. தளபதியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ராசா, நல்லா இரு ராசா. உன் கண்ல இனிமேல நான் ஆனந்தக் கண்ணீர மட்டும் தான் பாக்கனும் என்னா.
    நீ ஒன்னும் கவலைப்படாத, அண்ணிக்கிட்ட நாங்க(தேவ்,பாண்டி, நானு) எல்லாம் பக்குவமா சொல்லி இருக்கோம். உன்ன பத்திரமா பாத்துப்பாங்க.

    ReplyDelete
  5. தல திட்டாத, திட்டாத....
    அது வேற ஒன்னும் இல்லங்க, ராசாவை கண் கலங்காம பாத்துக் அண்ணிக்கிட்ட சொன்னமுல, அதுக்கு தான் தல திட்டுறார். எதுக்குனு கேட்கீறிங்களா.. வெங்காயம் உரிக்கும் போது கண் கலங்கும்ல அதுக்கு தான். அந்த மேட்டருக்கும் ஒரு ஐடியா பண்ணியாச்சு. நம்ம விவ் துபாய் ராசாவாக்காக புது வித வெங்காயம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்.

    ReplyDelete
  6. திருமதி.& திரு.துபாய் ராஜாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. துபாய் ராஜா ஆயுள்கைதியாக போகிறாரா? (கண்ணாலாம் ஆவதை தான் சொல்ரேன்) வருத்தப்படாத வாலிபராக இனிமே இருக்க முடியாது ராசா... வாழ்த்துகள்!
    (வருத்தத்துடன் :-)) )

    ReplyDelete
  8. ராசாவை நெறையத்தரம் வாழ்த்தியாச்சு, போன் போட்டுக்கூட, ஆனா இன்னொரு வாட்டி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. துபாய் ராஜா வுக்கும் , திருமதி துபாய் ராஜாவாக போகும் தோழிக்கும் அனில் குட்டி & கவிதா வின் இனிய திருமண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. தல, எல்லாருக்கும் லைனா கல்யாணம் நடக்குது.. உங்களுக்கு எப்போ... ?!!

    ReplyDelete
  11. இனிய இல்லறம் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    //நீ ஒன்னும் கவலைப்படாத, அண்ணிக்கிட்ட நாங்க(தேவ்,பாண்டி, நானு) எல்லாம் பக்குவமா சொல்லி இருக்கோம். உன்ன பத்திரமா பாத்துப்பாங்க. //
    அய்யய்யொ ராசா. உன்னைய இப்படி போட்டுக் கொடுத்துட்டாங்களே..

    ReplyDelete
  12. //தல, எல்லாருக்கும் லைனா கல்யாணம் நடக்குது.. உங்களுக்கு எப்போ... ?!!/

    வா அனிதா!
    எல்லாரும் போயிட்டாலும்...சங்கத்தை நடத்தறதுக்கு ஒரு 'உண்மையான' வருத்தப்படாத வாலிபன் வேணுமில்லியா? அதனால தான் நீ இப்பிடி...

    ReplyDelete
  13. நண்பர் துபாய் ராஜாவின் திருமணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் துபாய் ராஜா.

    கைபோன்ல கூப்பிட்டாக்கா, தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கார்ன்னு ஒரு பொண்ணு சொல்லிக்கிட்டே இருக்கு, யாரந்தபொண்ணு?

    Number: 94439 77076

    ReplyDelete
  15. //கைபோன்ல கூப்பிட்டாக்கா, தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கார்ன்னு ஒரு பொண்ணு சொல்லிக்கிட்டே இருக்கு, யாரந்தபொண்ணு?
    //

    அட! ஆமாங்க! யாரந்தப் பொண்ணு?
    கல்யாண வேலைல பிஸியா இருப்பாருன்னு பி.ஏ அப்பாயிண்ட் பண்ணியிருக்காராம்.

    ReplyDelete
  16. இளா,
    இன்னிக்கு போஸ்டரு சூப்பாரப்பூ!
    புகுந்து வெளையாடுறீங்க!

    ReplyDelete
  17. //ஒரு பொண்ணு சொல்லிக்கிட்டே இருக்கு, யாரந்தபொண்ணு?//
    அதான் எனக்கு தெரியலை இளா, வாய்ஸ் கொஞ்சம் நல்லா இருக்கே, அப்படியே கொஞ்சம் நேரம் கடலை போடலாம் பாத்தா, கிளி புள்ள மாதிரி சொன்னதே திரும்ப திரும்ப தமிழிலும், ஆங்கிலத்திலும் சொன்னுச்சு. இப்ப எங்க நீ கிட்ட பேசலனா தயாநிதி மாறன் சொல்லி உன்ன வேலைய விட்டு தூக்கிட சொல்லுவேன், மிரட்டி பார்த்தேன். ஹுஹ்ம் பார்ட்டி அசர மாட்டேன் என்கிறது.
    தல நீ தான் சரி, நீ அந்த பொண்ண கொஞ்சம் என்னானு கேளு தல

    ReplyDelete
  18. நமஸ்காரம் சிபி, நல்லாயிருகியாப்பு. இந்த பக்கம் வரதேயில்லை.

    ReplyDelete
  19. அட இப்போ கூப்பிட்டா ராஜா பேசறாரு, அந்த பொண்ணு சாப்பிட போயிருக்குமோ?

    ReplyDelete
  20. //நமஸ்காரம் சிபி, நல்லாயிருகியாப்பு. இந்த பக்கம் வரதேயில்லை//

    வேற ஒரு மன்றத்து வேலையா போயிருந்தேன் அப்பு! அதான்!

    ReplyDelete
  21. //ஹுஹ்ம் பார்ட்டி அசர மாட்டேன் என்கிறது//
    ஒரு கல்யாணத்துல இன்னொரு கல்யாணம் முடிவு ஆகுமாம், சிவா முயற்சி பண்ணுங்க விடாதீங்க. தல இருக்காரு அட்யெல்லாம் அவரு வாங்கிக்குவாரு

    ReplyDelete
  22. //இன்னொரு கல்யாணம் முடிவு ஆகுமாம், //
    இந்த ஆட்டத்துக்கு நான் வரலை. ஆள விடுங்க சாமி.

    ராசா என்னடானா நீங்களும் ஆத்துல சீக்கிரம் குதிங்க சொல்லுறார். நீங்க வேறயா....

    ReplyDelete
  23. துபாய் ராசா மணமக்கள் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. துபாய் ராஜாவிற்கு என் சார்பில் மனமார்ந்த தாமதமான மணநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. மண மக்கள் இருவரையும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்....

    ReplyDelete
  26. துபாய் ராஜா!

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  27. துபாய் ராஜாவிற்கும் இராணிக்கும் வாழ்த்துக்கள்!
    தமிழ்மணத்தில் பதிவோர் திருமணம் நிச்சயம் !
    வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாவப்பட்ட வாலிபர் சங்கமாக மாறுவது எப்போது ?

    ReplyDelete
  28. நண்பர் ராஜாவுக்கு திருமண நாள் நல்வாழ்த்துகள்.

    - பரஞ்சோதி

    ReplyDelete
  29. //ஆமாங்கோ.. கன்னா பின்னாத் திருட்டு... எக்கச் சக்கத் திருட்டு..
    நம்ம துபாய் ராசா இதயம் களவுப் போயிருச்சாம் இல்ல..//

    ஆஹா ராசா என் செல்வமே ! சந்தோசமான களவுதானே ராசா! அட்சதைய இங்கன இருந்தே தூவுதேன் ! மனைவி பேச்சைக் கேட்டு பார்த்து பதவிசா நடந்துக ராசா. நல்ல சமைச்சு போட்டு அவுக கண்ணுல இருந்து ஆனந்தக் கண்ணீரை பார்த்து சந்தோசமா இருங்க ! :))

    ReplyDelete
  30. மணமக்களுக்கு!
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் ராஜா

    ReplyDelete
  32. துபாய் ராணி ரேவதிக்கும் துபாய் ராஜாவுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  33. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  34. துபாய் ராஜா, வாழ்த்துக்கள்.. நீங்கள் துபாய்க்கு மட்டுமல்லாமல் அபுதாபி, பக்ரெய்ன் மற்றும் அனைத்து ஒருங்கிணைந்த அரபு நாடுகளுக்கே ராஜாவாக வாழ்த்துக்கள் :-)

    ****

    அப்படியே என்னையும் வ.வா. சங்கத்துல சேத்துக்கீட்டிங்கன்னா சந்தோசமா நானும் கலாய்ப்பேன்..
    சீக்கிரம் இன்விடேசன் அனுப்புங்கோவ்..
    ஏதாவது ரூல்ஸ் இருந்தா சொல்லுங்க..

    ReplyDelete
  35. திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய அன்பர்கள்,கைபேசியில் அழைத்து வாழ்த்திட்ட நண்பர்கள், இணையம் மூலம் மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த
    அன்பார்ந்த'தமிழ்மணம்' வலைபதிவு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!நன்றி!!நன்றி!!!.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)