Tuesday, June 6, 2006

போட்டோ போட்டாச்சு

சங்கத்து மக்களை அறிமுகத்துக்கு முன் சங்கத்து சின்னத்தை அறிமுகப்படுத்திறோம். அதாங்க ஆப்பு.
ஆப்புக்கு மட்டும், தல போடும் சட்டை வண்ணங்களான கிளி பச்சை, பஞ்சு மிட்டாய், ஊதா ஆகியன கலந்து அடிச்சு விட்டு இருக்கோம். இனிமே இதுவே நமது சின்னம், அடுத்த தேர்தலிலும் இதுவே நமது சின்னமாக இருக்கும்.



இவர் தேவு, தேவுடான்னு இருக்கிற கைப்புவ செத்து செத்து விளையாட மலை உச்சிக்கு போலாம்ன்னு கூப்பிட்டவரு. மண்டையோட்டை கம்பெனி முத்திரையாக்கி சங்கத்தை உறுவாக்கி, கைப்புவை கல்கி காண வைத்தவர். என்றும் கூடவே இருந்து சலிக்காம ஆப்பு வைப்பவர். பேச்சு பேச்சா இருக்கிறப்பவே போட்ட கோட்டை தாண்டி சங்கத்து ஆளை அடிச்சது யாருன்னு கட்டதுரைகிட்ட நேருக்கு நேர் கேட்டு ரப்புன்னு செவுளுமேல அடி வாங்கி உய் உய்ன்னு சத்தம் போட்டு திரும்பி வந்த வீரச் செம்மல்.


சங்கத்துல ரொம்ப டீசன்டுன்னு சொன்னா அது ஜொள்ளு பாண்டிதான். "அவருக்கு நிறைய முடி இருக்கு எனக்கு நிறைய கடை இருக்கு"ன்னு சொல்லி பின்லேடன் அட்ரஸ் கேட்டு கைப்புவையே அசர அடிச்சவர். அடிச்சதோட மட்டுமில்லாமல் போட்டிருந்த துணியை எல்லாம் நாசமாக்கிய சூரர்.


திருட்டு விசிடி ஓடுறதா தகவல் சொல்லி சினிமா தியேட்டர் அதிபரான நம்ம தல'ய ரத்தம் துப்ப வெச்சவர். அர்ஜுனனுக்கு தேரோட்டிய கண்ணன் மாதிரி நம்ம தல'யோட மூணு சக்கர வண்டிக்கு டிரைவராக இருப்பவர். எந்த நேரமும் கூடவே இருந்தாலும் தல்'க்கு அடி விழப்போகுதுன்ன முதல்ல ஓடிப்போர அசகாய வீரர் சிபி.


பெல்பாட்டம் முதலாளி என்று தல'ய அன்போடு அழைக்கும் நம்ம பிகுலுதாங்க இவுங்க. அப்படியே பெட்ஷீட்டுல சுருட்டி ரோடு ரோலர் மாதிரி மேல குதிச்சு கைப்புவை சட்னியாக்கி இட்லிக்கு தொட்டு தின்ற குண்டம்மா. அருள்ல சைக்கிள் கத்து குடுத்த குருங்கிற மரியாதை இல்லாமல் தல'ய சாக்கடைய சுத்தம் செய்ய வெச்ச சங்கத்து கொளுகை பரப்பு செயளாளர்.


"வாங்க பாஸ் நாம அடி வாங்குறது சகஜம் தானே, பயந்தா தொழில் பண்ண முடியுமா, இவுங்க எப்பவுமே இப்படிதான் இருப்பாங்கன்னு" தத்துவம் சொன்னவர். ஹோட்டலில் டீ சாப்பிட சொன்னதும் ஒரு கிராமத்தையே கூட்டி வந்து சாபாட்டை கட்டு கட்டுன்னு கட்டி ஜென்மத்துக்கும் சம்பளமே வாங்க முடியாமல் செய்த பாசக்கார விவசாயி.


கடைசியா சொல்லாத ஒண்ணை சொல்லிக்கிறோம், நாங்க இருக்கிற இடத்தை அதாங்க சங்கத்தோட ஹெட் குவாட்டர்ஸ் (Head-Quarter)படத்தையும் வெளியிட்டு இருக்கிறோம்.

37 comments:

  1. சங்கத்தின் மற்ற உறுப்பினரை மறைத்து விட்ட விவசாய அணித் தலைமையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  2. இளா..... என்னத்த சொல்ல.. ரைட்டு ரைட்டு நடத்துங்க..

    ReplyDelete
  3. ராசா-->> எல்லாம் சங்கம் கொடுத்த தைரியம் தாங்க. சங்கத்துல இருக்கிற எல்லாருக்குமே தைரியம் ஜாஸ்திதாங்க, அதான் கைப்பு ஆப்பு ஆப்பா வாங்குறாரு.

    ReplyDelete
  4. பிகிலு அவர்களுக்கு மட்டும் "தனியாக" தெரிகிறா மாதிரி கருப்பு-வெள்ளை படம் போட்டதன் காரணம் என்னவோ?:-)

    அப்ரெசின்டுங்கறதுனாலயா?:-))
    (எப்பா 'தல'யோட ஒரு வார்தய யூஸ் பண்ணியாச்சு)

    இல்ல தல இல்லாத நேரத்துல கலாய்க்க தனியா ஐடெண்டிபிகேசன் குடுக்கற டெக்னிக்கா?:-)

    ReplyDelete
  5. எலே...என்னலே படம் போடுறீங்க...ரியாஸ் கான் கிட்ட சொல்லி வைக்கணும் போல இருக்கு!

    ReplyDelete
  6. அட அட தேவுக்கு அப்படியொரு சிரிப்பு :)) கலக்கீட்டீங்க இளா !!

    அமைதி கீதக்கா என்ன உங்க படம் போடனும் அப்புட்டுதானே ?? கவலைய விடுங்க உங்க அருமை பெருமைகளைப் பத்தி தனிப்பதிவே போட்டுடலாம் என்ன ?? :))

    ReplyDelete
  7. பேரன்பு மிக்க சங்கத் தலைமைக்கு,

    எனக்கு தற்சமயம் ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு அவசர அலுவல் உள்ளதால் சங்கத்துக் கடமை ஆற்ற முடியாத பரிதாபமான நிலையில் உள்ளேன். ஆகவே தயவு கூர்ந்து ஒரு ஆறு வருடங்கள் சங்க விடுப்பு அளிக்குமாறு அன்போடும் மிக்க தாழ்மையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
    சங்கத்தின் நான் இதுவரை மேற்கொண்ட தபால் பணிகளை இனி பாசமிகு பாண்டியிடம் ஒப்படைத்து விடுகிறேன்..

    இது என் விடுப்பு மடல் மட்டுமே.. ராஜினாமா கடிதம் அல்ல.

    இப்படிக்கு ரொம்ப பயந்த சுவாபமுள்ள தலக் கைப்புள்ளயின்
    ரொம்ப ரொம்ப பயந்தத் தொண்டன்

    தேவ்

    ( பிகு.. சிறு வயசுல்ல இருந்து போட்டா எடுத்தா ஆயுசு கொறஞ்சுரும்ன்னு என்னிய எந்தப் போட்டாவும் புடிச்சதில்ல.. நானும் இந்தப் போட்டாவெல்லாம் புடிச்சுகிட்டது இல்ல...)

    ஒரு ஆறு வருஷம் கழிச்சு சங்கத்தின் சிங்கங்களை ம்றுபடியும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்.

    ReplyDelete
  8. மீதி படங்கள் எல்லாம் கிடைக்க மாட்டேங்குதுங்க கீதா, கிடைச்ச போட்டுருவோம். அதனால்தான் கைப்பு படமே போடலைங்க

    ReplyDelete
  9. ஆஹா!உள்நாட்டு உறுப்பினர்கள்லாம் பாக்கவே ரொம்ப டேஞ்சரான பார்ட்டிகளாத் தெரியுது.ஊருக்கு போகும்போது கொஞ்சம் உஷாராத்தான்
    இருக்கனுப்பு!!!!.

    ReplyDelete
  10. தேவுச்செல்லம்!!!என்னாச்சும்மா???.
    எதுனாலும் பேசித்தீர்த்துக்கலாம்!!!.

    ReplyDelete
  11. // Dev said...

    ....ரொம்ப ரொம்ப பயந்தத் தொண்டன்

    Raja said...
    எதுனாலும் பேசித் "தீர்த்துக்கலாம்"!!!. //

    இப்ப புரியுதா ராசா. தேவுக்கு என்ன ஆச்சுனு.:-))

    ReplyDelete
  12. கலக்குறீங்கப்பா.

    தல கைப்புவின் பெருமையை குவைத்திலும் பரப்ப முடிவு செய்துட்டேன்.

    தலையின் வாகனமாக ஓட்டகம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன்.

    - பரஞ்சோதி

    ReplyDelete
  13. //எந்த நேரமும் கூடவே இருந்தாலும் தல்'க்கு அடி விழப்போகுதுன்ன முதல்ல ஓடிப்போர அசகாய வீரர் சிபி.
    //

    இன்னொன்னு சொல்லாம விட்டுட்டீங்களே! தலை பேட்டி குடுக்கறப்ப எல்லாம் தன்னோட மச்சானை நிருபர்களோட கூட்டத்துல உக்கார வெச்சிட்டு அப்பப்போ தான் கேக்க நினைக்குற கோக்கு மாக்கான கேள்விகளையெல்லாம் கேக்க வெக்கிறவர்.

    தலை தீக்குளிக்கறேன்னு சொன்னா முதல் ஆளா கையில தீப்பெட்டி, மண்ணெண்ணெய் சகிதம் ஆஜர் ஆகும் கடமை வீரர்.

    ReplyDelete
  14. நாம ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை டெல்லிக்கு அருகில் கொண்டு போய் வைப்போம் என்று தலைவர் கூட்டத்தில் சொன்னதை மறக்க வேண்டாம், சீக்கிரம் ஆச்சியை இல்ல இல்ல ஆட்சியை பிடிக்கணும்.

    ReplyDelete
  15. இளா,

    செருப்பு ரெண்டையும் ஒரு கயிறுல கட்டி கழுத்து மேல போட்டுகிட்டு திரிவாரே அவரைப் பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே!

    ReplyDelete
  16. //எந்த நேரமும் கூடவே இருந்தாலும் தல்'க்கு அடி விழப்போகுதுன்ன முதல்ல ஓடிப்போர அசகாய வீரர் சிபி.
    //

    ஓடுறது எதுக்காக! ஊருக்குள்ள போயி ஆளுங்களை இட்டார!

    (ஆனா நான் போற நேரம்தான் ஊருக்குள்ள ஒரு ஆள் கூட இருக்கறதில்லை)

    ReplyDelete
  17. //அன்புடன் உன் எதிரி,

    கட்டத்துரை,
    //

    இந்த கட்ட(த்)துரை என்னை விட ரொம்ப கடுமையான ஆளு போல இருக்கு! பேரை உச்சரிக்கும்போதே ரொம்ப கடுமை தெரியுது.

    நம்ம பேருல அவ்வளவு கடுமை இல்லை.

    ReplyDelete
  18. புதுசா இன்னொரு கட்ட(த்)துரை வந்திருக்கறதால என்னோட பேரை கட்ட துரை(பெசுசு) ன்னு மாத்திகிட்டேன்.

    பின்னாடி வேண்டாத குழப்பம் வரும்ல!

    ReplyDelete
  19. சங்கத்தைப் பத்தி இன்னும் தெரிஞ்சிக்க விரும்புறவங்க இங்க போயி பாருங்க!

    ReplyDelete
  20. உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு!

    ReplyDelete
  21. இளா அண்ணா! காலைலே உங்களோட முந்தைய பதிவை பாத்திட்டு ரொம்ப ஆசையா இருந்தேன். கலக்கிடிங்க.

    - ஸ்ரீதர்

    ReplyDelete
  22. தேவ், என்னாச்சு?

    கண்ணகி சிலை பத்தி எல்லாம் எழுதாதேன்னு அன்னிக்கே சொன்னேன்.. இப்போ பாரு.. //ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு அவசர அலுவல் உள்ளதால் // சொல்றா மாதிரி வந்துடுச்சு..

    கட்சிக்கு ஆஸ்தான ஜோசியர் மாதிரி வக்கீலும் இருக்காங்கப்பா.. உனக்கு வேணும்னா முன் ஜாமீனுக்கு எல்லாம் ஏற்பாடு செஞ்சுறலாம்..:))))

    ReplyDelete
  23. கட்டத்துரை, கட்ட துரை (பெருசு)..

    பார்த்திபன், நீங்க எதுவும் அடைப்புக் குறில போடலையா?

    ReplyDelete
  24. என்னவோ சொல்வாங்களே.. ஆளுக்கு ஒரு திசையில இழுக்கறதா. அந்தமாதிரி போயிட்டுருக்கே..

    ஆனாலும் நம்ம பொன்ஸ் இமேஜை இப்படி நாசம் பண்ணிட்டீங்களே நியாயமா? இனிமே அவங்களை பத்தி எப்போ நினைச்சாலும் இந்த குண்டுமுகம் தோன்றி எனக்கு உதரலெடுக்கப்போகுது.

    ReplyDelete
  25. அப்டியே கட்டதுரை பெருசு, சிறுசு, பார்த்திபன், சரளாக்கா எல்லார் படத்தையும் எடுத்து விடறது....

    ReplyDelete
  26. அட அட அட.. யாருய்யா அது அந்த சின்னத்துக்கு ஐடியா குடுத்தது? சூப்ப்பர்... எல்லொரும் ஜோரா ஒரு ஆப்பு வைங்க..

    //சங்கத்தின் மற்ற உறுப்பினரை மறைத்து விட்ட விவசாய அணித் தலைமையை வன்மையாகக் கண்டிக்கிறேன். //

    சிறுபிள்ளத்தனமா இல்ல இருக்கு...:-) (சிரிப்பான் பொட்டச்சு..சன்டைக்கு வரப்பிடாது..சொல்லிட்டேன்..)

    ஆமா, ஏன் என்னொட போட்டோவ போடல? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
  27. //அப்டியே கட்டதுரை பெருசு, சிறுசு, பார்த்திபன், சரளாக்கா எல்லார் படத்தையும் எடுத்து விடறது....
    //

    இவங்கள்ளாம் சங்கத்துல அடிப்படை உறுப்பினர் இல்லையே!

    ReplyDelete
  28. //இனிமே அவங்களை பத்தி எப்போ நினைச்சாலும் இந்த குண்டுமுகம் தோன்றி எனக்கு உதரலெடுக்கப்போகுது//

    பின்னே! சங்கத்து ஆளுங்ககிட்ட மத்தவங்களுக்கு கொஞ்சமாச்சும் பயம் வாணாமா? அதான்!

    ReplyDelete
  29. இது என்ன படம் போட்டதும் இந்த தேவ் காணாமல் போகிறாரு? வேறே ஏதாவது உள்ளே இருந்துக்கிட்டே வேலை காட்டப் போறாரு. இல்லாட்டிக் கண்ணகியைப் பார்த்து பயந்துட்டாரோ?

    ReplyDelete
  30. கட்சி, சின்னம், உறுப்பினர் எல்லாம் சரி. பொருளாளரா வேணா நான் இருக்கட்டுமா?

    ReplyDelete
  31. எல்லாத்தையும் ஏப்ரல் பூல் பண்ணின உங்களை பேன்டேஜ் பாண்டியன் ரேஞ்சுக்கு அடிச்சாலும் தப்பில்லை

    ReplyDelete
  32. போன பின்னூட்டத்தில் ஸ்மைலி விட்டு போச்சு கண்ணுகளா:-))))

    ReplyDelete
  33. //எல்லாத்தையும் ஏப்ரல் பூல் பண்ணின உங்களை பேன்டேஜ் பாண்டியன் ரேஞ்சுக்கு அடிச்சாலும் தப்பில்லை//

    எங்க சங்கத்து ஆளை அடிக்கறேன்னு சொல்லுறது யாருப்பா?

    ReplyDelete
  34. என்ன சங்கம் தூங்குது, ஒண்ணும் காணோம்? எல்லாருமா தூங்கறாங்க?எழுந்து பதிவு போடுங்க பசங்களா? இப்படித் தூங்கறீங்களே?

    ReplyDelete
  35. என்ன அப்பு!
    ஒரு பத்து நாள் லீவுல போயீட்டு வர காட்டியும் என்னமோ நடந்து இருக்கு. சுயபரிசோதனை எல்லாம் பண்ணி பார்த்து இருக்கீன்றீர்கள். நம்ம சங்கத்து தலைமை கழக கண்மணிகளின் படங்களை எல்லாம் இப்படி ப்ளிக்கா வெளியீட்டு இருக்கின்றீர்கள். தமிழ்நாட்டில் வர வர ஆட்டோ பயம் யாருக்குமே இல்லாம போச்சு.
    அட ஜொள்ளு இதுக் தான் நான் லீவுக்கு போறதுக்கு முன்னால என் போட்டவ கேட்டியா. நான் கூட நம்மள பிரிஞ்சு இருக்க முடியாம பாசத்துல கேட்குறனு நினைத்தேன். இப்படி என்னையும் சேர்த்து கவுகலாம் என்று தான் கேட்டியா. நல்லவேளை அன்னிக்கு உன் கிட்ட என் போட்டோ குடுக்காம இருந்தது எவ்வளவு நல்லதா போச்சு.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)