Thursday, April 30, 2009

போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

நியாயமா என்னைய பில்கேட்ஸ் அவர் கம்பெனில வேலைக்கு சேர்த்திருக்கனும். .....

"முத்து" படத்தில ரஜினி ஒரு சேர்ல உட்கார்ந்த உடனயே அவருக்கு வீரம் வந்து எல்லாரையும் கலாய்ச்சு ரவுசு விடுவாரு. அந்த மாதிரி ஒரு சேர் தான் இந்த வ.வா சங்கத்து "அட்லாஸ் வாலிபர்" பதவி. எல்லாரையும் கலாய்கிறதுக்கு ஒரு தைரியம் வரும். அதே மாதிரி யாரை கலாய்ச்சாலும் அவுங்க ஜாலியாவே எடுத்துப்பாங்க.

எனக்காக இந்த பதவிய ஒரு மாசம் கையில அளேக்கா கொடுத்திருந்தாங்க. ஆனா என்னால முழுமையா நினைச்சது எல்லாத்தையும் செய்ய முடியல...

அதே சமயத்தில போட்ட சில பதிவும் எல்லாருக்கும் பிடிச்சிருந்ததான்னும் தெரியல...

இதுல போடுற பதிவு பெஸ்ட்டா இருக்கனும்ன்னு பாதி எழுதி எனக்கு நிறைவு தராம நிறைய டிராப்ட்லயே இருக்கு...

வேலை வேலைன்னு வலையுலகம் பக்கமே வராம, யாருக்கும் சரியா பின்னூட்டமும் போட முடியாம இருந்த என்னை நியாயமா பில்கேட்ஸ் கம்பெனில வேலைக்கு கூப்பிடலாம்.

நல்லவேளை இந்த மாதிரி வேலை நேரத்தில தமிழ்மணம் நட்சித்திரம் பதவி தரல..தந்திருந்தா அங்கேயும் பதிவு போட முடியாம போயிருக்கும். எல்லாம் நல்லதுக்கே.

ஓகே இனி சென்டிமெண்ட்......எனக்கு இந்த ஒரு அரிய சந்தர்ப்பத்தை கொடுத்து, தூரமாவே இருந்து வாழ்த்திய வ.வா.சங்கத்தின் தலைவர் கைப்புள்ளைக்கும், நீ என்னவேணாலும் செஞ்சு கலக்கு இராசான்னு ஒதுங்கியே இருந்த தளபதி நாமக்கல் சிபிக்கும் , சங்கத்து சிங்கத்துக்கும், என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திய என் இனிய இரசிக இரசிகை பெருமக்களுக்கும் நன்றிகள் பல.

இனி "குப்பைத்தொட்டி"யில பார்க்கலாம்...ஓகே....


போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Tuesday, April 21, 2009

"ஆஸ்கார்"க்கு போகும் விஜயகாந்தின் அடுத்த படம்.....

சட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர்.

அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன் உள்ளே போனான்.

கேப்டன் "வாங்க உட்காருங்க" அந்த இளைஞரும் உட்காருகிறார்.

"நீங்க என்ன மாதிரி கதை சொல்ல போறீங்க?"

"சார் இது ஒரு கிராமத்து காதல் , மற்றும் உணர்வுபூர்வமான கதை சார்"

"ம்ம் சொல்லுங்க"

"சின்ன வயசியிருந்து நீங்க கோவில் தான் வளருறீங்க. கோவில் வேலைகளை எல்லாம் பறந்து பறந்து செய்றீங்க. கோவில விட்டா உங்களுக்கு வேற உலகமே இல்ல.உங்க பேரு "கோவில் கிளி"

"என்னது கிளியா" கோபம் கலந்த ஆச்சர்யத்துடன் கேப்டன்

"ஆமா சார். அப்படி பட்ட உங்க வாழ்க்கையில ஒரு பொண்ணு உள்ள வர்ரா அவ பேரு "வெட்டு கிளி"

"ம்ம்ம்ம் அப்புறம்..." பேப்பர் வெயிட்டை கையில் எடுக்குறார் கேப்டன்.

"ஒரு கட்டத்தில வில்லன் வெட்டுகிளியை கெடுக்க வரும் போது வெட்டுகிளி அருவாமனையால ஒரே வெட்டா வெட்டிடுறா. அப்ப நீங்க வர்ரீங்க. உங்ககிட்ட வில்லன் பொணத்த பார்த்துக்க சொல்லிட்டு போலீஸ்கிட்ட போறேன்னு போறா வெட்டுகிளி. ஆனா போனவ போனவ தான். திரும்பி வரவே இல்ல. இரண்டு நாள் கழிச்சு பொணத்தோட நாத்தம் தாங்க முடியாம போலிஸ் வந்து உங்கபிடிச்சுபோயிடுது. சார் இந்த படத்தோட தலைப்பை கேளுங்களேன்"

கேப்டன் ஒன்றும் சொல்லாமல் நெற்றியில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

"சார் நீங்களாவது கேளுங்களேன்" கேப்டன் மச்சானிடம்....
"சார் நீங்க?" ஆபிஸ் பாயிடம்....

கேப்டன் பொறுமையிழந்து "டேய் சொல்லித்தொலடா..."

"எழவு காத்த கிளி" என்று முடிக்கும் போது...

கேப்டன் அவன் மூக்கில் ஒரு குத்து விட, அவன் இரத்தத்துடன் "சார் இந்த கதை பிடிக்கலன்னா "யானை பசிக்கு சோள பொறி"ன்னு இன்னொரு கதை இருக்கு அதுவேணா கேட்குறீங்களா?" என்ற போது..

வாயில் ஒரு குத்து...வாயில் இரத்தத்துடன் "சார் விடுங்க சார் நீங்க இல்லைன்னா வேற யாருமில்லையா என்ன? நான் சரத் சார்கிட்ட போறேன் "ஓட்டுல சோத்த போட்டா ஆயிரம் காக்கா" என்று முடிக்கும் முன் பேப்பர் வெயிட்டை கேப்டன் தூக்கி அடிக்க....அவனும் வெளியே ஓடி போகிறான்.

நெக்ஸ்ட்ட்ட்ட்ட்ட் என்று குரல் கொடுக்க அடுத்தது ஒருத்தர் வரார்.

"நீங்க??" கேப்டன்

"சார் நான் பேரரசு சாரோட அஸிஸ்டெண்ட் சார்"

"அட பரவாயில்லையே சொல்லுங்க என்ன கதை கொண்டு வந்திருக்கீங்க?"

"சார் சொல்றத அப்படியே இமேஜின் பண்ணி பார்த்துங்க சார்......

"பாருங்க சார் முதல்ல சார் சின்ன கவுண்டர் மாதிரி ஒரு ஓபனிங் சார்.... "கண்ணு பட போகுதய்யா"ன்னு எல்லாரும் பாடி ஆரத்தி எடுக்குறாங்க சார்..


ஆரத்தி


அங்கிருந்து அப்படியே கட் பண்ணா சார் நீங்க விமானத்தில போறீங்க சார்

விமானம்
அங்க சார் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு பைட்டு சார். ஆனா வில்லன் Hacksaw ப்ளேடால வில்லன் ப்ளைன்ன அறுத்துடுறான் சார்.. ஆனா சார் நீங்க சார் பைலட் இல்லாம சார் விமானத்தையே ஓட்டுறீங்க சார்.


விமானம்1

நீங்க சார் செத்துட்டதா நினைக்கிறாங்க சார் வில்லன் க்ரூப். ஆனா சார் நீங்க பாராசூட்ல ஆக்ரோஷமா தப்பிச்சு வர்ரீங்க சார்..


பாராசூட்

நீங்க வர்ர ஆக்ரோஷத்தப் பார்த்துட்டு வில்லன் க்ரூப் மட்டும் இல்ல சார் தியேட்டரே பயப்படுது சார். ஆனா சார் விதி வலியது சார். அந்த பாராசூட் நேரா நடு கடல்ல சார் விழுந்திடுது சார்.

அதுல பாருங்க சார் உங்களுக்கு ஒரு லக் சார்... பக்கத்தில டைட்டானிக் கப்பல் சார். நடுகடல்ல நாயர்கடையில சார் பேசஞ்சருக்கு "டீ" வாங்கி கொடுக்க நிக்குது சார்.
அதுல ஏறி சார் நீங்க தப்பிச்சிறீங்க சார். அங்க சார் உங்க ஹிரோயின் இருக்காங்க சார். அவுங்களோட அப்படியே ரோமான்ஸ் சார்...


அப்படியே கப்பல பொள்ளாச்சிக்கு விடுறோம் சார். ரோஸோட "தந்தன தந்தன தை மாசம்..."ன்னு ஒரு டூயட் சார். ரொம்ப டீசெண்டான பாட்டு சார்.

ஆனா பாருங்க சார் கப்பல் ஒரு பெரிய பனிகட்டியில இடிக்குது சார். எல்லோரும் தண்ணியில விழுந்திறாங்க சார். நீங்க சார் எல்லாரையும் காப்பாத்திறீங்க சார். ஆனா பாருங்க சார். ஒரு பெரிய பார்க்கவே பயமுறுத்துற இராட்சத திமிங்கலம் உங்க கிட்ட வருது சார்.

சத்தியமா இது திமிங்கலம் தான்

பக்கத்தில சுவரு வேற இல்ல சார். ஆனா நீங்க விடல சார். தண்ணில போட்றீங்க சார் ஒரு பெரிய பைட்டு.........விடுறீங்க சார் சைடுல ஒரு குத்து. அதுக்கு அப்படியே பொறி கலங்கி போகுது சார்.... அது கண்ணுக்கு அப்படியே மூணு மூணா தெரியிறீங்க சார்...அதுவும் போலீஸ் ட்ரெஸ்ல சார்.

அவ்வ்வ்

அப்படியே அத மன்னிச்சு விடுறீங்க சார். கரைக்கு போய் எல்லாரும் ட்ரெயினை புடிக்கிறீங்க சார்.

டிரெயின்1

அங்க ஃபுட்போட்ல வர்ர பசங்ககிட்ட சார் "இந்த மாதிரி தொங்கிட்டு வந்தா டிரைவருக்கு சைடி மிரர் மறைக்கும்"ன்னு அட்வைஸ் பண்றீங்க சார். உடனே அவுங்க திருந்தி உங்களுக்கு உதவியா வராங்க சார்.

ஒரு வயசான அம்மா இரயில்ல சார் கஷ்டப்பட்டு சுண்டல் வித்துட்டு வராங்க சார்.
அத பார்த்துட்டு உங்களுக்கு அப்படியே மனசு இளகி சார் ஐஞ்சு ரூபாய்க்கு சுண்டல் வாங்கி ஒண்டியா திங்கிறீங்க சார்.

அந்த வயசான அம்மா சார் உங்கள கட்டி பிடிச்சு சார் "எம்.ஜி.ஆருக்கு அப்புறம் நீ தான்ய்யா"ன்றாங்க சார், அங்க வைக்குறோம் சார் ஒரு பாட்டு.
இரெயிலே ஆடுது சார் உங்க பாட்டுக்கு.

ஆனா சார் பாட்டு முடிஞ்சுதுக்கப்பறம் தான் சார் தெரியுது வில்லன் க்ரூப் ஒரு சைடு தண்ட வாளத்தை உடைச்சுடாங்கன்னு.


இரயில் மேல ஏறி தாவுறீங்க சார் ஒரு தாவு...போறீங்க சார் அப்படியே டிரைவர் சீட்டுக்கு.... போய் தூக்குறீங்க சார் உங்க ஒரு கால.. நிக்கிறீங்க சார் ஒரு சைடு முட்டு கொடுத்து.
...உங்க வெயிட்டுக்கு சார் இரயிலே ஒரு சைடு சாயுது சார்.

டிரெயின்2

துண்டான ஒரு சைடு தண்டவாளத்தை இரயில் தாண்டுன உடனே வைக்கிறீங்க சார் இன்னொரு கால கீழ....


டிரெயின் 4

டிரெயின் முன்ன மாதிரி நேரா ஓடிடுது சார். அங்க வைக்குறோம் சார்ர்ர்ர்......

"போதும் தம்பி போதும்...நீங்க இது வரைக்கும் சொன்ன கதையிலேயே எனக்கு பிடிச்சு போச்சு இனிமே நேரா சூட்டிங் சார்...." கேப்டன் அந்தர்பல்டி அடிக்கிறார்.

"இல்ல சார் இப்ப இண்டர்வெல் வரைக்கும் தான் சார் வந்திருக்கோம் இன்னும் பாதி கதை இருக்கு சார்" என்றவுடன்

கேப்டன் "என்னது இன்னும் பாதி கதை இருக்காஆஆஆஆஅ" என்றபடி கேப்டன் மூர்ச்சையாகிறார்.....



டிஸ்கி1: இது காமெடிக்காக போட்ட பதிவென்பதால் அனிமேஷனில்(?) குத்தம் குறை இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்

டிஸ்கி2: பதிவுக்கான கரு ஜெயா டிவின் "உங்க ஏரியா உள்ள வாங்க"

Saturday, April 18, 2009

Wishes: ஹே ராம்! ராயல் ராம்!

* சங்கத்தின் சிங்கம்,
* மல்லியின் கில்லி,
* தென் மண்டல அமைப்பாளர் (என்னத்த அமைச்சார்?-ன்னு எல்லாம் கேக்கப்பிடாது! அமைக்க வேண்டியதை அமைச்சாருப்பா),
* ஆட்டப்பயல் (அதாங்க ப்ளே பாய்)....

நம்ம ராயல் ராமுக்கு பொறந்த நாளுங்கோ! (Apr-19)

மதுரையில இன்னிக்கி வீட்டுக்கு வீடு பிரியாணி போடறாங்கோ! நெப்போலியன் ஊத்தறாங்கோ! கூச்சப்படாம ஊத்தி வாங்கி...ச்சே கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க மக்கா! :)

என்ன தான் வருசா வருசம், இவரோட ஆர்குட்டை வைச்சி டேமேஜ் பண்ணாலும், அந்த ரொமான்டிக் ஃப்ரொபைலை மட்டும் எக்காரணம் கொண்டும் மாத்த மாட்டேங்குறாரு! - எலே நீ தான்-டா சிங்கம்! :)

அதான் இந்த தபா, நாங்களே ராயலோட ஆர்க்குட் ஃப்ரொபைலை டோட்டலா மாத்த ஒரு முடீவு கட்டிட்டோம்!
என்சாய்! ஹாப்பி பர்த்தேடே ராமேய்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)



relationship status: committed...but single :)
அதாச்சும் அவங்க எனக்கு கமிட் ஆயிட்டாங்க! ஆனா நான் தான் இன்னும் கற்பைக் காப்பாத்திக்கிட்டு இருக்கேன்! :)

birthday: April 19

age: 30-1

languages i speak: English (US), Tamil, Kannada....Recently Malay
மொழிப் பிரச்னையே கிடையாதுங்க! பாக்கவே நேரம் போதுலை! இதுல எதுல பேசினா என்ன? :)
ஆனா இங்கிலீபீஷ் மட்டும், நாம US-Englipeesh தான் பேசுவோம்! ஏன்னா அதுல தான் Grammar-யே கிடையாது! என்ன வேணும்ன்னாலும் பேசலாம்! :)

here for: girl friends, woman friends, auntie friends
இதுக்கு வெளக்கம் சொல்ல, தனியா பொஸ்தகம் தான் போடோணும்!

children: all children are my children
வேற ஒன்னும் இல்ல! ப"ற"ந்த மனசு! :)

ethnicity: asian
பின்ன, உன்னைப் பாத்து ஆப்ரிக்கன்-ன்னா சொல்லுவாங்க? அது என்னடா ஏசியன்? இந்தியன்-தமிழன்-ன்னு சொன்னா கொறைஞ்சி போயிருவியா?

religion: Agnostic
இது புது வரவு! Agnostic-னா என்னான்னு எனக்கு "கடவுள்" சத்தியமா தெரியாதுங்க! :)
சும்மா போட்டுக்கிட்டேன்! ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு எதுவும் இல்லியே? :)

தமிழ்-ல எழுதிப் பார்த்தேன் அக்கா-நாஸ்திக்-ன்னு வருது! எவன்டா அக்காவைப் பத்தி பேசுறது-ன்னு அரிவாளைத் தூக்கிட்டு கெளம்பிருவானுங்க! அதான்...அது இங்கிலீஷ்லயே இருக்கட்டும்!

humor: campy/cheesy, friendly
சத்தியமா இதுவும் என்னான்னு தெரியாதுங்கோ!
Campy = நான் ஃபிரெண்டு ரூம்லயே தான் எப்பவும் டேரா போடுவேன்! அது தான் Campஆ இருக்குமோ?
Cheesy = வெண்ணய் - அப்படிங்கறது எம்புட்டு டீசென்ட்டா இங்கிலீஷ்ல சொல்லுறாங்கப்பு?

fashion: alternative (மாற்று)
அதாச்சும் மாற்றுடையே இல்லாம, தினப்படி போட்ட ட்ரெஸ்ஸே தான் போடுவேன்! அது உள்ளாடையோ, வெளியாடையோ, மனுசனுக்கு ஆடை ரொம்ப முக்கியம்-ங்க! அதை மாத்தவே கூடாது! :)

smoking: no (from yesterday)
drinking: no (from tomorrow)
மொதல்ல இந்தா மாதிரி கேக்குறதைத் தூக்கணும்! சாதிப் பேரைக் கேட்டா எம்புட்டு தப்போ, அது போல இப்படிக் கேக்குறதும்! :)

pets: i love my pet(s)
ஆத்தி...எனக்குத் தெரிஞ்ச பெட்டு, எங்க வூட்டு பல்லி தாங்க!

living: together - with room-mate
ஆனா வாடகை மட்டும் அந்த "ஆன்ட்டியே" கொடுத்துப்பாய்ங்க!

hometown: madurai
என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?

webpage: http://raamcm.blogspot.com
விருது வாங்கிய வலைப்பூ!

sports: ரம்மி, மூணு சீட்டு, மங்காத்தா
இதுக்கெல்லாம் யாரும் 20-20 நடத்த மாட்டாங்களா?

books: இன்னும் படிக்கணும்.
நான் படிக்கறா மாதிரி இன்னும் எவனுமே எழுதலை! என்னைத் தவிர! :)

music: A.R.Rahman
அவரு ஆஸ்கர் விருது வாங்கன பொறவு, இதைச் சேர்த்துக்கிட்டேன்! அவரு வாங்கினா என்ன, நான் வாங்கினா என்ன?

cuisines: "Amma" senchu kodukkira ethuvum..
அம்மா எலெக்சென்யும், கலெக்சென்லயும் பிசியோ பிசி! செஞ்சி எல்லாம் கொடுக்க மாட்டாங்க! வேணும்னா சின்னம்மாவைப் போயிக் கேளு! :)

email: raam.tamil@gmail.com, raam.kannada@gmail.com, raam.malay@gmail.com
ஹிஹி! பிகருக்கு ஏத்த மாதிரி இ-மெயிலு!

ஹே ராம்! ஹேய்...ராம்!!!

Wednesday, April 15, 2009

ஏய்ய்ய்!...மருவாதை...மருவாதை

எல்லாரும் மருவாதை கொடுத்து படிச்சுட்டு மருவாதையா கமெண்ட் போடனும் சொல்லிபுட்டேன்



அதோட கன்டினியூட்டி இது....





இதோட கன்டினியூட்டி கீழ....



இது பாலிடிக்ஸ்....





Thursday, April 9, 2009

வீர விளையாட்டு!

டிஸ்கி1: இந்த பதிவு யார் மனசையும் புண்படுத்த இல்லை என்பதை தெளிவாக சங்கம் எடுத்துரைக்கின்றது.

டிஸ்கி2: இந்த பதிவை படித்துவிட்டு வசைபாடி பின்னூட்டம் போடக்கூடாது என்று சங்கம் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றது.

டிஸ்கி3: இந்த பதிவை படித்துவிட்டு கோவப்பட்டு கல் எறிவதும், அடிப்பதும் ஏன் எட்டு உதைப்பதும் அவரவர்களின் கணினியின் மேல் இருக்குற அக்கறையை பொறுத்துள்ளது. அது உங்கள் விருப்பம்.

டிஸ்கி4: இந்த பதிவு யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை என்பதையும், இது முழுக்க முழுக்க கற்பனையே என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

டிஸ்கி5: இந்த பதிவை படித்து தற்கொலை மற்றும் கொலை முயற்சியில ஈடுபடுவோருக்கு சங்கம் தன் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்ளும்.

டிஸ்கி6: ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இளகிய மனம் கொண்டவர்களும், இதய பலகீனமானவர்களும் இத்தோடு படிப்பதை நிறுத்திக்கொள்வது நல்லது என சங்கம் எச்சரிக்கின்றது.

டிஸ்கி7: பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவேண்டும் என்பதல்ல. 17 1/2 வயதுள்ளவர்களும் படிக்கலாம். டிஸ்கி6ல் குறிப்பிட்டவர்கள் மட்டும் வேண்டாம்

டிஸ்கி8: அவசர வேலையாக இருப்பவர்கள், அலுவலகத்தில் இருப்பவர்களும் இப்பதிவை இப்போது படிப்பது உகந்தல்ல. வீணாக மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அதற்கும் சங்கம் பொறுப்பல்ல.

டிஸ்கி9: இப்பதிவை படித்த முடித்த பிறகு ஆர்வகோளாறில் திரும்ப திரும்ப படிப்பது நல்லது தான். ஆனால் மிக உற்று கணினியில் படிப்பது கண்ணுக்கு நல்லதல்ல என்பதையும் சங்கம் அன்புடன் எடுத்துரைக்கிறது.

டிஸ்கி10: இரட்டை படையில் முடிவதற்காக இந்த டிஸ்கி சேர்க்கபட்டுள்ளது. ஆகையால் இந்த டிஸ்கியை பொருட்படுத்தாமல் பதிவை படிக்கலாம்.









இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது.......

Monday, April 6, 2009

ஹலோ!வரேன்னீங்க.. என்ன ஆளையே காணோம்?

"எத்தனை தடவை உன்னை திட்டுறேன். உனக்கு வெக்கமா இல்ல . இந்த தப்பு இன்னொரு தடவை செஞ்ச அப்புறம் அசிங்கமாயிடும்" டிசைனர் கோபமாக கத்தினார்.

இது புதுசல்ல.... ஒரு ஏழு மாத காலமாய் இதே போல பல திட்டுகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன். இப்போது செய்திருப்பது கொஞ்சம் பெரிய தவறு. (கொஞ்சமா? இல்ல பெருசா?) ஏன் ஏழு மாசம் கேட்கிறவங்க போய் என்னோட ப்ரொபலை போய் பாருங்க. (யார்டா அவன்... திட்டின இந்த டிசைனர் வேலைக்கு வந்து ஏழு மாசம் ஆகுதுன்னு கரெக்ட்டா சொல்றவன்)

போய் பார்த்தீங்களா (எப்படியெல்லாம் விளப்பரம் செய்ய வேண்டியிருக்கு). ஆமாம் ப்ளாக்கர் ஆரம்பித்து ஏழு மாதம் ஆகிறது. இப்போதெல்லாம் எப்பொழுதாவது தான் வேலை செய்ய தோணுகிறது. அப்படி செய்யும் போதும் இது போல திட்டு வாங்க வேண்டியிருக்கிறது.

வெக்கமாக இல்லை என்று கேட்கிறான் அவன். அதற்காக நகத்தை கடித்து கொண்டு கால் விரலில் கோலம் போடவா முடியும்?. அசிங்கபடுத்திவிடுவானாம்..அவனிடம் "இந்த ஆதவன் சின்ன வயசிலயிருந்து பல இடத்தில அசிங்கப்பட்டு தான் சார் இங்க வந்திருக்கிறான். இதுக்கெல்லாம் இந்த ஆதவன் அசர மாட்டான் சார்" என்று சொல்ல வந்த வாய், அட்லீஸ் அடுத்த அப்ரைஸலிலாவது கிடைக்கும் என்று நம்புகிற இன்கிரிமெண்டுக்கு இவன் கையெழுத்தும் முக்கிய காரணமென்பதால் அடங்கிப்போயிற்று.

அவனை மன்னிக்கலாம்...அவனுக்கெப்படி தெரியும் நான்காவது வயதில் பக்கத்து வீட்டு நிஷாசேச்சியுடன் விளையாடும் போது, நான் முத்தம் கொடுக்க முயற்சிக்கும் போது தன் விரலால் ஓங்கி உதட்டில் சுண்டி, நான் அழுவதை பார்த்து அவள் சிரித்த போது தொடங்கியது இந்த அசிங்கப்படுதல்.....(ஆறாத வடு வாத்தியாரே :(((

காலம் கடந்து காதல் வயப்பட்டு கவிதை எழுத முயற்சி செய்யும் போது என் நண்பனை காதலிப்பதாக சொல்லி என்னை தூது போகச் சொன்ன காதலியிடம் சிரித்து பின்பு அவள் அறியாது வாயைப் பொத்தி அழுத போது (கக்கூஸ்ல இல்ல மக்கா) அசிங்கப்படுதல் தொடர்ந்தது...(போன லீவுல கைக்குழந்தையோடு பார்த்தேன் :))

நான் விடும் எல்லா உதார்களையும் நம்பும் என் கல்லூரி தோழிகளுடன் தேவி காம்பெளக்ஸில் படம் பார்க்க போன போது, இந்த தியேட்டருக்கு நான் வாரா வாரம் வருவேன் என்று சொன்ன என்னை நம்பி, நான்கு அரங்குகள் உள்ள அந்த தியேட்டருக்குள் நாங்கள் செல்லும் அரங்கத்திற்கு செல்ல என்னிடம் வழி கேட்க, நான் அவர்கள் அறியாது ஊழியரை ஒருவரை வழி கேட்ட போது மறைந்திருந்து பார்த்த தோழிகள் ஒரு மாதம் மறக்காமல் கலாய்த்ததும்......பாவம் இவருக்கு தெரியாது மாசக்கணக்கில் அசிங்கப்பட்டது.

சும்மா போன CT பொண்ணை Mechக்கே உண்டான கெத்தோடு(யாருப்பா அது கைதட்டுறது...ஓ நீங்களும் மெக்கா) கலாய்த்தபோது, "ம்ம்ம் செருப்பு" என்று அவள் சொன்ன ஒத்த வார்த்தை கேட்டபோதும் இதெல்லாம் ஜகஜம் என்றபடி போன என்னை பாலாஜி வழி மறித்தான்.

என்றோ "டீ"யும் சமோசாவும் வாங்கி குடுக்காததை மனதில் வைத்து, அங்கிருந்த மெக் மாணவர்களிடம் "சூர்யாவை ஒரு CTபொண்ணு செருப்புன்னு சொல்லுச்சுடா" என்று பாலாஜி கூற ஸாரி கூவ, "செருப்பு" "செருப்பால அடிப்பேன்"னாகி பின்பு "செருப்பெடுத்து காண்பிச்சாடா"வாகி பின்பு "செருப்பால அடிச்சுட்டாடா"என்று மருவி...நான் கதற கதற இல்லையென்ற போதும் பாழாய் போன மெக்கானிகல் கெத்து 60 மாணவர்களுடன் CT லேபிற்கு முன் அழைத்து சென்றது. CT நண்பர்கள் சமாதானம் கூற கலைந்து சென்றனர்.

அதன் பின் அந்த CT பெண் என்னை கடந்து போகும் போதெல்லாம் ஒரு நக்கல் சிரிப்பு சிரித்த போது ....ஓ ஆண்டவனே........ அப்படி "செத்து செத்து பிழைத்தது"ம் அசிங்கபடுதல் தான் என்று அவருக்கு தெரியாது........

என் கம்பெனியின் நேபாளி செக்கியூரட்டி, பேங்கிற்கு ஒரு லெட்டர் எழுதி கொடுக்கமாறு கேட்ட போது உள்ளுக்குள் ஒரு வித கர்வத்துடன் நான் வழக்கமாக எழுதும் "As i am ...." என்று எழுதிகொடுத்த அடுத்த இரண்டு நிமிடங்களில் அதிலுள்ள மூன்று தவறுகளை அவன் சரி செய்து திரும்பவும் எழுதி கொடுக்க சொன்ன போது....ச்சே வெட்கி தலைகுனிந்து நான் கடவுளிடம் கேட்டது ஒன்று தான்... (வேறேன்ன அவன் யார்கிட்டயும் சொல்லகூடாதுன்னு தான். அந்த பக்கி Msc மேக்ஸாம்...வேற வழி இல்லாம இந்த வேலைக்கு வந்துதாம். அப்புறமா தெரிஞ்சுகிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்) நான் நேபாள் வரை அசிங்கப்பட்டதும் அவருக்கு தெரியாது...

கடந்த முறை விடுமுறையில் மதுரைக்கு வைகை பாசஞ்சரில் செல்லும் போது, எதிரே அமர்ந்திருந்த பார்க்க அழகான கிராமத்து பெண்ணாக தாவணியில் இருந்தவளோடு பேச்சு கொடுத்து, அவளிடம் அடிக்கடி ஆங்கிலத்தில பேசி பின்பு "ஸாரி அதுக்கு டமிழ்ல என்ன"ன்னு கேட்கும் போதெல்லாம் சிரித்த முகமாக பதிலளித்த அவள்..........என்னிடம் ஐ.ஐ.டியில் பி.டெக் படிப்பதை மட்டும் தாமதமாக சொன்ன போது வாயை திறந்து சத்தம் போட்டு அழுதது (இது கக்கூஸ்ல தான் மக்கா)....இந்த பன்னாடை டிசனருக்கு தெரியாது

இன்னும்.........இங்கு வந்த புதிதில் செவன் அப்போடு சோடா கலந்து "வொயிட் ரம்" என கொடுத்து, மறுநாள் சேட்டன்மார்கள் கலாய்த்தார்களே அதை சொல்லவா??

ஒரு இண்டர்வூயில் சராமாரியாக கேள்வி கேட்டு எதுவும் தெரியவில்லை என்றதும் அந்த ஆள் பொறுமையும் கருணையும் இழந்து அசிங்கமாக கத்தியதை சொல்லவா???

முதன் முறையாக விமானத்தில் சார்ஜா வரும் போது விமானம் திருவனந்தபுரத்தில் நின்ற போது, விமானத்தில் இருந்த 10 பேரும் இறங்கியவுடன், நானும் பெட்டியோடு இறங்க கதவருகே சென்ற போது பணிப்பெண் என் டிக்கெட்டை சரி பார்த்து சிரித்து கொண்டே நீங்கள் இங்கு இறங்ககூடாது என்று சொல்லியதை சொல்லவா???

சொப்னாவிடம் மொட்டைமாடியில் கைப்பிடித்து காதல் சொல்லி கன்னத்தில் அறை வாங்கியதை சொல்லவா??

பின்னால் அப்பா வந்து நிற்பது தெரியாமல் நடுஇரவில் கலர் படம் (நீலநிறம்தானுங்க..) பார்த்து, அட்வைஸ் என்ற பெயரில் "தப்பில்ல...ஆனா தப்பு" என்று மொக்கை போட்டு நான் அசிங்கப்பட்டதை சொல்லவா??

எதை சொல்வது?? எதை விடுவது??? நான் ஏன் தவறுகள் செய்தேன்??? ப்ளாக்கர் ஆரம்பித்தது என் தவறா? இல்லை எழுதி ஒரு போஸ்டும் ஹிட் ஆகாதது என் தவறா? நன்றாக எழுதி என் ஆர்வத்தை தூண்டியது அவர்கள் தவறா?? அல்லது அவ்வாறு எழுத எனக்கு அறிவை கொடுக்காத ஆண்டவன் தவறா??(எவன் டா அவன் சிரிக்கிறது??பிச்சுபுடுவேன் பிச்சு). மொக்கைகளை அறிமுகம் செய்த குசும்பனின் தவறா?? இல்லை இண்டெர்நெட் கனெக்சன் கொடுத்த கம்பெனி தவறா?? யார் தவறு?????????????????

கடைசியாக ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.....

"ஹலோ எப்படி இருக்கீங்க...என்ன நேத்து அசிங்கப்படுத்துறதுக்கு வரேன்னீங்க..ஆளேயே காணோம்?"

Friday, April 3, 2009

நடிகர்களுக்கு ஆப்பு வைக்க கைப்புள்ளையின் "OACF"

"இதெல்லாம் சரியா வருமா?" அபிஅப்பா.

"முடியும் நாம நினைச்சா இத செஞ்சு காமிக்கலாம்" கைப்புள்ள

"ஆமா, எல்லோரும் யார் பூனைக்கு மணிகட்டுறதுன்னு விட்டுட்டா எப்படி?. அதுனால் நாம செஞ்சு தான் ஆகனும்" தேவ்

"ஆமா இந்த ஆப்ரேஷனுக்கு என்ன பேர் வைக்கலாம்?" வெட்டிப்பயல்

"என்னது ஆப்ரேஷனா??? வேணா நம்ம புரூனே சாரை கூப்பிடலாமா?" குசும்பன்

"உன் குசும்புதனத்தை இங்க காட்டாதே. நாம சீரியஸா பேசிகிட்டிருக்கோம். இதுக்கு பேரு (O)ACF" கைப்புள்ள.

"என்னங்க இது! கான்செப்ட் தான் அந்த படத்திலயிருந்து சுட்டோம்னா...தலைப்புமா சுடனும்? வேணா கீழ அவரோட லின்ங் போட்டுடலாம். இல்ல நன்றி "ரமணா பட டீம்"ன்னு போடலாம். ஏன்னா அடுத்தவங்க படைப்பை எடுக்க கூடாது" ஒரு வித சோகத்துடன் வெட்டிபயல்.

"உன் சோகம் உனக்கு....ஆனா அதெல்லாம் இல்ல இது, "Over Acting Corruption Force" ,அதாவது படு மொக்கையா நடிக்கிறவங்களை பத்து பேர கடத்தி அதுல ஒருத்தர மட்டும் செலக்ட் செஞ்சு அவுங்க நடிச்ச படத்தையே திரும்ப திரும்ப போட்டு காமிச்சு கொல்லனும்" கைப்புள்ள

"அய்யய்யோ அப்படினா ஒட்டு மொத்த தமிழ் நடிகர்களையெல்லாம் கடத்தனும் போல..." குசும்பன்

"இல்ல குசும்பா முதல் பத்து பேர மட்டும் தான் கடத்த போறோம். அப்பதான் ஒவ்வொருத்தனும் நல்லா நடிக்க தொடங்குவான்" கைப்ஸ்

"நடிகன மட்டும் கடத்தினா போதுமா?" நாமக்கல் சிபி.

"இப்போதைக்கு நடிகன் மட்டும் தான், பின்னால நடிகைகள், டைரக்டர் அப்படின்னு அது நீளும்." கைப்ஸ்

"முதல்ல நடிகைகளை கடத்தலாமே. நயன் தாராவை முதல்ல கடத்தலாம்" இது சிபி.

"இல்லையா பின்ன...நம்பர் 1 மொக்க நடிகையாச்சே" குசும்புடன் குசும்பன். சிபி முறைக்கிறார்

"அதெல்லாம் அடுத்த மாசம் வர்ர அட்லாஸ் வாலிபர் பார்த்துப்பார். இப்போ இந்த பதிவே கொஞ்சம் பெருசு. இப்போதைக்கு நடிகர் மட்டும் தான்" கைப்ஸ்

"லிஸ்ட் ரெடியா" ராம்

"ம்ம்.. விஜயகாந்த், சரத்குமார்,அஜீத்,விஜய், விசால், ரித்தீஷ், சிம்பு, தனுஷ், ஷக்தி, சுந்தர்.சி" கைப்ஸ்

"எங்கள் தானக தலைவர் "ரித்திஷ்"ஐ மொக்கை நடிகர் லிஸ்டில் சேர்த்ததுக்கு நான் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன்" புலி

"ரித்தீஷ மட்டும் நீக்கிடலாமா" பயத்துடன் அனைவரும்.

"என்ன பொருத்தவரைக்கும் சட்டம் எல்லாருக்கும் ஒன்னு தான். பாசம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்" கலங்கிய கண்களுடனும் கூடவே விறைப்புடன் கைப்ஸ்

"ஆமா கோபி நீ எதுவுமே சொல்லல...ஏதாவ்து சொல்லு.......................இப்ப எதுக்கு ஸ்மைல் பண்ற? ஏதாவது பேசு" அபி அப்பா

"ரீப்பிட்ட்ட்ட்ட்டே" கோபி

"சுத்தம் இதுக்கு கேட்காமலேயே போயிருக்கலாம்" என்று கப்பி சொல்ல அனைவரும் கலைகின்றனர்.

முதலில் கைப்ஸ், வெட்டி, அபிஅப்பா, சிபி, குசும்பன் அனைவரும் விஜயகாந்தை கடத்த அவர் வீட்டின் அருகே போய் நிற்கின்றனர்.

"என்னங்க இவ்வளவு பெரிய சுவரா இருக்கு, எப்படி எகிறி குதிக்க போறோம்?" அபிஅப்பா

"அண்ணே பெரிசா இருந்தா தான் சுவரு...சிறுசா இருந்தா அது படிகட்டு" குசும்பன்

"என்ன குசும்பா நக்கலா...இரு ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்" அபிஅப்பா

"என்ன பண்ண போறீங்க?? இரண்டு மூட்டை சிமெண்ட் பொட்டலம் வாங்கி கொடுக்குறேன். அந்தா அங்க இருக்குற ஓட்டைய அடைக்கிறீகளா?" குசும்பு

"டேய் வேணாம்... என்னைய பத்தி உனக்கு தெரியாது... இந்த சுவரு வாசத்தை வச்சே எத்தனை மூட்டை சிமெண்ட் யூஸ் பண்ணியிருக்காங்கன்னு சொல்லுவேன். வேணா இப்ப பாரு... இதுல இருபது மூட்டை சிமெண்ட் யூஸ் பண்ணியிருக்காங்க" அபிஅப்பா

"அண்ணே அது சுவர்ல இருந்து வர்ர மூத்தர வாடைண்ணே" என்றபடி சிரிக்கிறார் குசும்பன்

"இவன் இப்படி பேசிகிட்டே இருந்தான்னா நான் விளையாட்டுக்கு வரல" அபிஅப்பா

"என்னது விளையாட்டா? ஏய் சிங்கங்களா நாம விளையாட வரல..கிட்நாப் பண்ண வந்திருக்கோம்" கவலையுடன் கைப்ஸ்

"இதுக்குதான் அப்பவே நயந்தாராவை........."சிபி

"அடப்பாவி அடங்க மாட்டயா நீயி...யாராவது உள்ள போறதுக்கு ஐடியா சொல்லுங்கப்பா" வெட்டிபயல்


குசும்பன் கண்ணசைக்க வெட்டிபயல் தீபாவெங்கட்டின் போட்டாவை கீழே போட...அபிஅப்பா ஐய் தீபா என்றபடி குனிய..சட சட வென கைப்புள்ள மற்றும் குசும்பன் அவர் முதுகில் ஏறி சுவரின் அந்த பக்கம் குதித்தனர்.
வெட்டி ஏற முயற்சி செய்யும் போது அபி அப்பா உசாராகி எழ வெட்டியும், சிபியும் ஒருத்தரை ஒருத்தர் பேந்த பேந்த முழிக்கின்றனர். அபிஅப்பா டென்ஷனாகி கத்துகிறார்.

"வரட்டும் அந்த குசும்பன் எவ்வளவு தைரியம் இருந்தா அந்த போட்டாவை மண்ல போடுவான்" என்று மணலை ஊதி தொடைக்கிறார்.

அடுத்து என்ன செய்வதென்று வெட்டிபயல் யோசித்து பின்பு அபி அப்பாவிடம் ஏதோ சைகையில் பேச.... சந்தேகமான சிபி வெட்டியின் பாக்கெட்டை செக் செய்யும் போது நயன்தாரா போட்டோ கிடைக்கிறது.

"அடப்பாவி அடுத்து நான் தான் பலியா....டேய் தலைவி போட்டாவை கீழ போட்டு கேவலப்படுத்த வேணாம். அதை குடு நானே குனியிறேன்" என்கிறார் சிபி.

அதற்குள் சுவரின் அடுத்த பக்கத்தில் குசும்பனும், கைப்ஸூம் கயிறை வீச அதை பிடித்து அனைவரும் மேலே செல்கின்றனர்.

"அண்ணே என்ன ஒரே இருட்டா இருக்கு?" சிபி

"வரோம்ன்னு லெட்டர் போட்டுட்டா வந்திருக்கோம்" குசும்பன்

"அய்யய்யோ ஒரு நாய் வேகமா ஓடி வருது பாருங்க..கடிக்க போகுது" பயத்தில் அலறுகின்றனர்.

வந்த நாய் சுவற்றில் ஒரு கால் வைத்து இன்னொரு காலால் வரிசையாக நின்றிருந்த அனைவரையும் உதைக்கிறது.

"ஆஹா கேப்டன் வீட்டு நாயும் கடிக்காம உதைக்குதுப்பா" என்ற படி அனைவரும் ஆளுக்கொரு பக்கம் ஓடுகின்றனர். ஓடும் போது தடுக்கி விழுகின்றனர். மயக்கமாகின்றனர்

குசும்பன் கண் முழித்துப் பார்க்கிறார். தான் கயிறால் ஒரு நாற்காலியில் கட்டி போட்டிருப்பதை உணர்கிறார்.

"ஹலோ யாருங்க..யாராவது வாங்களேன். என்னைய எதுக்கு கட்டி போட்டிருக்கீங்க" என்று கத்துகிறார்.

கதவு திறக்கும் சப்தம் கேட்கிறது. கேப்டன் உள்ளே வருகிறார்.

"டேய் நீ தானா குசும்பன்???"

"ஆ...மா"

"டேய் நீ பதிவுலகத்திற்கு வந்து இரண்டு வருஷம் ஆச்சு. இது வரைக்கும் 285 பதிவுகள் போட்டிருக்க...அதுல உன்னோட கார்ட்டூன் குசும்பு மட்டும் 55, மத்த பதிவர்களை கலாய்ச்சது 37, மொக்கைகள் 21, கவுஜ ,காமெடின்ற பேர்ல கடுமையா மொக்க போட்டது 17+14=31, இது தவிர அய்யனார வச்சு 10 மொக்க போட்டிருக்க, பெண்ணீயம், ஜொள்ளு, கதைன்னு மாத்தி மாத்தி டார்ச்சர் கொடுத்திருக்க. இதுல உனக்கு கோவம்ன்ற லேபிள்ல வேற பதிவு போட்டிருக்க...இப்ப ஸ்டார் ஆயி தொல்லை கொடுக்குற.." என கொஞ்சம் கேப்பு விட

"அய்ய்ய் நீங்க என் ப்ளாக்கர் follower list ல இருக்கீங்களா?? உங்க பின்னூட்டத்தை நான் பார்த்ததே இல்ல. உங்க லின்ங் கொடுங்க. நான் வந்து மீ த ஃபர்ஸ்ட் போடுறேன்" ஐஸ் வைக்கிறார் குசும்பன்

"டேய் இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் வேணாம்..நேத்து எதுக்குடா என் வீட்டுக்கு வந்த.."

"அது வந்து...ஒரு ஆட்டோகிராப் வாங்கிட்டு உங்க கூட போட்டோ எடுத்துகலாம்ன்னு..."

உள்ளங்கையில் லேசாக எச்சில் துப்பி குசும்பன் நெத்தியில் ஒரு தட்டு தட்டுகிறார். "ங்கொய்யால..டேய் என் நாட்டுல மட்டும் இல்லடா என் வீட்டுலையும் அந்நிய சக்தி நுழைய முடியாதுடா. என் வீட்டுல இருந்து ஒரு பிடி மண்ண கூட அள்ள விட மாட்டேண்டா"

"ஆனா கல்யாண மண்டபத்த மட்டும் அலேக்கா அப்படியே குடுத்திருவீங்க" முனங்குகிறார் குசும்பன்

"பஹால்"ன்னு ஒரு குத்து விடுகிறார். குசும்பன் கண்ணுக்கு மூன்று விஜயகாந்த் தெரிகிறார்.

"டேய் மொக்க பதிவர்கள் பத்து பேர கடத்தலாம்ன்னு எங்க ACF டீம் திட்டம் போட்டிருக்கும் போது நீங்களா உள்ள வந்து மாட்டிகிட்டீங்க. அந்த பத்து பேருல நீ தான் டா முதல் ஆளு"

"அய்யய்யோ என்ன விட நிறைய பேரு நல்லா மொக்க போடுவாங்க...வேணா கேட்டு பாருங்கைய்யா"

"டேய் நீ போட்ட மொக்கையெல்லாம் கணக்கில எடுத்தா அவுங்கெல்லாம் ஜூஜிபிடா. அதுனால உனக்கு தண்டனையா நீ போட்ட பதிவையெல்லாம் நீ திரும்ப திரும்ப படிக்கனும்."

"அய்யய்யோ வேண்டாம் என்னைய விட்டுருங்க. அதுக்கு என்னை கொன்னேபுடுலாம். என் பதிவை மட்டும் படிக்கசொல்லாதீங்க. ப்ளீஸ்ஸ்ஸ்"

"இவண் கண்ணுல விளக்கெண்ணைய ஊத்துங்கடா. இவன் கண்ணு முழுச்சு விடாம எல்லா பதிவையும் படிக்கனும். பதிவ படிச்ச பின்னால கேள்வி கேளுங்க. கரெக்டா படிச்சானான்னு தெரியனும்." என்று தனது அல்லக்கையிடம் சொல்லிவிட்டு கேப்டன் புறப்படுகிறார்.

குசும்பன் கதறி கதறி அழுதுகொண்டே சத்தம் போட்டு படிக்கும் சத்தம் மட்டும் கேட்டுகொண்டே இருக்கிறது.......

Thursday, April 2, 2009

தல, தேவ் மற்றும் இளாவுக்கு ஒரு மனம் திறந்த மடல்

அன்புள்ள தல கைப்புள்ள, போர்வாள் தேவ் மற்றும் விவசாயிஇளா ஆகியோருக்கு சங்கத்து சிங்கங்கள் சார்பா நாமக்கல் சிபியின் மனம் திறந்த மடல்.

வ: மோகன்ராஜ் (எ) கைப்புள்ள,

தல! வருத்தப் படாத வாலிபர் சங்கம் னாலே கைப்புள்ளைதான்! கைப்புள்ள என்றதும் மத்தவங்க மனசுல ஞாபகம் வரது அந்த வருத்தப் படாத வாலிபர் சங்கமும் தல வாங்கும் ஆப்புகளும்தான்! அப்படிப்பட்ட தலக்கு இன்னைக்கு ஒரு நல்ல சேதி சொல்லப் போறோம்னு நினைச்சி மனசுக்குள்ள எவ்ளோ சந்தோஷமா இருக்குது தெரியுமா தல!

அட! ஆணி பிடுங்குற அவஸ்தைல நீ வேணா மறந்திருக்கலாம் தல! சங்கத்த வெச்சி பிழைப்பு ஓட்டுற நாங்க மறங்க முடியுமா? ஆமா தல! சங்கம் ஆரம்பிச்சி ஒத்தோட மூணு வருஷம் முடிஞ்சிடுச்சு தல்!

மூணு வருஷமும் மத்தவங்களுக்கு வந்த ஆப்பைக்கூட தானா வந்து தாங்கிகிட்டு "ரொம்ப நல்லவன்"னு பேரெடுத்தியே தல! உனக்கு இந்த நேரத்துல நன்றி சொல்ல நாங்களெல்லாம் கடமைப்பட்டிருக்கோம் தல!

தல! நீ என்னென்னிக்கும் இதே மாதிரி மத்தவங்களுக்காகவாச்சும் எங்களை எப்பவும் சிரிக்க வைச்சி அழகு பார்க்கவாச்சும் நீ 1000 வருஷம் அதே கெத்தோட வாழணும் தல!

வ: போர்வாள் தேவ்
தேவ்,
சங்கம் ஆரம்பிச்ச நாளில் இருந்து சங்கத்தைப் பத்தி யாராச்சும் நாக்கு மேல பல்லு போட்டு பேசினா டெரரா ஒரு அறிக்கை விட்டு அறிக்கை விட்ட ஆசாமிகளை டரியலாக்கி நம்ம தலகிட்ட சரண்டர் ஆக வைக்கிற திறமையும், நம்பிக்கையும், கம்பீரமும் உள்ள ஒரு நீதான் தேவ்!

தல! தன் கொள்கைய விட்டுக்கொட்டுக்காம பார்டரைத் தாண்டி உள்ளே போயி கட்டத்துரையோட கை கால வாங்காம இருக்கணும்னு கட்டதுரையைக் காப்பாத்த பார்டர் தாண்டி நீ போன காட்சி இன்னும் எங்க கண்ணுக்குள்ள இருக்குது தேவ்!

இன்னிய தேதிக்கு சங்கத்தோட மூணாவது வருஷத்தை கிராஸ் பண்ணப் போறோம்! பார்டர் கிராஸ் பண்ணி தலயைக் காப்பாத்தின உன்னை இன்னிக்கு ஞாபகப் படுத்தலைன்னா எப்படி தேவ்?

தேவ்! நீயும் இன்று போல என்னிக்கும் நல்லா இருக்கணும் தேவ்!

ச: விவசாயி (எ) இளா

வயல்ல சாகுபடி பாத்திருக்கோம்! வயலும் வாழும்ல கேள்விப்பட்டிருக்கோம்! ஒரு வாழும் கடலை சாகுபடியை சங்கத்துக்கு அறிமுகப் படுத்தினதே நீதானே விவ்ஸ் இளா! நீ இல்லாட்டி சங்கம் புரடக்ஷன்ல விவாஜு தி பாஸ்னு ஒரு படம் எடுத்திருக்க முடியுமா? டெக்னிக்கல் விஷயங்கள் எவ்வளவு எங்களுக்கு கத்து கொடுத்திருக்கே!

அப்படித்தான் பாஸ் ஆப்படிப்பாங்க! அதையெல்லாம் பார்த்தா ஆணி பிடுங்க முடியுமா ன்னு தலக்கு தைரியம் கொடுக்குறது யாரு!
இந்த மூன்றாமாண்டு நிறைவு நாள் வரும்போது உன்னையெல்லாம் பெருமைப்படுத்தி சொல்லாட்ட்டி எங்க கட்ட வேகுமா இளா?

இன்று போல என்றும் வாழணும் இளா!

மற்றும் நம்ம சங்கத்து சிங்கங்கள், புலிகள் அனைவரையும் மனமார நினைவுகூர்ந்து என் மனம் திறம்த மடலை இத்தோட முடிச்சிக்கிறேன்

Wednesday, April 1, 2009

அட்ரா சக்கை..அட்ரா சக்கை..

"ஐயா இந்த மாசம் நம்ம க்ளைண்ட் ஆஸ்திரேலியாவில மீட்டிங் வச்சிருக்காரு. என்ன டேட் குடுக்கலாம்?"

"அந்த மீட்டிங்க மே மாசத்தில வைக்க சொல்லு"

"ஐயா அதுனால நமக்கு பல கோடி லாஸ் ஆகும்"

"பரவாயில்லை...அடுத்து வேறென்ன?"

"நம்ம சிங்கப்பூர் டிவிசன்ல ஏதோ ஒரு ப்ராஜெக்ட்ல பெரிய டவுட்டாம். உங்களை வரச்சொல்லி கடந்த இரண்டு மாசமா கூப்பிட்டிட்டுருக்காங்க. அங்க அப்பாயிண்ட் மெண்ட் கொடுத்திடலாம?"

"யோவ் அவனுக்கெல்லாம் இப்ப என்ன அர்ஜெண்ட்? அந்த ப்ராஜெக்ட ஹோல்ட் பண்ணச் சொல்லு."

"அப்ப ரெஸ்ட் எடுக்கனும் கேரளாவுக்கு போய் நயன் தாரா கையால மசாஜ் பண்ணனும்னு சொன்னீங்களே. அவுங்களும் வில்லு படத்துக்கு பிறகு ப்ரீ தானாம். இந்த மாசம் புக் பண்ணிடலாமா?"

'நயன் தாரா இனிமே எப்பவுமே ப்ரீ தான்யா, அதுக்கென்ன அர்ஜெண்ட். இப்ப வரமுடியாதுன்னு சொல்லுய்யா"

"அப்ப ஊருக்கு போலாமா? அம்மா வேற, போன வருஷம் நீங்க அம்பத்தூர் போறேன்னு வீட்ல இருந்து கிளம்புனீங்களாம். அதுக்கப்பறம், வியாசர் பாடி, காசிமேடு, அயோத்திகுப்பம், தண்டையார்பேட்டை, மணலி, இப்ப எண்ணூர் வரைக்கும் வீட்டுக்கே போகாம பிஸினஸ், பிஸினஸூன்னு உலகத்தை சுத்தி சுத்தி வந்து உடம்ப கெடுத்துகிறீங்களாம். சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொன்னாங்க"

"அம்மாவுக்கு வேற வேலையே இல்ல. அத விட முக்கியமான வேலை இருக்குதய்யா"

"ஏன் சார் இவ்வளவு வருத்தமா இருக்கீங்க, அதுவும் இந்த வாலிப வயசுல"

"ஹேய் யார்டா வருத்தப்படுறது........நாங்கெல்லாம்

சோன் சோன் பப்பர மிட்டாய்
சிங்கள் டீ டபுள் ஸ்ட் ராங்

எங்களுக்கே பாப்பின்ஸ் மிட்டாயா?

இதுவரைக்கும் நான் வாலிபன் தான் ஆனா இனிமே நான் "வருத்த படாத வாலிபன்"டா போய் இத ஊரு புல்லா சொல்லு. ஐயா இனி ஒரு மாசத்துக்கு எந்த அப்பாயிண்ட் மெண்டும் யாருக்கும் கொடுக்க மாட்டாரு. ஐயா சங்கத்தில அட்லாஸ் வாலிபரா இந்த மாசம் ஒரு உயர்ந்த பொறுப்புல இருக்க போறாரு. "

"இருங்கைய்யா...திடு திப்புன்னு கவிதை சொல்லிபுட்டீங்க நோட் பன்ணிக்கிறேன், இதோட 1327 கவிதை சொல்லியிருக்கீங்க, அதையெல்லாம் கூட இந்த மாசம் சங்கத்தில சமர்பணம் செஞ்சிருங்கைய்யா. இது விட்டா வேற நல்ல இடம் கிடைக்காதைய்யா. அசம்பாவிதம் நடந்தாலும் சங்கத்துக்கு தான் நடக்கும்"

"டேய் டகால்டி தலையா. சங்கத்தில மொக்கை போடலாம்டா ஆனா தற்கொலைய தூண்டுற மாதிரி எதுவும் செய்ய கூடாது. இது சங்கத்து ரூல்ஸுக்குஎதிரானதுடா. வேணா சிபி அங்கள கேளு"

"அய்யா என்னது சிபி அங்கிளா??? அப்ப இது வாலிபர் சங்கம் இல்லையா?"

"டேய் தகரடப்பா தலையா. இதெல்லாம் அரசியல சகஜம்டா. அபி அப்பாவையே வாலிபரா ஏத்துகிட்ட சங்கத்துக்கு சிபி அங்கிள் எல்லாம் ஜூஜிபிடா"

"சரி இதுல இப்போதைக்கு உண்மையான வாலிபர் நீங்க தான். இருக்குற வேலையில அதுவும் மே மாசம் அம்மாவ பார்க்க ஊருக்கு வேற போறீங்க, எல்லா ப்ரொஜெக்டையும் முடிச்சு கொடுக்கனும். இதுல சங்கத்தில எப்படி பதிவை போடுவீங்க"

"டேய் அதெல்லாம் அப்பப்ப பாத்துகலாம்டா. சங்கத்தில இருந்து கூப்பிட்டதே பெரிய விசயமுடா. இதுல பாரு.... நான் பிஸின்னு உனக்கு தெரியுது ஆனா இந்த பதிவுலகத்துக்கு தெரியாது பாரு?. அதுனால் நீ தான் இத அப்பப்ப எல்லாருக்கும் எடுத்துச் சொல்லனும் சரியா?"

"சரிங்கைய்யா.... கவிதை ஒத்தப்படலையிலே நிக்குது. இன்னும் ஏதாவது ஒன்னு சொல்லிட்டு போங்கய்யா"

"டேய் அதெப்படிடா கேட்ட உடனே கவிதை சொல்றது. இதென்ன பிரதமருக்கு எழுதுற கடிதம்ன்னு நினைச்சயா? அடிக்கடி எழுதுறதுக்கு"

"அண்ணே ப்ளீஸ்ணே.. எனக்காகண்ணே.. இரண்டு வரி இருந்தாலும் போதும்ணே, திருக்குறள் மாதிரி"

"டேய்...ச்சு"

"அண்.."

"ஹே..ச்சீ..எப்படிடா?"

"அண்ணே இரண்டு வரி...."

"சரி சொல்றேன் கேட்டுக்கோ..

கம்மாயில கடுக்கா
மிட்டாயில மிடுக்கா


(ஜாக்கிரதை....மொக்கைகள் இம்மாதம் முழுதும் தொடரும்)